ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 14-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். மே மாதத்திற்கான சபையின் வெளி ஊழிய அறிக்கையை குறிப்பிடுங்கள். ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் இரண்டே வாரங்கள் மீதியிருப்பதால் சபையார் அனைவரும் ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள். வார இறுதி நாட்களில் நடக்கும் வெளி ஊழியக் கூட்டங்களுக்கான அட்டவணையை மறுபார்வை செய்யவும்.
15 நிமி:“விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடு.” முகவுரையை ஒரு நிமிடத்திற்குள்ளாக முடித்துக்கொண்டு, கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். புத்தகப்படிப்பு நடத்துனர் தங்களுடைய தொகுதியை ஊழியத்தில் சிறப்பாக நடத்துவது எப்படி என்பதை நம் ஊழியம் புத்தகத்தில் பக்கம் 44-45-ல் சொல்லப்பட்டுள்ள குறிப்புகளிலிருந்து எடுத்துக்காட்டுங்கள். தேவையில் இருப்போருக்கு தனிப்பட்ட விதமாக உதவுவதற்கும் ஊழிய அறிக்கையை ஒழுங்காக அறிக்கை செய்வதற்கும் கவனம் செலுத்துங்கள்.
18 நிமி:பள்ளிக்கு செல்வதால் நீங்கள் எவ்வாறு பயனடையலாம். பிள்ளைகளுக்கு அதன் பிரயோஜனத்தை தந்தை உணர்த்துகிறார். (இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் புத்தகம் பக்கம் 133-139.) கட்டுப்பாடில்லா இன்றைய சமுதாயத்தில் பள்ளிக்குச் செல்வதை அநேக பிள்ளைகள் சவாலாக கருதுகின்றனர். எதிர்கால நடைமுறை வாழ்க்கைக்கு பள்ளி படிப்பு அதிக நன்மையளிக்காது என முடிவு செய்வதால் போரடிப்பதாக நினைக்கின்றனர். போதிய கல்வி ஏன் இன்றியமையாதது என்பதை தந்தை பைபிள் நியமங்களோடு பொறுத்தி விளக்குகிறார். வகுப்பில் கவனம் சிதறாமல் படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்கும்படி அவர் தன் பிள்ளைகளை உற்சாகப்படுத்துகிறார்.
பாட்டு 127, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “அன்புள்ள கடவுள் துன்மார்க்கத்தை ஏன் அனுமதிக்கிறார்?” என்ற கேள்விக்கான விடையை விளக்கும் நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்பு. (நியாயங்காட்டிப் பேசுதல், பக்கங்கள் 395-6) இந்த வார இறுதியில் ஊழியத்தில் பங்குகொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி:ஊழியக் கண்காணி அளிக்கும் பேச்சு. “பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துங்கள்” (டிசம்பர் 1999 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 3) என்ற கட்டுரையிலுள்ள முக்கிய குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள். பிரசுரங்களை கொடுக்கும்போது விவேகத்தோடு கொடுக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி:“நீங்கள் பயனடைகிறீர்களா?” கேள்வி பதில்.
பாட்டு 152, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஆகஸ்ட் மாத ஊழிய அறிக்கையை கொடுக்கும்படி சபையாரை நினைப்பூட்டவும். செப்டம்பர் 6-க்குள் எல்லா அறிக்கைகளையும் அனுப்புவதற்காக சபை புத்தக படிப்பு நடத்துனர்கள் தங்களுடைய தொகுதியிலுள்ள அனைவரிடமும் கேட்க வேண்டும்.
15 நிமி:சபைத் தேவைகள்.
20 நிமி:“இளைஞருக்கு பலனளிக்கும் கூட்டங்கள்.” மூப்பரால் கையாளப்படும் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பத்தி 8-ஐ கலந்தாலோசிக்கும்போது, கூட்டங்களில் கவனம் சிதறாமல் கூர்ந்து கவனிப்பதற்கு உதவும் நடைமுறையான குறிப்புகளை சிந்தியுங்கள். (செப்டம்பர் 22, 1998 விழித்தெழு! பக்கங்கள் 19-20-ஐ காண்க.) பிள்ளைகள் தவறாமல் கூட்டங்களில் பங்கு பெறுவதில் கண்டிப்புடன் இருக்கும்படி பெற்றோர்களை உற்சாகப்படுத்துங்கள்.—செப்டம்பர் 1, 1997 காவற்கோபுரம், பக்கம் 25-லுள்ள அனுபவத்தைப் பார்க்கவும்.
பாட்டு 176, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 4-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. சந்தர்ப்ப சாட்சிகளில் கிடைத்த நல்ல அனுபவங்களை பிரஸ்தாபிகளிடம் கேட்கலாம். நம் ஊழியம், பக்கம் 93-94-ல் உள்ள குறிப்புகளை பயன்படுத்தி, ஊழியத்தின் இந்த அம்சத்தில் பங்கு பெறுவதன் மதிப்பை வலியுறுத்திக் காட்டவும்.
10 நிமி:நம்முடைய காலம் தனித்தன்மை வாய்ந்தது. நவம்பர் 15, 1996, காவற்கோபுரம் பக்கங்கள் 22-23-ஐ மையமாக வைத்து சபை மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு.
20 நிமி:“நீங்கள் சகிக்கிறீர்களா?” கலந்தாலோசிப்பைக் கொண்ட பேச்சு. கிறிஸ்தவ ஊழியத்தில் சகிப்புத்தன்மையை காட்டியதால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் பெற்ற நன்மைகளை சிந்தித்துப் பார்க்கும்படி ஊக்கப்படுத்துங்கள். ஒருவேளை பலவீனத்தை கண்டுபிடித்தால் ஆவிக்குரிய பலப்படுத்துதல் அவசியம். அக்டோபர் 1, 1999, காவற்கோபுரம், பக்கங்கள் 20-21, பத்திகள் 17-21-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பல ஆண்டுகளாக, சகிப்புத்தன்மை காட்டுவதில் சிறந்து விளங்கும் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளை பேட்டி காணலாம். அதை அவர்களால் எப்படி செய்ய முடிந்தது என்பதை கேளுங்கள்.
பாட்டு 206, முடிவு ஜெபம்.