ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜனவரி 14-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி” என்ற பகுதியை கலந்தாலோசியுங்கள். அடுத்த விசேஷ மாநாட்டு தினத்தின் தேதியை குறிப்பிட்டு, முழு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும்படி அனைவரையும் உந்துவியுங்கள். புதிதாக அக்கறை காட்டுவோரையும் பைபிள் மாணாக்கர்களையும் அதற்கு அழைக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: தயவான ஏற்பாடுகளிலிருந்து பயனடையுங்கள். கிளை அலுவலகத்திலிருந்து வந்த, 2001, டிசம்பர் 1, தேதியிட்ட குறிப்புத்தாளின் அடிப்படையில் தகுதிவாய்ந்த மூப்பர் கொடுக்கும் பேச்சு. மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டைகளில் போதுமானவை சபையின் கைவசம் இருக்க வேண்டும். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவருக்கும் இந்த அட்டை கொடுக்கப்படும், ஆனால் அதை உடனே பூர்த்தி செய்யக்கூடாது. அந்த அட்டையில் கையெழுத்திடுவது, சாட்சி கையெழுத்திடுவது, தேதி எழுதுவது போன்றவை அடுத்த சபை புத்தகப் படிப்பு முடிந்த பிறகு, தேவைப்பட்டால் புத்தகப் படிப்பு நடத்துனரின் உதவியோடு செய்யப்பட வேண்டும். சாட்சி கையெழுத்திடுபவர்கள், அட்டையில் அந்த நபர் கையெழுத்திடும்போது அதை நேரில் பார்க்க வேண்டும். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள், இந்த அட்டையின் மொழிநடையைப் பின்பற்றி தங்களுடைய சூழ்நிலைக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் மருத்துவ முன்கோரிக்கை அட்டையை எழுதி வைத்துக் கொள்ளலாம். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் மருத்துவ தீர்மானங்களை முன்கூட்டியே செய்வது ஞானமானது என்பதை வலியுறுத்துங்கள். (நீதி. 14:15; 27:12) எந்தெந்த மருத்துவ முறைகளையும் மருந்துகளையும் ஏற்றுக்கொள்வோம் என்பதைப் பற்றி தெள்ளத் தெளிவாக மருத்துவ பணியாளர்களோடு முன்கூட்டியே கலந்து பேசுவது மிக மிக முக்கியம். சரியான தீர்மானங்களை செய்வதற்கு கவனமான தனிப்பட்ட படிப்பு அவசியம். 2000, ஜூன் 15, மற்றும் 2000, அக்டோபர் 15-ல் வெளியான காவற்கோபுரங்களில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரைகளிலிருந்து பொருத்தமான பாராக்களை வாசியுங்கள். மூப்பர்கள் உதவியளிக்க எப்போதும் தயார், ஆனால் மற்றவர்களுக்காக தீர்மானங்களை செய்ய முடியாது. தங்கள் தீர்மானங்களை ஆவணங்களாக எழுதி வைத்துக்கொள்வதற்கான வழிகளை விளக்குங்கள்.
10 நிமி: “பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது.” ஜனவரி 8, விழித்தெழு!-வையும் ஜனவரி 15, காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டுங்கள். பத்திரிகை தினத்தை ஆதரிக்கும்படி எல்லா பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 55, முடிவு ஜெபம்.
ஜனவரி 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
13 நிமி: நீங்கள் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்கிறீர்களா? ஒரு குடும்ப கலந்தாலோசிப்பு. தினவாக்கியத்தை கலந்தாலோசிப்பதிலிருந்து இன்னுமதிக நன்மை பெற, 1996, டிசம்பர் 15, காவற்கோபுரத்தில் பக்கம் 18, பாராக்கள் 13-14-ஐ அவர்கள் கலந்தாலோசிக்கிறார்கள். சமீபத்தில் சிந்திக்கப்பட்ட இரண்டு, மூன்று நாட்களின் தினவாக்கியத்தை சுருக்கமாக சிந்தித்து, அந்த தகவல் எவ்வாறு உண்மையிலேயே பயனளித்தது என்பதை விளக்குங்கள். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்வது, குடும்ப அங்கத்தினர்கள் ஆவிக்குரிய விதத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவதற்காக திட்டமிடப்பட்ட, தவறாமல் நடத்தப்படும் குடும்ப பைபிள் படிப்பின் பாகமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
22 நிமி: “தொடர்ந்து ராஜ்யத்திற்கே முதலிடம் கொடுங்கள்.”a 1998, செப்டம்பர் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 19-21-ல் உள்ள முக்கிய குறிப்புகளின் அடிப்படையில் சில கேள்விகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 168, முடிவு ஜெபம்.
ஜனவரி 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாதத்திற்கான ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில், ஜனவரி 8, விழித்தெழு!-வையும் பிப்ரவரி 1, காவற்கோபுரத்தையும் பயன்படுத்தி, இரண்டு சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை நடித்துக் காட்டுங்கள். பிப்ரவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பையும், சபையின் கையிருப்பிலுள்ள புத்தகங்களையும் குறிப்பிடுங்கள்.
10 நிமி: “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி.” பேச்சு. அடுத்த வட்டார மாநாட்டின் தேதியை குறிப்பிடுங்கள். பைபிள் மாணாக்கர்களை மாநாட்டிற்கு அழைக்க அனைவருமே விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். அடுத்த மாநாட்டில், யெகோவாவுக்கு செய்திருக்கும் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்துவதைப் பற்றி கவனமாக சிந்தித்துப் பார்க்க முழுக்காட்டுதல் பெறாத பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். இரண்டு நாட்களிலும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும்படி அனைவரையும் உந்துவியுங்கள்.
25 நிமி: “பெற்றோரே—சிசுப்பருவம் முதல் உங்கள் பிள்ளைகளை பயிற்றுவியுங்கள்.”b 1998, ஏப்ரல் 15, காவற்கோபுரம், பக்கம் 32-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிசுப்பருவம் முதல் பிள்ளைகளை பயிற்றுவிக்க ஆரம்பித்ததால் தாங்கள் பெற்ற நல்ல பலன்களை கூறும்படி பெற்றோரிடம் கேளுங்கள்.
பாட்டு 202, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 4-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள்.
17 நிமி: “அவர்கள் ‘எப்படிக் கேள்விப்படுவார்கள்’?”c வசனங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என சபையாரிடம் கேளுங்கள். 1998, ஆகஸ்ட் 15, காவற்கோபுரம், பக்கம் 20, பாராக்கள் 17-18-ன் கேள்விகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
20 நிமி: “வெளி ஊழியத்திற்கான மாதிரி அளிப்புகள்.” ஊழிய கண்காணி கையாளும் சபையார் கலந்தாலோசிப்பு. நம் ராஜ்ய ஊழியத்தின் பழைய பிரதிகளில் வெளிவந்த அளிப்புகளும் சில புதிய அளிப்புகளும் இந்த உட்சேர்க்கையில் உள்ளன. உள்ளூர் பிராந்தியத்தில் பலன் தருவதாக உள்ளவற்றையும், எதிர்காலத்தில் வெளிவரும் மற்ற அளிப்புகளையும் எழுதி வைக்க காலியிடங்களை நீங்கள் உபயோகிக்கலாம். அவர்கள் அதிகமாக விரும்பும் அளிப்புகள் எவை, ஏன் என சபையாரிடம் கேளுங்கள். பிப்ரவரி மாத பிரசுர அளிப்போடு உபயோகிக்க முடிந்த ஓரிரண்டு அளிப்புகளை நடித்துக் காட்டுங்கள். இந்த உட்சேர்க்கையை பாதுகாத்து வைக்கவும், ஊழியத்திற்காக தயாரிக்கையில் அடிக்கடி எடுத்து பார்க்கவும் பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 224, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.