ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 8-ல் துவங்கும் வாரம்
13 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஏப்ரல் 22-ல் துவங்கும் வாரத்தில் ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிப்பதற்கு வசதியாக இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற ஆங்கில வீடியோவை பார்த்து வரும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 8-லுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி ஏப்ரல் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் ஏப்ரல் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிக்கும் இரண்டு தனித்தனி நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும், ‘எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது’ என சம்பாஷணையைத் தொடரவிடாமல் நிறுத்துபவர்களிடம் என்ன சொல்வது என்பதை நடித்துக் காட்ட சொல்லுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 18-19-ஐக் காண்க.
12 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: ‘யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்.’a கேள்வி பதில் கலந்தாலோசிப்புக்குப் பிறகு தங்கள் ஊழியத்தை எப்படி விரிவுபடுத்தி இருக்கிறார்கள் என்பதை அறிய ஓரிரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 157, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: பயனியர்கள் தொடர்ந்து மற்றவர்களுக்கு உதவுகிறார்கள். ஒரு சபை புத்தகப் படிப்பு கண்காணி, ஒரு பயனியர், ஒரு பிரஸ்தாபி ஆகியோருடன் ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. செப்டம்பர் 1998 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ல் பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவுதல் பகுதியை ஊழியக் கண்காணி மறுபார்வை செய்கிறார். பிறகு, அத்திட்டத்தில் அவர்கள் ஒவ்வொருவருடைய பங்கையும், அதன் நோக்கம் வெற்றி பெறுவதையும் பற்றி கலந்தாலோசிக்கிறார். அந்தத் திட்டம் பலன் தருவதற்கு என்ன செய்யப்பட்டிருக்கிறது? ஊழியத்தில் யாருக்கெல்லாம் உதவி தேவையோ அவர்கள் தன்னிடம் தெரிவிக்கும்படி ஊழியக் கண்காணி பிரஸ்தாபிகள் அனைவரிடமும் சொல்கிறார். முன்பு உதவி பெற்றவர்களையும், ஊழியத்தின் மற்றொரு அம்சத்தில் முன்னேற உதவியைப் பெறும்படி மீண்டும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
20 நிமி: “முழுநேர ஊழியம் தரும் சந்தோஷங்கள்.”b விடுமுறை மாதங்களில் துணைப் பயனியர் செய்ய இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 199, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஒரு சகோதரி ஏப்ரல் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் ஓர் உதவி ஊழியர் மே 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்ட சொல்லுங்கள். ஒவ்வொரு நடிப்புக்கும் பின்பு வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டிய ஓரிரு ஆரம்ப வாக்கியங்களை மீண்டும் குறிப்பிடுங்கள்.
10 நிமி: நேரத்தோடு வாருங்கள்! பேச்சு. நம்முடைய வணக்கத்தோடும் ஊழியத்தோடும் சம்பந்தப்பட்ட காரியங்கள் முக்கியமானவை. அவற்றிற்கு ‘குறிக்கப்பட்ட நேரத்தை’ ஒதுக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறது. (பிர. 3:1, NW) கடவுளுக்கு சேவை செய்வதற்கான ஏற்பாடுகளிலிருந்து முழுமையாய் பயனடைய நாம் விரும்புகிறோம். சபைக் கூட்டங்களும், வெளி ஊழியத்திற்கான கூட்டங்களும் உரிய நேரத்தில் சரியாக தொடங்க வேண்டும். தம்முடைய காரியங்களை செயல்படுத்த யெகோவா ஒருபோதும் தாமதிப்பது கிடையாது. (ஆப. 2:3) இதில் நாம் முன்னேற்றம் செய்ய வேண்டுமா? தவிர்க்க முடியாத காரணத்தால் அவ்வப்போது சிலர் தாமதிக்கலாம். ஆனால் நேர்த்தியாக காரியங்களை ஒழுங்கமைக்கையில், வழக்கமாகவே கூட்டத்தின் ஆரம்ப பாட்டும் ஜெபமும் முடிந்த பின்பு அல்லது வெளி ஊழியத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடிக்கப்பட்ட பின்பு நாம் தாமதமாக வரும் அவசியம் இருக்காது. அனைத்து ஆவிக்குரிய காரியங்களுக்கும் நேரங்காலத்தோடு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி, நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வதற்கு உதவும் நடைமுறையான வழிகளை கலந்தாலோசியுங்கள்.—ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, 1990, பக்கம் 29-ஐக் காண்க.
25 நிமி: “உற்சாகமான வரவேற்பு!”c பாரா 1-ஐக் கலந்தாலோசிக்கையில் இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற வீடியோவைப் பற்றி தங்கள் கருத்துக்களை சுருக்கமாக சொல்லும்படி சபையார் சிலரிடம் கேளுங்கள். அதன் பின் பாராக்கள் 2-7-லுள்ள ஒவ்வொரு கேள்வியையும் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். நம் சகோதர கூட்டுறவு என்ற ஆங்கில வீடியோவை ஜூன் மாதம் கலந்தாலோசிப்போம்.
பாட்டு 191, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாத ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள்.
15 நிமி: “ஜீவனைக் காக்க உதவும் ராஜ்ய பிரசங்கிப்பு!”d வசனங்களை எப்படி பொருத்தலாம் என சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை உபயோகித்து ஆராய்ச்சி செய்தல். சபையாருடன் கலந்தாலோசிப்பு. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் “முக்கிய பொருள்கள்” (பக்கங்கள் 5-6) என்பதன்கீழ் பட்டியலிடப்படாத பொருள்களின் பேரில் ஊழியத்தில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. “பொருளடக்க அட்டவணை” (பக்கங்கள் 439-47) நம் நம்பிக்கைகளுக்கான பைபிள் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது. நேரெழுத்தில் உள்ள வார்த்தைகளை உபயோகித்து அந்த அட்டவணையில் பின்வரும் கேள்விகளுக்கு பதில்களை கண்டுபிடிக்கும்படி சபையாரிடம் சொல்லுங்கள்: தேசிய கீதங்கள், கொடிகள் சம்பந்தமாக ஒரு கிறிஸ்தவரின் கருத்து என்ன? கடவுள் ஏன் இயற்கை விபத்துக்களை அனுமதிக்கிறார்? விவாகரத்தைப் பற்றிய பைபிளின் கருத்தை நீங்கள் எப்படி விளக்கலாம்? சில சமயங்களில் சகோதரிகள் ஏன், எப்போது முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும்? தாய்மார்களின் நாள் எப்படி தோன்றியது? 1,44,000 என்பது பைபிளில் சொல்லர்த்தமான எண் என்பது நமக்கு எப்படி தெரியும்? ஐசுவரியவானும் லாசருவும் பற்றிய உவமை எதை அர்த்தப்படுத்துகிறது? ஊழியத்தில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை உபயோகிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 28, முடிவு ஜெபம்.
மே 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: வேலைக்கு போகையில், விடுமுறையைக் கழிக்க செல்கையில், அல்லது சாட்சியாக இராத உறவினர்களைச் சந்திக்கையில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த அனுபவத்தைப் பற்றி சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
10 நிமி: “காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து தொடர்ந்து பயனடையுங்கள்.” சபையாருடன் கலந்துரையாடல்.
25 நிமி: “ஆவிக்குரிய பலமிக்க குடும்பங்கள்—எப்படி?”e இந்தக் கட்டுரையைக் கலந்தாலோசித்த பின்பு காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1999, பக்கங்கள் 10-12-லுள்ள சில நடைமுறையான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
பாட்டு 17, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.