ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஆங்கிலத்தில், புதிய உலக சமுதாயம் செயலில் என்ற வீடியோவை ஆகஸ்ட் 27-ம் தேதி துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும் அதைப் பார்த்து வரும்படி உற்சாகப்படுத்துங்கள்.
17 நிமி:ஏப்ரல் ஊழிய அறிக்கை. பேச்சையும் பேட்டிகளையும் ஊழிய கண்காணி கையாளுகிறார். நம் நாட்டின், சபையின் ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையை சிறப்பித்துக் கூறுங்கள். அம்மாதத்தில் ஊழியத்தில் முழுமூச்சாய் ஈடுபட்ட பல வித பிரஸ்தாபிகளை பேட்டி காணுங்கள். ஊழியத்தில் முழுமையாய் ஈடுபட்டதால் தாங்கள் அனுபவித்த மகிழ்ச்சியையும் ஊழியத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க என்ன செய்கிறார்கள் என்பதையும் பற்றி சொல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.—மார்ச் 2001 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் பாராக்கள் 28-30-ஐக் காண்க.
18 நிமி:“அதிகம் செய்ய விருப்பமா?”a உங்கள் பிராந்தியத்தில், வேறொரு மொழி பேசும் ஆட்களிடம் சாட்சி கொடுப்பதற்கு முன்வருவதைப் பற்றிய ஆலோசனைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஜூன் 15, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 26-9-ல் உள்ள விஷயத்தை சுருக்கமாக கூறுங்கள்.
பாட்டு 68, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 20-ல் துவங்கும் வாரம்
8 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி:“நீங்கள் ஒரு ‘வேடிக்கைக் காட்சி’!”b உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை அல்லது நடத்தை பற்றி மக்கள் சொன்ன நல்ல குறிப்புகள் ஏதாவது இருந்தால் அதை தெரிவியுங்கள்.—காவற்கோபுரம், மார்ச் 15, 1998, பக்கம் 10-ஐயும், ஜனவரி 15, 1999, பக்கம் 32-ஐயும் காண்க.
22 நிமி:“நற்பழக்கங்கள்—கடவுள் பக்தியுள்ளவர்களின் தனிப்பண்பு.” பாராக்கள் 1-5-ஐ மூப்பர் ஐந்து நிமிட பேச்சாக கொடுக்கிறார். மீதமுள்ள பாராக்களை மேடையில் மற்றொரு மூப்பருடனும் உதவி ஊழியருடனும் கலந்து உரையாடுகிறார். கூட்டங்களில் கவனம் செலுத்தவும், முழுமையாய் நன்மை பெறவும் முடியாதவாறு செய்யும், யோசனையற்ற பழக்கங்கள் சிலவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதைப் பற்றி அவர்கள் பேசுகின்றனர். பிறருடைய அக்கறைகளுக்கு அன்புடன் கரிசனை காட்டுகையில், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொள்வது உண்மையிலேயே எவ்வளவாய் உற்சாகமளிக்கும் என்பதை சிறப்பித்துக் காட்டுகின்றனர்.—பிலி. 2:4.
பாட்டு 72, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஆகஸ்ட் மாத ஊழிய அறிக்கையை கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். செப்டம்பர் மாதம் ஊழியத்தில் படைப்பு (ஆங்கிலம்) புத்தகத்தை எப்படி அளிக்கலாம் என்பதைப் பற்றி ஓரிரு ஆலோசனையை சுருக்கமாக கூறுங்கள்.—நம் ராஜ்ய ஊழியம், ஜூன் 1995, பக்கம் 4-ல் உள்ள உதாரணங்களைக் காண்க.
15 நிமி:“ஓய்வு நேரத்துக்கும் ஓர் அளவு வேண்டும்.” புத்தகப்படிப்பு நடத்துனர், படிப்பு முடிந்ததும் ஒரு தம்பதியருடன் உரையாடுகிறார். தற்போதெல்லாம் வெளி ஊழியத்திலோ வார இறுதியில் நடைபெறும் கூட்டங்களிலோ அவர்களைப் பார்க்க முடிவதில்லையே என்பதை தயவாய் குறிப்பிடுகிறார். விடுமுறை அனுபவிக்க செல்வதிலும் மற்ற வேலைகளிலுமே நேரம் போய்விடுகிறது என்பதை அந்தத் தம்பதியர் விவரிக்கின்றனர். இந்தக் கட்டுரையிலுள்ள முக்கிய குறிப்புகளை அவர்களுடன் அந்த மூப்பர் கலந்து பேசுகிறார்; ஆவிக்குரிய அக்கறைகளுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் காண்பதற்கு உதவுகிறார். சிறந்த நினைப்பூட்டுதல்களுக்காக அவர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். வருங்காலத்தில் முன்னுரிமை கொடுக்கும் விஷயத்தில் மாற்றங்களைச் செய்யப்போவதாக அவர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.—அக்டோபர் 1, 2000, காவற்கோபுரம், பக்கங்கள் 19-20-ஐக் காண்க.
20 நிமி:“புதிய உலக சமுதாயம் செயலில்—ஓர் சரித்திர கண்ணோட்டம்.” சபையார் கலந்துகொள்ளுதலும் பேட்டிகளும். கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கலந்தாலோசித்த பிறகு, அதன் ஒரிஜினல் படத்தை பார்த்தவர்கள், அல்லது 1950-களில் சர்வதேச மாநாடுகளுக்குச் சென்றிருந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களை பேட்டி காணுங்கள். அந்நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்கள் நினைவில் நிற்பவற்றையும், ஆவிக்குரிய வகையில் அவர்கள்மீது ஏற்பட்ட தாக்கத்தைப் பற்றியும், இதுவே யெகோவாவின் அமைப்பு என அவர்களுக்கு இருக்கும் உறுதி பற்றியும் சொல்லச் சொல்லுங்கள். அக்டோபர் மாதத்தில் தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல் என்ற ஆங்கில வீடியோவை நாம் மறுபார்வை செய்வோம்.
பாட்டு 74, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 3-ல் துவங்கும் வாரம்
8 நிமி:சபை அறிவிப்புகள்.
17 நிமி:“கிறிஸ்தவ கூட்டுறவு எவ்வளவு முக்கியம்?”c காவற்கோபுரம் ஜனவரி 15, 1996, பக்கம் 22-ல் காணப்படும் “சபையின் மூலமாக” என்ற உபதலைப்பிலுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
20 நிமி:ஒருவர் இவ்வாறு சொன்னால். கலந்தாலோசிப்பும் நடிப்புகளும். ஊழியத்தில் மக்கள் நாம் எதிர்பார்க்காத வகையில் எதையாவது சொன்னால், அல்லது கேள்விகளை கேட்டால், பேச்சை மாற்றுவதற்கு அல்லது உரையாடலை நிறுத்துவதற்கு மாறாக, அவற்றிற்கு பதில் சொல்ல கடினமாய் முயல வேண்டும். இவ்விஷயத்தில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் எப்பொழுதுமே உதவியாய் இருக்கும். பொதுவாக சொல்லப்படும் சில கூற்றுகளை குறிப்பிடுங்கள்; நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சில கூற்றுகளுக்கு எவ்வாறு பதில் சொல்லலாம் என்பதை பிரஸ்தாபிகள் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். உதாரணமாக: ‘எனக்குக் கடவுளில் நம்பிக்கை இல்லை.’ (பக்கங்கள் 150-1) ‘இந்த சமுதாயத்தை வாழ்வதற்கு மேம்பட்ட நலமுடைய இடமாக்குவதற்கு உதவிசெய்யும் காரியங்களைச் செய்வதில் நீங்கள் ஏன் ஈடுபடக் கூடாது?’ (பக்கங்கள் 207-8) ‘நீங்கள் எந்தச் சர்ச்சை சேர்ந்தவர்கள் என்பது உண்மையில் பெரிய காரியமல்ல.’ (பக்கம் 332) ஊழியத்தில் எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படுகையில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் இந்த அம்சத்தை பயன்படுத்த அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 121, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.