உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/99 பக். 2
  • ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1999
  • துணை தலைப்புகள்
  • ஏப்ரல் 5-ல் துவங்கும் வாரம்
  • ஏப்ரல் 12-⁠ல் துவங்கும் வாரம்
  • ஏப்ரல் 19-⁠ல் துவங்கும் வாரம்
  • ஏப்ரல் 26-⁠ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1999
km 4/99 பக். 2

ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்

ஏப்ரல் 5-ல் துவங்கும் வாரம்

பாட்டு 55

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “சிருஷ்டிகர் புத்தகத்தை அளிக்கலாமா?” என்ற பகுதியை மறுபார்வை செய்யுங்கள். ஏப்ரல் 18-⁠ல் நடக்கவிருக்கும் விசேஷ பொதுப் பேச்சிற்கு அக்கறை காட்டுவோரை அழையுங்கள். “கடவுளோடும் அயலகத்தாரோடும் மெய்யான நட்புறவு” என்பதே அதன் தலைப்பு.

15 நிமி: “நற்செய்தியை ஆவலுடன் பிரசங்கியுங்கள்.” ஒரு நிமிடத்திற்குள் கட்டுரையை அறிமுகப்படுத்திய பிறகு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பை தொடருங்கள். பள்ளி துணைநூல் பக்கங்கள் 191-2, பாராக்கள் 12-13-⁠ல் உள்ள தகவலின் அடிப்படையில் உற்சாகம் கொடுத்து முடியுங்கள்.

20 நிமி: “குடும்ப அங்கத்தினர் முழுமையாய் ஒத்துழைப்பது எப்படி​—⁠ஊழியத்தில்.” ஒரு குடும்பத்தினர் கலந்தாலோசிக்கின்றனர். குடும்ப அங்கத்தினர் அனைவரும் வெளி ஊழியத்தில் வாரா வாரம் தவறாமல் பங்குகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்பதற்கான காரணங்களை கலந்து பேசுங்கள். செப்டம்பர் 1, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 17-19, பாராக்கள் 9-12-⁠ல் உள்ள உற்சாகமூட்டுதலை மறுபார்வை செய்யுங்கள். தங்கள் குடும்பத்திற்காக வாராந்திர ஊழிய நடவடிக்கையை எவ்வாறு திறம்பட ஏற்பாடு செய்கிறார்கள் என்பதை சபையிலுள்ள பெற்றோர்கள் கூறும்படி அழையுங்கள்.

பாட்டு 67, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 12-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 112

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15 நிமி: சபை தேவைகள்.

20 நிமி: “முடிவு நெருங்குகையில் சாட்சி கொடுத்தலை தீவிரமாக்குங்கள்.” கேள்விகளும் பதில்களும். பிரசங்க வேலையில் பங்குகொள்ளவே முடியாது என ஒருசமயம் நினைத்த, ஆனால் ராஜ்ய செய்தியை அறிவிக்க வேண்டிய அவசரத்தை உணர்ந்ததனால் இப்போது ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்ளும் ஓரிரண்டு பிரஸ்தாபிகளை பேட்டி காணுங்கள். நேரம் அனுமதித்தால், ஆங்கில 1997 வருடாந்திர புத்தகம் பக்கங்கள் 42-8-⁠ல் உள்ள சுருக்கமான அனுபவங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஜனங்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு செல்வதனால் அநேக பிரஸ்தாபிகள் எவ்வாறு தங்கள் ஊழியத்தை அதிகரித்திருக்கின்றனர் என்பதை அவை விளக்குகின்றன.

பாட்டு 93, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 19-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 79

5 நிமி: சபை அறிவிப்புகள்.

10 நிமி: “உங்களுக்கு திட்டவட்டமான பத்திரிகை ஆர்டர் இருக்கிறதா?” பத்திரிகைகளை கையாளும் மூப்பரோ உதவி ஊழியரோ இந்தப் பேச்சைக் கொடுப்பது விரும்பத்தக்கது. ஒவ்வொரு மாதமும் எத்தனை பத்திரிகைகள் பெறப்படுகின்றன, சராசரியாக எத்தனை பத்திரிகைகள் விநியோகித்ததாக அறிக்கை செய்யப்படுகின்றன என்பதை சபைக்கு தெரியப்படுத்துங்கள். எந்தப் பத்திரிகையும் வீணாய்ப்போக நாம் அனுமதிக்கக்கூடாது. பழைய பிரதிகளை எவ்வாறு விநியோகிக்கலாம் என்பதற்கு ஆலோசனைகள் கூறுங்கள்.​—⁠ஜூலை 1993 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 1-ஐக் காண்க.

30 நிமி: “பயனியர் ஊழியம்​—⁠நம் நேரத்தை சிறந்த முறையில் உபயோகித்தல்!” கேள்விகளும் பதில்களும். பாராக்கள் 5-7-⁠ல் உள்ள அனுபவங்களைக் கூற மூன்று பேரை முன்னமே ஏற்பாடு செய்யுங்கள். வாய்ப்புள்ள அனைவரும் துணை அல்லது ஒழுங்கான பயனியர் சேவைக்கு விண்ணப்பிக்கும்படி உற்சாகப்படுத்தி முடியுங்கள். சபையின் ஊழியக் குழு அங்கத்தினர் யாரிடமிருந்தும் இந்த விண்ணப்பங்களைப் பெறலாம். மே மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய விண்ணப்பிக்க இன்னும் சமயம் இருக்கிறது என கூறுங்கள்.

பாட்டு 165, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 26-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 70

10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். மே மாதத்தில் துணைப் பயனியர் செய்ய இருப்பவர்களின் பெயர்களை அறிவியுங்கள், விண்ணப்பிக்கும்படி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துங்கள். சமீபத்திய பத்திரிகைகளை அளிக்க சில உதவியான ஆலோசனைகளை அளியுங்கள்.​—⁠அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-ஐக் காண்க.

17 நிமி: “நான் என்ன செய்யவேண்டும்?” கட்டுரையை சபையாரோடு சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். பிறகு, மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த பிறகு என்ன செய்வது என்பதை ஒரு டீனேஜர் தன் பெற்றோரோடு கலந்துபேசுவது போன்ற ஒரு நடிப்பை ஏற்பாடு செய்யுங்கள். ஜூலை 1998, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-ஐ அவர்கள் சேர்ந்து மறுபார்வை செய்கின்றனர். காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1996, பக்கம் 14, டிசம்பர் 1, 1996, பக்கங்கள் 17-19 ஆகியவற்றிலுள்ள உற்சாகமூட்டுதலுக்கு இசைவாக பெற்றோர் ஆலோசனை தருகிறார். பயனியர் செய்வதற்கான மணிநேரம் இப்போது குறைக்கப்பட்டிருப்பதால் பள்ளிப் படிப்பை முடிக்கும் அதேசமயத்தில் பயனியர் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதைப் பற்றி அந்த டீனேஜர் சிந்திக்கிறார்.

18 நிமி: துணைப் பயனியர்களை பேட்டி காணுங்கள். இந்த மாதம் துணைப் பயனியர் செய்பவர்களையும் முன்பு செய்தவர்களையும் ஊழியக் கண்காணி பேட்டி காண்கிறார். அவர்கள் அனுபவித்திருக்கும் சில ஆசீர்வாதங்கள், அவர்கள் சாதித்திருக்கும் சில காரியங்கள், ஒவ்வொரு வருடமும் ஓரிரண்டு மாதமாவது துணைப் பயனியர் செய்ய அவர்கள் ஏன் விரும்புகின்றனர் ஆகியவற்றைக் கூறும்படி அவர்களை அழையுங்கள்.

பாட்டு 69, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்