அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள். ஆர்வம் காட்டுவோருக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து, வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க முயற்சி செய்யுங்கள். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? வீட்டு பைபிள் படிப்பு துவங்குவதில் கவனம் செலுத்துங்கள்.
◼ ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துணைப் பயனியர் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள், இப்போதே அதற்கு திட்டமிட வேண்டும், அத்துடன் முன்னதாகவே அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இது, தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகளை மூப்பர்கள் முன்கூட்டியே செய்யவும், தேவையான அளவு பத்திரிகை மற்றும் பிரசுரம் கையிருப்பில் இருக்கிறதா என நிச்சயித்துக்கொள்ளவும் உதவும். துணைப் பயனியர் செய்ய அங்கீகரிக்கப்படுவோரின் பெயர்கள் ஒவ்வொரு மாதமும் சபைக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
◼ நம் ராஜ்ய ஊழியத்தின் இந்தப் பிரதியில், தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தின் முழு படிப்பு அட்டவணையும் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் உங்களுக்கு தேவையோ அப்போதெல்லாம் உடனடியாக எடுத்துப்பார்க்க உதவியாக, அதை நீங்கள் நகல் எடுத்து, உங்கள் சொந்த பிரதியிலேயே வைத்துக்கொள்ளலாம்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் டிசம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்கைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கையை படித்த பிறகு, இதையும் சபையாருக்கு அறிவிக்க வேண்டும்.
◼ ஏப்ரல் 19, 2000, புதன்கிழமையன்று, நினைவு ஆசரிப்பு அனுசரிக்கப்படும். பொதுவாக உங்கள் சபைக் கூட்டம் புதன்கிழமைகளில் நடத்தப்படுமேயானால், அப்போது அதே வாரத்தில் ராஜ்ய மன்றம் பயன்படுத்தப்படாத வேறொரு நாளிற்கு கூட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஒருவேளை இது சாத்தியமில்லை, உங்கள் ஊழியக் கூட்டம் பாதிக்கப்படுகிறது என்றால், அப்போது குறிப்பாக உங்கள் சபைக்கு பொருந்தும் பாகங்களை மற்றொரு ஊழியக் கூட்டத்துடன் சேர்த்து கையாளலாம்.
◼ சபையோடு தொடர்புடைய அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட காவற்கோபுரம், விழித்தெழு!-வுக்கான புதிய மற்றும் புதுப்பிக்கும் சந்தாக்களை சபை மூலமாகவே அனுப்ப வேண்டும்.
◼ பிரசுரங்கள் கேட்டு தனிப்பட்ட பிரஸ்தாபிகள் சங்கத்திற்கு எழுதினால் சங்கம் அவற்றை அனுப்பி வைக்காது. பிரசுரங்களுக்கான சபையின் மாதாந்திர ஆர்டர் சங்கத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் சபைக்கு ஓர் அறிவிப்பை செய்ய நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் தனிப்பட்ட விதமாக பிரசுரங்கள் தேவைப்படுவோர் பிரசுர இலாக்காவிலுள்ள சகோதரரிடம் ஆர்டர் கொடுக்க முடியும். ஆர்டர் செய்தால் மட்டுமே கிடைக்கும் பிரசுரங்கள் எவை என்பதை தயவுசெய்து மனதில் வைக்கவும்.
◼ இந்தியாவில் நடைபெற்ற “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை” மாவட்ட மாநாடுகள், ஒரு புதிய உச்சநிலை எண்ணிக்கையோடு முடிவடைந்தன. இந்த மாநாடுகளுக்கு ஆஜராயிருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,462. சென்ற வருடத்தோடு ஒப்பிட இதன் அதிகரிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். 27 இடங்களில் நடைபெற்ற இந்த மாநாடுகளில் 881 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர்.
◼ கையிருப்பில் உள்ள புதிய பிரசுரங்கள்:
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருள்கள், மற்றும் அடிப்படை பைபிள் போதனைகள்—மிசோ மொழி