ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 11-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஆதியாகமம் 6:1 முதல் 9:19 வரை வாசித்து அல்லது மறுபார்வை செய்து, பிப்ரவரி 25-க்கான ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவிருக்கும் நோவா—கடவுளோடு சஞ்சரித்தார் என்ற ஆங்கில வீடியோவை பார்த்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்து.”a (பாராக்கள் 1-13) நடத்தும் கண்காணி கையாள வேண்டும். மார்ச் மாதத்திலும் அதற்கு பிறகும் எதை சாதிக்க விரும்புகிறோம் என்பதை பற்றிய உற்சாகமூட்டும் கலந்தாலோசிப்பு. மார்ச் மாதம் ஊழியத்தில் கூடுமானவரை அதிகமாக பங்குகொள்ள நடைமுறையான அட்டவணையை தயாரிக்க வேண்டும்; அதற்காக உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள காலண்டரை அனைவரும் உபயோகிக்க வேண்டும். அந்த மாதம் பயனியர் செய்ய முடிந்த அனைவரையும் அதில் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். பாராக்கள் 7, 8-ஐ சிந்திக்கையில் கடந்த வருட நினைவு ஆசரிப்பு காலத்தில் பயனியர் செய்ததால் கிடைத்த பலன்களைப் பற்றி கூறும்படி சபையாரிடம் கேளுங்கள். இந்தக் கூட்டத்திற்கு பிறகு துணைப் பயனியர் விண்ணப்பங்கள் கிடைக்கும் என்பதை அறிவியுங்கள்.
13 நிமி: “பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது.” நம் ராஜ்ய ஊழியத்தில் வரும் இந்த அம்சம், கடினமான காலங்களின் வருத்தகரமான நிகழ்ச்சிகளோடு கட்டுரைகளை நல்லவிதமாக இணைத்துப் பேச ஆயத்தமாயிருக்க எவ்வாறு உதவியது என்று பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள். மக்களுக்கு ஆறுதல் அளிப்பதிலும் மனதை உறுத்தும் கேள்விகளுக்கு பைபிள் அடிப்படையிலான பதில்களை காண உதவுவதிலும் சிலருக்கு என்ன அனுபவங்கள் கிடைத்துள்ளன? பிப்ரவரி 8, விழித்தெழு!-வையும் பிப்ரவரி 15, காவற்கோபுரத்தையும் அளிப்பதைப் பற்றிய இரண்டு சுருக்கமான நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 49, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி: “எதையாகிலும் சேர்த்து வையுங்கள்.” சபையார் கலந்தாலோசிப்பு. தாராள குணத்தோடு உலகளாவிய வேலையை ஆதரிப்பதற்காக சபையாரைப் பாராட்டுங்கள்.
25 நிமி: “தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்து.”b (பாராக்கள் 14-23) ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். மார்ச் மாதம் அதிகளவு ஊழியத்தில் ஈடுபட உள்ளூரில் செய்யப்படும் விசேஷித்த திட்டங்களை மறுபார்வை செய்யுங்கள். அந்த மாதத்திற்காக திட்டமிடப்பட்ட வெளி ஊழிய கூட்டங்களுக்கான முழு அட்டவணையையும் குறிப்பிடுங்கள். செயலற்றவர்களை மீண்டும் செயல்பட தூண்டுவதற்கும், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக தகுதி பெறுவதற்கு பிள்ளைகளுக்கும் பைபிள் மாணாக்கர்களுக்கும் உதவுவதற்கும் அதிக கவனம் செலுத்துங்கள். மார்ச் மாதத்தில் துணைப் பயனியர் செய்ய விண்ணப்பித்திருப்போரின் பெயர்களை அறிவியுங்கள்; இன்னும் அதிகமானோர் அவர்களோடு சேர்ந்துகொள்வதை பற்றி ஜெபத்தோடு சிந்தித்து பார்க்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 143, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 25-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி 8, விழித்தெழு!-வையும் மார்ச் 1, காவற்கோபுரத்தையும் பயன்படுத்தி, இரண்டு சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை நடித்துக் காட்டுங்கள். அவற்றில் ஒன்றை ஓர் இளைஞர் செய்யட்டும். பிப்ரவரி மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்க பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: “சாட்சி கொடுக்கும் வீடியோக்களால் வரும் நன்மைகள்.” சபையார் கலந்தாலோசிப்பு. இதுவரை ஊழிய கூட்ட நிகழ்ச்சிகளில் சொஸைட்டியின் எட்டு வீடியோக்களை மறுபார்வை செய்திருக்கிறோம். கட்டுரையில் உள்ள உதாரணங்களை சுருக்கமாக சிந்தித்த பிறகு, இந்த வீடியோக்களை மற்றவர்களுக்கு காண்பிப்பதில் என்ன வெற்றிகளை கண்டனர் என்பதை பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள்.
15 நிமி: “நோவா—கடவுளோடு சஞ்சரித்தார் வீடியோவிலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.” எந்த அறிமுகமுமின்றி நேரடியாக, இந்த பக்கத்திலுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை மட்டுமே உபயோகித்து நோவா வீடியோவை சபையாரோடு கலந்தாலோசியுங்கள். ஏப்ரலில் இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களை பெறுவது எப்படி? என்ற ஆங்கில வீடியோவை பார்ப்போம்.
பாட்டு 215, முடிவு ஜெபம்.
மார்ச் 4-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
12 நிமி: “பூமியில் வாழ்பவர்களிலேயே அதிக சந்தோஷமானவர்கள்.”c 1997, அக்டோபர் 15, காவற்கோபுரம், பக்கம் 6-ல் உள்ள “மகிழ்ச்சிக்கு வழிநடத்தும் படிகள்” என்பதையும் சுருக்கமாக கலந்தாலோசியுங்கள்.
12 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க அறிவு புத்தகத்தை உபயோகியுங்கள். மார்ச் மாதத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க விரும்புகிறோம். ஆகஸ்ட் 1998 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4, பாரா 8-ல் உள்ள அனுபவத்தை சுருக்கமாக விவரியுங்கள். யாராவது ஒருவர் சமீபத்தில் அறிவு புத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பித்திருந்தால் அதை எவ்வாறு செய்தனர் என்பதை நடித்துக்காட்ட சொல்லுங்கள். ஜனவரி 2002 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் உள்ள “அறிவு புத்தகத்தை அளிப்பதற்கான ஆலோசனைகள்” பற்றி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். அந்த புத்தகத்தை உபயோகித்து, “நேரடி அணுகுமுறை” என்ற தலைப்பில் உட்சேர்க்கையின் 6-ம் பக்கத்திலுள்ள ஆலோசனைகளில் ஒன்றை நடித்துக் காட்டுங்கள்.
16 நிமி: “ஏன் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும்?”d பல வருடங்களாக தொடர்ந்து பிரசங்கித்து வரும் ஓரிரு பிரஸ்தாபிகளை பேட்டி காண்பதோடு கலந்தாலோசிப்பை முடியுங்கள். இந்த ஊழியத்தை அவர்கள் ஏன் தொடர்ந்து செய்து வருகின்றனர், அதனால் என்ன பலன் கிடைத்துள்ளது என்பதை பற்றி கேளுங்கள்.
பாட்டு 223, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.