அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. இந்த பிரசுரங்கள் கையிருப்பில் இல்லாவிட்டால், அதிக பிரசுரங்களைப் பெறும்படி மீண்டும் ஆர்டர் செய்வதற்குப் பதிலாக சபையில் தேங்கிக் கிடக்கும் பழைய பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் அளிப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? இதற்கு பதிலாக எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை உபயோகிக்கலாம்.
◼ மாவட்ட மாநாட்டு தேதி மாற்றம்: மே 2002, நம் ராஜ்ய ஊழியத்தில் செகந்திராபாத்தில் நடைபெறுவதாக அட்டவணையிடப்பட்ட 2002 “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாடுகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட தேதிகள்: 1) செகந்திராபாத் (ஆங்கிலம்) நவம்பர் 8-10, 2) செகந்திராபாத் (தெலுங்கு) நவம்பர் 15-17.
◼ பெங்களூரில் புதிய கிளை அலுவலக வளாகத்தை பார்வையிட வர திட்டமிடும் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் தொகுதிகள் அதை முதலாவது Bethel Office, Post Box No. 6441, Yelahanka, Bangalore 560 064, Karnataka என்ற முகவரியில் தபால் மூலம் தெரிவிக்க வேண்டியது முக்கியம். பெங்களூரிலுள்ள ஆதிவிஸ்வநாதபுராவில் அமைந்திருக்கும் பெத்தேல் வளாகத்தை பார்வையிட வரும் குழுக்களைப் பெத்தேல் அலுவலகம் கவனித்துக் கொள்ளும். பெத்தேலை பார்க்க எவ்வளவு பேர் வருவீர்கள், எந்தத் தேதியில் வருவீர்கள், எந்த நேரத்தில் வருவீர்கள் போன்ற தகவல்களை முன்கூட்டியே தயவுசெய்து எழுதுங்கள். ஆகஸ்ட் 1, 2002 தேதிக்கு முன்பு சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்படாது என்பதை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். நீங்கள் வருவதற்கு முன்பு, பெத்தேல் குடும்பங்களை சந்திக்க வருகையில் பின்பற்றப்பட வேண்டிய தகுந்த ஆடை அலங்காரத்தைப் பற்றி இந்த நம் ராஜ்ய ஊழிய இதழில் வெளிவந்துள்ள கேள்விப் பெட்டியை தயவுசெய்து மறுபார்வை செய்யவும்.
◼ ஏப்ரல்-ஜூன் 2002 இதழ் முதற்கொண்டு உருது மொழியில் விழித்தெழு! மாதாந்தர பிரதியிலிருந்து காலாண்டு பிரதியாக வெளிவரும்.
◼ FAB:FAC ஜனவரி 24, 2001 தேதியிட்ட எங்கள் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்ட விதமாக, சபை லைப்ரரியில் வைப்பதற்கு சபைகள் ஒவ்வொன்றிலும் ஒரேவொரு வீடியோ கேஸட்டை மட்டுமே ஆர்டர் செய்யலாம் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். இதை லைப்ரரி ரிக்வெஸ்ட் படிவத்தில் (S-14) “சபை உபயோகத்துக்காக” என்ற உரிய பகுதியில் குறிப்பிட்டு ஆர்டர் செய்ய வேண்டும்.
◼ கிளை அலுவலகத்தின் கையிருப்பில் இருக்கும் பிரசுரங்களின் காலாண்டு பட்டியலை எல்லா சபைகளும் பெற்றுக்கொள்ளும். புதுப்பிக்கப்பட்ட பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எல்லா சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்தப் பட்டியலை தயவுசெய்து பிளாஸ்டிக் உறையில் போட்டு பிரசுர இலாக்காவுக்குப் பக்கத்தில் வையுங்கள். சமீபத்திய பிரசுரப் பட்டியலில் உள்ள பிரசுரங்கள் மட்டுமே ஆர்டர் செய்யப்படுவதை ஊழிய கண்காணியும் செயலரும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். கிளை அலுவலக கடிதத்தின் மூலம் அல்லது நம் ராஜ்ய ஊழியத்தின் மூலம் அறிவிக்கப்பட்டால் தவிர பிற பிரசுரங்களுக்கு தயவுசெய்து ஆர்டர் செய்ய வேண்டாம்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு II —தெலுங்கு, ஹிந்தி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் —ஆங்கிலம்
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் —நேப்பாளி
யெகோவா—யார்? (துண்டுப்பிரதி எண் 23) —உருது