உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/99 பக். 2
  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1999
  • துணை தலைப்புகள்
  • நவம்பர் 1-⁠ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 8-⁠ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 15-⁠ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 22-⁠ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 29-⁠ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1999
km 11/99 பக். 2

நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

நவம்பர் 1-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 156

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “பைபிளின் அபார சக்தியை பாருங்கள்!” பகுதியை கையாளுதல்.

15 நிமி: “நம்மை வேறுபடுத்திக் காட்டும் பிரசங்கம்.” ஒரு நிமிடத்திற்குள்ளாக அறிமுகத்தை முடித்துக்கொண்டு, கேள்வி பதில் மூலம் கையாள வேண்டும். அறிவு புத்தகத்தில் பக்கம் 173, பாரா 8-⁠ல் உள்ள குறிப்புகளை உபயோகித்து, பைபிள் மாணாக்கரை ஊழியத்தில் கலந்துகொள்ள எப்படி உற்சாகப்படுத்தலாம் என்பதை சுருக்கமாக கூறவும்.

20 நிமி: “பைபிள் படிப்பை யார் ஏற்றுக்கொள்வர்?” பேச்சும் நடிப்புகளும். பாரா 4-⁠ல் உள்ளபடி, நம் பிரசுரங்களில் என்ன இருக்கிறதென்பதை கற்றுக்கொள்வதில் ஆர்வத்தைத் தூண்டும் பல வழிகளை குறிப்பிடுங்கள். இதை எப்படி செய்யலாம் என்பதைக் காண்பிக்கும் சுருக்கமான இரு நடிப்புகளை செய்யுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் எப்படி வெற்றி அடைந்தனர் என்பதை சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.

பாட்டு 198, முடிவு ஜெபம்.

நவம்பர் 8-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 204

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. அடுத்தவாரம் சிந்திக்க இருக்கும் நவம்பர் உட்சேர்க்கையின் முதல் 18 பாராக்களை தயார் செய்துவரும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்துங்கள்.

15 நிமி: கேள்விப் பெட்டி. பேச்சு. ராஜ்ய மன்றத்தை சுத்தமாகவும் நல்ல நிலையிலும் வைப்பதற்கான சபையின் ஏற்பாடுகளைக் குறிப்பிடவும்.

20 நிமி: “ஓர் யூதரை சந்தித்தால் என்ன சொல்வீர்கள்?” கேள்வி பதில். பாரம்பரிய சீர்திருத்த யூத மதத்திற்கும், பழமையில் ஊறிப்போன யூத மதங்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை விளக்குங்கள். (கடவுளை தேடி, ஆங்கில புத்தகத்தில் பக். 226-7-⁠ஐக் காண்க.) யூத மதத்தைச் சேர்ந்த ஒருவரோடு பொதுப்படையான பேச்சை நீங்கள் எப்படி ஆரம்பிக்கலாம் என்பதைக் குறிப்பிடுங்கள். எப்படி பேசுவது என்பதை நன்கு தயாரித்து, நடித்துக்காட்டுங்கள். யூத மதத்தைப் பற்றிக் கூடுதல் தகவல்களுக்கு, நம் ராஜ்ய ஊழியம், 1998, பிப்ரவரி உட்சேர்க்கை; நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 22-3; கடவுளை தேடி புத்தகம் அத்தியாயம் 9-ஐயும் காண்க.

பாட்டு 208, முடிவு ஜெபம்.

நவம்பர் 15-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 211

8 நிமி: சபை அறிவிப்புகள்.

25 நிமி: “இன்டர்நெட்—ஜாக்கிரதை!” பாராக்கள் 1-18 கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 4-7, 12, 16, 17-ஐ வாசிக்கவும். அடுத்தவார கலந்தாலோசிப்புக்காக பாராக்கள் 19-36-ஐ தயாரித்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

12 நிமி: பெற்றோரே​—⁠குடும்ப படிப்பை தவறாமல் நடத்துகிறீர்களா? பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். குடும்பங்கள் ஏன் ஒன்றுசேர்ந்து படிக்க வேண்டும் என விளக்கவும். (பள்ளி துணைநூல் பக். 37-8-ஐக் காண்க.) குடும்ப படிப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பின்வரும் குறிப்புகளை சிந்தியுங்கள்: (1) குடும்ப படிப்பிலிருந்து நன்மை பெறும் வயதில் பிள்ளைகள் இல்லை, (2) சபை கூட்டங்களுக்கு சென்றாலே போதும், (3) ஓயாத வேலையால் சோர்ந்து போதல், (4) டெலிவிஷன் பார்ப்பதால் கவனம் சிதறுதல். (1994, மே 15, காவற்கோபுரம் பக்கங்கள் 11-12-ஐக் காண்க.) குடும்ப படிப்பை தவறாமல் நடத்துவதற்கு தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளை குடும்பத் தலைவர்கள் எப்படி மேற்கொண்டார்கள் என்பதை அவர்களை சொல்ல சொல்லுங்கள். முயற்சி, திடதீர்மானம், ஒத்துழைப்பு போன்றவை மிக முக்கியம் என்பதை வலியுறுத்துங்கள்.

பாட்டு 217, முடிவு ஜெபம்.

நவம்பர் 22-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 158

10 நிமி: சபை அறிவிப்புகள். வெளி ஊழிய அனுபவங்கள்.

10 நிமி: நியமிப்புகளைப் பற்றிய உங்கள் மனப்பான்மை? மூப்பர் கொடுக்கும் பேச்சு. சபை கூட்டங்கள் ஒழுங்காக நடத்துவதில் நிறைய வேலைகள் அடங்கியுள்ளன. இதோ அவற்றின் பட்டியல்: நிகழ்ச்சி நியமிப்புகளை தயாரித்தல்; மற்றவர்களை கூட்டங்களுக்கு கூட்டி வருதல் அல்லது ஊழியத்திற்கு அழைத்து செல்லுதல்; வயதானவர்களுக்கு உதவுதல்; ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்து, பழுது பார்த்து, பராமரித்தல். இந்த வேலைகள் செய்ய உங்களுடைய உதவியைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? சிலர் உதவ முன்வரமாட்டார்கள், சிலர் வேண்டா வெறுப்போடு ஒத்துக்கொள்வார்கள் அல்லது கொடுத்த வேலையை பாதியிலேயே விட்டுவிடுவார்கள். நியமிப்புகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை நிறைவேற்றுதல் ஏன் சந்தோஷம் அளிக்கும் ஒரு சிலாக்கியம் என்பதை கலந்துபேசவும். இப்படிப்பட்ட வேலைகள் செய்ய சபையில் உள்ள அனைவரும் விருப்பத்தோடு முன்வந்து செய்யும் மனப்பான்மையை காண்பிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.—சங். 110:3, [NW, அடிக்குறிப்பு]; ஏசா. 6:⁠8.

25 நிமி: “இன்டர்நெட்—ஜாக்கிரதை!” பாராக்கள் 19-36-ஐ கேள்வி பதில் மூலம் கலந்தாலோசித்தல். பாராக்கள் 23-5, 34-6-ஐ வாசிக்கவும்.

பாட்டு 223, முடிவு ஜெபம்.

நவம்பர் 29-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 215

10 நிமி: சபை அறிவிப்புகள். நவம்பர் ஊழிய அறிக்கையை போடும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்துங்கள்.

15 நிமி: புதியவர்கள் கூட்டங்களுக்கு வர உற்சாகப்படுத்துதல். கடவுளுடைய சித்தத்தை செய்தல் சிற்றேட்டில், பக்கங்கள் 14-15-⁠ல் உள்ள குறிப்புகளை ஒரு மூப்பரும் ஒன்று அல்லது இரண்டு உதவி ஊழியர்களும் கலந்துபேசுகின்றனர். புதியவர்கள் கூட்டங்களுக்கு வரவேண்டியது ஏன் அவசியம் என்பதை மறுபார்வை செய்தல். தேவையான ஆலோசனைகள், உற்சாகம், உதவி அனைத்தையும் அங்குதான் அவர்கள் பெறுவார்கள். ஒவ்வொரு கூட்டத்தின் நன்மைகளையும் விளக்கி, வாரத்தின் ஐந்து கூட்டங்களையும் மறுபார்வை செய்யுங்கள். கடவுளுக்கேற்ற நடத்தையை முன்னேற்றுவிக்கவும், ஆவிக்குரிய தன்மையை வளர்க்கவும், அமைப்பினிடமாக நெருங்கி​வரவும், மற்றவர்களோடு நெருங்கிப் பழகவும், நம் ஊழியத்தின் நோக்கத்தை புரிந்துகொள்ளவும் கூட்டங்கள் எப்படி உதவுகின்றன என்பதை கலந்துபேசவும். புதியவர்களை கூட்டங்களுக்கு வர ஊக்குவிக்க இந்த சிற்றேட்டை பயன்படுத்தும்படி சபையாரை உற்சாகப்படுத்தவும்.

20 நிமி: நம் விருப்பம்​—⁠புதிய உலக மொழிபெயர்ப்பு. பேச்சும் நடிப்புகளும். இது, யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட வணக்கத்தாரால் தயாரிக்கப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்பு. இதை பிரசுரித்து, பயன்படுத்தி, விநியோகித்தலே, மத அமைப்புகள் எல்லாவற்றிலும் நம்முடையதை தனித்து காட்டுகிறது. வியாபார ரீதியாக லாபம் ஈட்டுவது அல்லது மதப்பிரிவுகளின் நம்பிக்கைகளை பரப்புவது நம் நோக்கமல்ல. மாறாக, கடவுளுடைய பெயரை கனப்படுத்த வேண்டும், கடவுளை மற்றவர்கள் நன்கு தெரிந்துகொள்ள உதவ வேண்டும் என்பதே நம் ஆவல். மற்ற மொழிபெயர்ப்புகள், புரிந்துகொள்வதற்கு கடினமான விதத்தில் கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்த்துள்ளன. எனவே, புதிய உலக மொழிபெயர்ப்பின் குறிப்பிடத்தக்க நன்மைகளை எடுத்துக்கூறவும். (“வேதாகமம் முழுவதும்” என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 327-31-ஐக் காண்க. பாரா 3-⁠ல் உள்ள குறிப்புகளை சிந்தியுங்கள். திருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டதற்கான பாரா 3-⁠ல் உள்ள உதாரணங்களை சுட்டிக்காட்டவும். பாராக்கள் 22-3-⁠ல் உள்ள குறிப்புகளின் நன்மைகளின் சிறப்பு அம்சங்களை வலியுறுத்தவும்.) “நீங்கள் உங்கள் சொந்த பைபிளைக் கொண்டிருக்கிறீர்கள்” என மற்றவர்கள் சொல்லும்போது, நீங்கள் எப்படி பதில் தருவீர்கள் என்பதை காட்டும் சுருக்கமான இரண்டு நடிப்புகளை செய்து காட்டவும்.​—⁠நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக். 279-80-⁠ல் காண்க.

பாட்டு 205, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்