ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 9-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். சபையின் நினைவு ஆசரிப்பு எண்ணிக்கையை அறிவிப்பு செய்யுங்கள். முதன்முறையாக வந்திருந்தவர்களின் போற்றுதலான குறிப்புகளைப் பற்றி சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். ஏப்ரல் 23-ல் துவங்கும் ஊழியக் கூட்டத்தின் கலந்தாலோசிப்பிற்கு தயாரிக்கும் விதத்தில் பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி என்ற வீடியோவை பார்த்துவரும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “உங்கள் ஊழியத்தில் ‘அதிக ஆர்வத்தோடு ஈடுபடுங்கள்’”a பாராக்கள் 3-5-ல் சொல்லப்பட்டதற்கு இசைவாக மற்றவர்களுக்கு உதவியளித்ததில் பெற்ற சந்தோஷமான அனுபவங்களை இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகள் சொல்லும்படி கேளுங்கள்.
பாட்டு 80, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ஏப்ரல் மாதம் முடிவடைய இன்னும் இரண்டே வாரங்கள் மீதமிருப்பதால் அதற்குள் எல்லாரும் ஊழியத்தில் பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “2001 ‘கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்’” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.”b செயலர் நடத்த வேண்டும். முதலாவதாக சொஸைட்டி அனுப்பிய மார்ச் 15, 2001 தேதியிட்ட மாநாடு நியமன கடிதத்தை வாசிக்கவும். சொஸைட்டி சொல்வதை ஏன் அனைவரும் கவனமாய் பின்பற்ற வேண்டும் என்பதைக் காட்ட அதில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களைப் பயன்படுத்துங்கள். மாநாட்டில் மூன்று நாட்களும் கலந்துகொள்வதற்கு வசதியாக முடிந்த மட்டும் சீக்கிரத்தில் விடுப்பு எடுப்பதற்கு ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள். சொஸைட்டியின் ஏற்பாடுகளுடன் ஒத்துழைப்பதற்கு எல்லாரையும் பாராட்டுங்கள்.
20 நிமி: “எளிமையே இனிமை.”c ஜூலை 1999, நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 4-லுள்ள “நேரடியாக விஷயத்திற்கு வருவோம்!” என்ற கட்டுரையிலுள்ள கருத்துக்களையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓரிரு எளிய தலைப்புகளில் சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 146, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 23-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “முன்கூட்டியே திட்டமிடுதல்—எதற்கு?” பேச்சு. 2000, நவம்பர் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 18-21-லுள்ள பொருத்தமான குறிப்புகளையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
25 நிமி: “பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி வீடியோ மனதில் பதிய செய்தவை.” சபையாருடன் கலந்தாலோசிப்பு. சொஸைட்டியின் வீடியோக்களை நன்கு பயன்படுத்திக் கொள்வது சம்பந்தமாக 1997 இயர்புக், பக்கம் 54, பாரா 1-ல் உள்ள அனுபவத்தில் காணப்படும் ஆலோசனையை ஏன் பின்பற்றக் கூடாது? யெகோவாவின் சாட்சிகள் நாஸி தாக்குதலுக்கு எதிராக உறுதியாய் நிற்கிறார்கள் வீடியோவை ஜூன் மாதத்தில் நாம் கலந்தாலோசிப்போம்.
பாட்டு 202, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையை போடும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். புத்தகப் படிப்பு நடத்துனர்கள் தங்கள் தொகுதியிலுள்ள ஒவ்வொருவரும் அறிக்கையைப் போட்டுவிட்டார்களா என கவனிக்க வேண்டும். அப்போதுதான் மே 6-ம் தேதிக்குள் அறிக்கைகள் அனைத்தையும் தொகுக்க முடியும்.
15 நிமி: “நல்ல அயலாராக சாட்சி கொடுங்கள்.”d நம் நடத்தையின் மூலம் சாட்சி கொடுக்க முடிந்த சில வழிகளைக் குறிப்பிடுங்கள்.—1997, நவம்பர் 1, காவற்கோபுரம், பக்கம் 18, பாரா 16-ஐக் காண்க.
20 நிமி: பயனியர்கள் பிறருக்கு உதவுகின்றனர். ஊழியக் கண்காணியின் பேச்சும் பேட்டிகளும். செப்டம்பர் 1998, நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-லுள்ள பயனியர்கள் பிறருக்கு உதவும் திட்டத்தை மீண்டும் கலந்தாலோசியுங்கள். அதனால் சபை பெற்ற நன்மைகளை குறிப்பிடுங்கள். இப்படிப்பட்ட உதவியை பிரஸ்தாபிக்கு அளித்த பயனியரையும், அதைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபியையும் பேட்டி காணுங்கள். ஊழியத்தில் இருவரும் சேர்ந்து ஈடுபட்டதால் அடைந்த பயனை குறிப்பிடுங்கள். வரவிருக்கும் மாதங்களில் இந்த ஏற்பாட்டை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ளும்படி மற்றவர்களுக்கும் அழைப்பு விடுங்கள்.
பாட்டு 216, முடிவு ஜெபம்.
மே 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “கடவுளால் எல்லாம் முடியும்.”e அறிவிப்பாளர் ஆங்கில புத்தகத்தில் பக்கம் 443-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி 1935-ல் எந்தளவுக்கு பிரசங்கிக்கப்பட்டது என்பதை சமீபத்திய இயர்புக்கிலுள்ள அறிக்கையுடன் ஒப்பிட்டு சுருக்கமாக சொல்லுங்கள். இந்த மாபெரும் விஸ்தரிப்பு ஒரு காலத்தில் எப்படி முடியாததாக தோன்றியது என்பதைக் குறிப்பிடுங்கள்.
20 நிமி: நம்முடைய குடும்பம் எப்படி பரிசுத்தத்தை செயலில் காட்டலாம்? மூப்பரும் அவருடைய குடும்பத்தாரும் 1996, ஆகஸ்ட் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 17-20-ல் உள்ளவற்றை கலந்தாலோசிக்கின்றனர். வீட்டில், உறவினர்களுடன் இருக்கையில், சபையில், அக்கம்பக்கத்தில், பள்ளியில், வேலை செய்யுமிடத்தில் எப்படி பரிசுத்தத்தை வெளிக்காட்டலாம் என்பதற்கான வழிகளை கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 70, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.