ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “நான் போக வேண்டுமா?” மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. வேறு இடத்திற்கு மாறிச் செல்லும் விஷயத்தில் ஏன் பகுத்துணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை விளக்குங்கள். நீதிமொழிகள் 22:3-ல் காணப்படும் ஆலோசனையை எவ்வாறு பொருத்தலாம் என கலந்தாலோசியுங்கள். காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1988 (ஆங்கிலம்), பக்கம் 22-ல் காணப்படும் எச்சரிப்பு குறிப்புகளை சேர்த்துக்கொள்ளவும்.
20 நிமி: கூட்டங்களுக்கு நன்கு தயாரியுங்கள். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். கூட்டங்களிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகள், கூட்டங்களுக்கு தயாரிக்க எவ்வளவு முயற்சி எடுக்கிறோம் என்பதையே பெருமளவில் சார்ந்திருக்கிறது. காவற்கோபுரம், மார்ச் 1, 1998, பக்கங்கள் 15-16, பாராக்கள் 8-11-ல் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையான ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். கூட்டங்களுக்கு தயாரிக்க என்ன முதற்படி எடுக்கிறார்கள், எவ்வாறு அதற்கு நேரத்தை ஒதுக்குகிறார்கள் போன்ற குறிப்புகளை சபையாரை சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 211, முடிவு ஜெபம்.
அக்டோபர் 16-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி: “ஆர்வத்தை தூண்ட சமீப சம்பவங்களை பயன்படுத்துங்கள்.” சபையார் கலந்தாலோசிப்பும், நடிப்புகளும். உள்ளூரில் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் அநேக சமீபத்திய சம்பவங்களை குறிப்பிடுங்கள். எதிர்காலத்தைப் பற்றி என்ன கவலைகளை இவை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் சொல்லுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 11-ஐ பயன்படுத்தி, பைபிள் படிப்பிற்கு வழிநடத்தக்கூடிய அறிமுகத்தை எவ்வாறு தயாரிப்பது என சில ஆலோசனைகளை அளியுங்கள். நடைமுறைக்கு உதவும், நன்கு தயாரித்த இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: நாம் எல்லோரும் பயனியர் மனப்பான்மையை வெளிக்காட்டலாம். காவற்கோபுரம், அக்டோபர் 15, 1997, பக்கங்கள் 22-3-ஐக் கொண்டு புத்தகப் படிப்பு நடத்துனருக்கும் உதவியாளருக்கும் இடையே நடக்கும் கலந்தாலோசிப்பு. சபையில் அநேக பயனியர்கள் இருப்பது ஏன் நல்லது என்றும், எவ்வாறு எல்லாரும் ஒத்துழைக்கலாம் என்றும் கலந்தாலோசியுங்கள். தற்போது பயனியராக இருப்பவர்கள் அதைத் தொடர எப்படியெல்லாம் அவர்களை உற்சாகப்படுத்தலாம் என்பதையும், சபையிலுள்ள எல்லோருமே ஊழியத்திற்கு நல்ல வைராக்கியத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்பதையும் சிந்தியுங்கள்.
பாட்டு 131, முடிவு ஜெபம்.
அக்டோபர் 23-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “பலப்படுத்தி, கல்வி புகட்டி, செயல்பட தூண்டும் உபகரணங்கள்.” (பாராக்கள் 1, 2 மட்டும்.) பேச்சு. சங்கம் எவ்வாறு வீடியோக்களை தயாரிக்க ஆரம்பித்தது என்பதை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். (அறிவிப்போர் [ஆங்கிலம்], பக்கங்கள் 600-601-ஐ பார்க்கவும்.) அக்டோபர் 30-ம் தேதிக்குரிய ஊழியக் கூட்டத்திலுள்ள பாகத்திற்கு தயாரிக்கும் வண்ணமாக யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு என்ற ஆங்கில வீடியோவை பார்த்து வரும்படி எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள். வீடியோ யாரிடம் இருக்கிறதோ அவர்கள், இல்லாதவர்களுக்கு பார்ப்பதற்கு அதை கொடுக்கலாம். அல்லது எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போட்டு பார்க்கலாம்.
25 நிமி: “நியூ மிலனியம்—உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?” ஊழியக் கண்காணியின் விறுவிறுப்பான கலந்தாலோசிப்பு. ஜூலை 3, 2000 தேதியிட்டு, மூப்பர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலுள்ள அறிவிப்பை வாசித்தபிறகு, அங்கு வந்துள்ள எல்லோருக்கும் ஒவ்வொரு ராஜ்ய செய்தி எண் 36-ஐ கொடுக்கவும். பின்பு, கட்டுரையை கேள்வி பதில் மூலம் கலந்தாலோசியுங்கள். முழு பிராந்தியங்களையும் செய்து முடிக்க சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி சொல்லுங்கள். புதியவர்கள் மற்றும் பிள்ளைகள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆவதற்குரிய தகுதிகளை பெற எவ்வாறு உதவலாம் என சிந்தியுங்கள். சுருக்கமாகப் பேசி அளிப்பதை நடித்துக் காட்டுங்கள். இந்த விசேஷ அளிப்பில் எல்லோரும் முழுமையாக கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள்.
பாட்டு 53, முடிவு ஜெபம்.
அக்டோபர் 30-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். அக்டோபர் மாதத்திற்குரிய வெளி ஊழிய அறிக்கையை கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டவும். வாரக் கடைசியில் ஊழியம் செய்யும்போது, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் ராஜ்ய செய்தி எண். 36-உடன் சேர்த்து அளிக்கும்படி சபையை உற்சாகப்படுத்துங்கள்.
12 நிமி: பாடல்—வணக்கத்தின் ஒரு முக்கிய பாகம். ஒரு புத்தகப் படிப்பு நடத்துனர் இரண்டு பிரஸ்தாபிகளுடன், சபையில் அவர்கள் பாடல் பாடுவதைப் பற்றி கலந்துரையாடுகிறார். அவர், அந்த இரு பிரஸ்தாபிகள் கூட்டங்களில் உணர்ச்சியின்றி பாடல் பாடுவதை கவனித்திருக்கிறார். காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1997, பக்கங்கள் 27-8-ல் இருந்து சில குறிப்புகளை அவர் பகிர்ந்துகொள்கிறார். காவற்கோபுரம், ஜூலை 1, 1999, பக்கம் 20, பாரா 12-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைப்படி, அந்த வாரம் காவற்கோபுரப் படிப்பில் பாடப்போகும் பாடலின் வரிகளை ஆராய்ந்து பார்க்கிறார்கள். கூட்டங்களில் பாடல் பாடுவதை சீரியஸாக எடுப்பதன்மூலம், உயிரோட்டமுள்ள இருதயப்பூர்வமான துதிகளை யெகோவாவுக்கு செலுத்துகிறோம்.
25 நிமி: யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்). சபையார் கலந்தாலோசிப்பு. “பலப்படுத்தி, கல்வி புகட்டி, செயல்பட தூண்டும் உபகரணங்கள்” என்ற கட்டுரையின் 3-வது பாராவில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கலந்தாலோசியுங்கள். ஆர்வமுள்ள ஆட்கள் நம் அமைப்பைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள இந்த வீடியோ எவ்வாறு உதவும் என ஆலோசனைகளை வழங்குங்கள். ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.—காவற்கோபுரம், அக்டோபர் 1, 1992, பக்கங்கள் 30-1-ஐப் பார்க்கவும்.
பாட்டு 223, முடிவு ஜெபம்.
நவம்பர் 6-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: நாம் என்ன நம்புகிறோம்? “நீங்க போதிக்கிறதுக்கும் மத்த மதத்தினர் போதிக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்ட நபரை ஒரு சகோதரர் மீண்டும் சென்று சந்திக்கிறார். காவற்கோபுரம், அக்டோபர் 1, 1998, பக்கம் 6-ல் உள்ள பெட்டியிலிருக்கும் குறிப்புகளை கலந்தாலோசியுங்கள். மனிதரால் உண்டாக்கப்பட்ட போதனைகளை ஆதரிப்பதற்காக எவ்வாறு மற்ற மதங்கள் அடிப்படை பைபிள் சத்தியங்களை மறுக்கின்றன என்பதை விளக்குங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: வெற்றிகரமாக உரையாடலைத் துவங்கிய அனுபவங்கள். அக்டோபர் 16-ம் தேதி துவங்கும் வாரத்திற்குரிய ஊழியக் கூட்டத்தில், உரையாடலைத் துவக்குவதற்காக ஆர்வத்தைத் தூண்டும் சமீபத்திய சம்பவங்களை அறிமுகங்களாக பயன்படுத்தும்படி நமக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுரையை பின்பற்றி இதுவரை கிடைத்திருக்கும் நல்ல பலன்களை சொல்லும்படி சபையாரை அழையுங்கள்.
பாட்டு 205, முடிவு ஜெபம்.