உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/00 பக். 2
  • டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
  • துணை தலைப்புகள்
  • டிசம்பர் 11-⁠ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 18-⁠ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 25-⁠ல் துவங்கும் வாரம்
  • ஜனவரி 1-⁠ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 12/00 பக். 2

டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்

டிசம்பர் 11-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 50

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். மிகப் பெரிய மனிதர் அல்லது பெரிய போதகர் புத்தகங்கள் சபையில் இருந்தால், விடுமுறை காலத்தில் அவற்றை எவ்வாறு ஊழியத்தில் நன்கு பயன்படுத்தலாம் என்று காட்டுங்கள். டிசம்பர் 25-⁠ல் துவங்கும் வாரத்தில், பைபிள்​—⁠திருத்தமான சரித்திரம், நம்பத்தக்க தீர்க்கதரிசனம் என்ற வீடியோ பற்றிய கலந்தாலோசிப்பு இருப்பதால் அதை பார்த்துவரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். இந்த வீடியோவை வைத்திருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவலாம்; அல்லது தாங்கள் பார்க்கையில் அவர்களையும் அழைக்கலாம்.

15 நிமி: “எந்நாளும் யெகோவாவுக்கு பயப்படுங்கள்.”* 1998, ஜனவரி 8, விழித்தெழு!-வில் பக்கம் 26-⁠ல் காணப்படும் கடவுள் பயத்தைப் பற்றிய விளக்கக் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு பயப்படுவதால் கிடைக்கும் சிறந்த நன்மைகளை வலியுறுத்துங்கள்.

20 நிமி: “உங்கள் சகாக்களின் செல்வாக்கும் பிரசங்க சிலாக்கியமும்.” பேச்சும் பேட்டிகளும். சகாக்களால் தொல்லைகளை எதிர்ப்பட்ட போதிலும் பிரசங்க வேலையில் மனம் தளராது ஈடுபட்டவர்களை பேட்டி காணுங்கள்.

பாட்டு 78, முடிவு ஜெபம்.

டிசம்பர் 18-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 94

15 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. டிசம்பர் 25, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் விசேஷ வெளி ஊழிய ஏற்பாடு ஏதாவது செய்யப்பட்டிருந்தால் தெரிவியுங்கள். பின்வரும் கேள்விக்கு பதிலளியுங்கள்: மதக் காரணங்களுக்காக செய்யப்படாதவரையில், கிறிஸ்தவமல்லாத மூலத்தோற்றங்களைக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களில் பங்குகொள்வதற்கு ஏதாவது ஆட்சேபணை உண்டா?​—⁠நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 178-80-ஐக் காண்க.

12 நிமி: “2001-⁠ம் ஆண்டிற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி.” பள்ளி கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியைத் தவறாமல் வாசித்து வருவதற்கும், பள்ளியில் நியமிப்புகளை திறம்பட செய்வதற்காக கடினமாய் உழைப்பதற்கும் உற்சாகமளியுங்கள்.

18 நிமி: “நீங்கள் தைரியமாய் பிரசங்கிக்கிறீர்களா?”* இந்தக் கட்டுரையிலுள்ள வசனங்களின் பேரில் சபையாரை குறிப்பு சொல்ல சொல்லுங்கள். நம் ஊழியம் புத்தகத்தில் பக்கம் 86-லுள்ள தகவலைப் பயன்படுத்தி, வெளி ஊழியத்தில் தைரியத்தையும் திறமையையும் இன்னும் வளர்ப்பது எப்படி என காட்டுங்கள்.

பாட்டு 124, முடிவு ஜெபம்.

டிசம்பர் 25-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 126

10 நிமி: சபை அறிவிப்புகள். சமீபத்தில் சாட்சி கொடுத்தபோது கிடைத்த அனுபவங்களை சொல்லும்படி சபையாரை கேளுங்கள். ஜனவரி மாத அளிப்பை மறுபார்வை செய்யுங்கள்.

10 நிமி: “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்.” கேள்வி-பதில். அடுத்த வட்டார மாநாட்டு தேதியை அறிவியுங்கள். இரண்டு நாட்களும் ஆஜராகும்படி அனைவருக்கும் அறிவுறுத்துங்கள். தங்களோடு பைபிள் படிப்பவர்களும் மாநாட்டுக்கு வருவதற்காக விசேஷ முயற்சி எடுக்கும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள். இப்படி மாநாடுகளுக்கு வரும் பைபிள் மாணவர்கள், சீக்கிரமாகவே சபை கூட்டங்களுக்கு தவறாமல் வர ஆரம்பித்து விடலாம்.

25 நிமி: “பைபிள்​—⁠திருத்தமான சரித்திரம், நம்பத்தக்க தீர்க்கதரிசனம் வீடியோ புகட்டும் கல்வி.” சபையாருடன் கலந்தாலோசிப்பு. மற்றவர்களை உந்துவிக்க இந்த வீடியோவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை சபையாருக்கு அளியுங்கள். (1999 இயர்புக், பக்கங்கள் 51-2) பிப்ரவரி மாதத்தில், இத்தொடரிலுள்ள, பைபிள்​—⁠மனிதகுலத்தின் மிகப் பழமையான நவீனகால புத்தகம் என்ற இரண்டாவது வீடியோ கேஸட்டை மறுபார்வை செய்வோம்.

பாட்டு 212, முடிவு ஜெபம்.

ஜனவரி 1-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 171

10 நிமி: சபை அறிவிப்புகள். இப்புத்தாண்டில் உங்கள் சபையின் கூட்ட நேரங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்திருந்தால் அதற்கேற்ப தவறாமல் கூட்டங்களுக்கு வருமாறு அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். உங்களோடு பைபிளை படிப்பவர்களுக்கும், சத்தியத்தில் ஆர்வம் காட்டுபவர்களுக்கும் அதைத் தெரியப்படுத்துங்கள். புதிய கூட்ட நேரத்தை தெரிவிக்கும் கைப்பிரதிகளை விநியோகியுங்கள். நாட்டின் ஆகஸ்ட் மாத வெளி ஊழிய அறிக்கையின் பேரிலும் உங்கள் சபை அறிக்கையின் பேரிலும் குறிப்பு சொல்லுங்கள். டிசம்பர் மாத வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்துங்கள்.

10 நிமி: “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்.” பேச்சு. அடுத்து வரவிருக்கும் விசேஷ மாநாட்டு தேதி உங்களுக்குத் தெரிந்திருந்தால் சபையாருக்குத் தெரியப்படுத்துங்கள். முழு நாளும் ஆஜராயிருக்கும்படி அறிவுறுத்துங்கள். ஆர்வம் காட்டும் புதியவர்களையும் பைபிள் படித்துக்கொண்டிருப்பவர்களையும் மாநாட்டுக்கு அழைக்குமாறு பிரஸ்தாபிகளை ஊக்குவியுங்கள்.

25 நிமி: மறுசந்திப்புகளுக்கு எப்படி தயாரிப்பது. ஊழியத்தில் இன்னும் திறமையை அதிகரிப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை அப்பா குடும்பத்தாருடன் கலந்து பேசுகிறார். ஆர்வம் காட்டிய அனைவரையும் திரும்ப சென்று சந்திப்பதற்கு, பைபிள் அடிப்படையிலான காரணங்களை அவர் வலியுறுத்துகிறார். 1999, ஜூலை 1, காவற்கோபுர இதழில், பக்கம் 22, பாரா 18-⁠ல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி ஓரிரு மறுசந்திப்புகளுக்காக அந்தக் குடும்பத்தார் தயாரிக்கின்றனர். ஆர்வம் காட்டியவர்களை ஏற்கெனவே ஊழியத்தில் சந்தித்திருந்ததாக அவர்கள் அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். பிறகு, தங்கள் முதல் சந்திப்பில் ஒருவர் எப்படி ஆர்வம் காட்டினார் என்பதைப் பற்றி ஒவ்வொருவராக சொல்லச்சொல்ல, எப்படி மறுசந்திப்பை செய்யலாம் என மற்றவர்கள் ஐடியா கொடுக்கின்றனர். எந்த வசனத்தை மறுசந்திப்பில் உபயோகிக்கலாம் என ஆலோசனையும் கொடுக்கின்றனர். வீட்டுக்காரர்களிடம் திறம்பட பேசுவதற்கு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்தும் சில குறிப்புகளை சேகரித்துக்கொள்கின்றனர். பிள்ளைகளில் ஒருவர் மறுசந்திப்பு செய்வதை தங்கள் முன் செய்துகாட்டும்படி பெற்றோர் சொல்கின்றனர். வரவிருக்கும் வாரத்தில் மறுசந்திப்புகளை செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க திட்டமிடுகின்றனர்.

பாட்டு 151, முடிவு ஜெபம்.

* முன்னுரை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். அதன்பிறகு கேள்வி பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.

* முன்னுரை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். அதன்பிறகு கேள்வி பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்