ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “மனித குலத்திற்கு மீட்கும் பொருள் ஏன் தேவை?” என்ற தலைப்பையுடைய விசேஷித்த பொதுப் பேச்சு ஏப்ரல் 16-ல் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நினைவு ஆசரிப்பு பைபிள் வாசிப்பிற்காக ஏப்ரல் 14-19 வரை அட்டவணையிடப்பட்டுள்ள பகுதியை பின்பற்றுமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். இது, தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2000 புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உட்சேர்க்கையின் பக்கம் 4-ல் உள்ள “நினைவு ஆசரிப்பிற்கான நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி:“கிறிஸ்துவின் அன்புக்கு இசைய நீங்கள் நடக்கிறீர்களா?” அறிமுக குறிப்புகளை ஒரு நிமிடத்திற்குள் முடித்துவிட்டு, கேள்வி பதில் அடிப்படையில் சிந்தியுங்கள். மே 1, 1998, காவற்கோபுரம் இதழில் பக்கங்கள் 16-17, பாராக்கள் 12-13-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நினைவு ஆசரிப்பிற்கு வருவதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கும்படி விசேஷித்த முயற்சி எடுக்குமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“ஏப்ரல்—நற்கிரியைகளைச் செய்ய சுறுசுறுப்பாய் இருக்க வேண்டிய மாதம்!” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. ஏப்ரல் மாதத்தில் நாம் எதை சாதிக்க விரும்புகிறோம் என்பதை பற்றிய உற்சாகமான கலந்தாலோசிப்பு. கடைசி மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு “அநேகரை உந்துவிக்கும் வைராக்கியம்” என்ற பகுதியை மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 199, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 17-ல் துவங்கும் வாரம்
13 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. இந்த ஏப்ரல் மாதத்தில் இன்னும் இரண்டு வார இறுதி நாட்கள்தான் உள்ளன. ஆகவே இம்மாதம் முடிவடைவதற்குள் எல்லாரையும் ஊழியத்தில் ஈடுபடுமாறு உற்சாகப்படுத்துங்கள். சமீபத்திய பத்திரிகைகளை பயன்படுத்தி சுருக்கமான நடிப்புகளை செய்துகாட்டுங்கள். தங்களுடைய ஈஸ்டர் பழக்கவழக்கங்களில் நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதாக மக்கள் விரும்பலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். ஆகவே, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 179-80 வரையுள்ள விஷயங்களை மறுபார்வை செய்யுங்கள்.
16 நிமி:“சுயதியாக உள்ளம் உங்களுக்கு உள்ளதா?” கேள்வி பதில். முதன்மையான முக்கியத்துவம் உடையவற்றை நாம் தீர்மானித்து, முக்கியமான அம்சங்களுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். நமக்கு ஆவிக்குரிய வகையில் பயனுள்ளவற்றை தொடர்ந்து பின்பற்றுவதற்கு நம்முடைய பாகத்தில் முயற்சியும் தன்னடக்கமும் தேவை. இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் எதை கற்றுக்கொள்ளலாம் என்பதை விவரியுங்கள்.—உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கம் 68, பாராக்கள் 3-5-ஐ பாருங்கள்.
16 நிமி:அதிக பிரயோஜனமாக இருக்கும்போது மாத்திரம் பத்திரிகைகளை அளியுங்கள். சபையார் பங்கெடுப்புடன் பேச்சு. விழித்தெழு! ஜனவரி 8, 1995, பக்கங்கள் 22-4-லுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். பத்திரிகைகளிலுள்ள விசேஷித்த கட்டுரைகளுக்கு நல்லவிதமாக பிரதிபலிக்கிறவர்களை தேடுவது ஏன் சிறந்தது என்பதை விளக்குங்கள். கடந்த இதழ்களில் வெளிவந்த விஷயங்களில் சிலவற்றை எடுத்துப் பாருங்கள்; உங்கள் பிராந்தியத்திலுள்ள வித்தியாசமானவர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள்; இப்போது, தனிநபர்களை, வெவ்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை, நிறுவனங்களை அந்தக் கட்டுரைகள் எப்படியெல்லாம் கவர்ந்திருக்கலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். இந்த முறையை பின்பற்றியதால் நற்பயன்களை அடைந்த அனுபவங்களை சொல்லுமாறு சபையாரை அழையுங்கள்.
பாட்டு 71, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். சபையில், நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையை அறிவியுங்கள். முதல் தடவையாக ஆசரிப்புக்கு வந்திருந்தவர்கள் தெரிவித்த விஷயங்களை சொல்லுமாறு சபையாரை கேளுங்கள்.
17 நிமி:புதியவர்கள் கூட்டங்களுக்கு ஆஜராவதற்கு உதவுங்கள். அறிவு புத்தகத்தில் பக்கங்கள் 161-3, பாராக்கள் 5-8-ஐ சார்ந்த பேச்சு. கொஞ்ச காலத்திற்கு படித்த பிறகு புதியவர்கள் கூட்டங்களுக்கு வர ஆரம்பிப்பது மிகவும் அவசியம். அவர்களை கூட்டங்களுக்கு ஆஜராக செய்வது சவாலான விஷயம்தான். அவர்களை தூண்டுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பைபிள் படிப்பை நடத்துபவர்கள், அறிவு புத்தகத்திலுள்ள இந்த விஷயங்களை தங்களுடைய மாணவர்களோடு மறுபார்வை செய்வதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, உண்மை வணக்கத்தில் நம்மோடு சேர்ந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவ திட்டவட்டமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
18 நிமி:“நீங்கள் தவறாமல் ஊழியத்திற்குச் செல்பவரா?” பேச்சு மற்றும் சபையாரின் பங்கெடுப்போடு செயலரால் நடத்தப்படும் பகுதி. நமது ஊழிய நடவடிக்கைகளை ஏன் அறிக்கையிட வேண்டும் என்பதை விளக்குங்கள். (நம் ஊழியம், பக்கங்கள் 106-8-ஐப் பாருங்கள்.) நமது ஊழிய அறிக்கைகளை சரியான நேரத்திற்குள் கொடுக்கவில்லையெனில் ஏற்படும் சில பிரச்சினைகளை குறிப்பிடுங்கள். தங்களுடைய ஊழிய அறிக்கைகளை சரியான நேரத்திற்கு கொடுப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்பதை சொல்லுமாறு சபையாரை கேளுங்கள். இது சம்பந்தமாக உதவுவதற்கு புத்தக படிப்பு நடத்துனர்கள் என்ன செய்யலாம் என்பதையும் சுட்டிக்காட்டுங்கள். ஏப்ரல் மாதத்தில் இன்னும் ஒரு வார இறுதி மாத்திரம்தான் எஞ்சியுள்ளது. ஆகவே எல்லாரும் ஊழியத்தில் கலந்துகொண்டு, மாத இறுதியில் ஊழிய அறிக்கையை கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.
பாட்டு 200, முடிவு ஜெபம்.
மே 1-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கைகளை போடும்படி எல்லாருக்கும் ஞாபகப்படுத்துங்கள். தங்களுடைய குரூப்பிலுள்ள எல்லாரும் ஊழிய அறிக்கைகளை கொடுத்துவிட்டார்களா என்பதை சபையின் புத்தகப் படிப்பு நடத்துனர்கள் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எல்லா அறிக்கைகளும் மே 6-ம் தேதிக்குள் மொத்தமாக கணக்கிடப்படுவதற்கு உதவியாக இருக்கும். கேள்விப் பெட்டியை மறுபார்வை செய்யும்போது அதை உள்ளூர் சூழ்நிலைக்கு பொருத்துங்கள்.
15 நிமி:சபைத் தேவைகள்.
18 நிமி:“மீண்டும் செல்ல மறவாதீர்கள்!” சபையாருடன் கலந்துரையாடல். நாம் மறுசந்திப்பு செய்வதை தவற விடுவதற்கான காரணத்தை கலந்தாலோசியுங்கள். மறுசந்திப்பு செய்வதற்கு திருத்தமான வீட்டுக்குவீடு பதிவுகளும் மனமார்ந்த ஆர்வமும் முக்கியம் என்பதை விளக்குங்கள். மறுசந்திப்பிற்காக ஒவ்வொரு வாரமும் எவ்வாறு கொஞ்ச நேரத்தை ஒதுக்குவது என்பதற்கான ஆலோசனைகளை கொடுங்கள். நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 88-9-லுள்ள விஷயங்களை மறுபார்வை செய்யுங்கள். 1995 இயர்புக், பக்கம் 45-லுள்ள அனுபவத்தை சொல்லுங்கள்.—1 கொ. 3:6, 7.
பாட்டு 68, முடிவு ஜெபம்.