நவம்பர் ஊழியக் கூட்டங்கள்
நவம்பர் 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஜூலை மாதத்தில் இந்தியா முழுவதும் செய்யப்பட்ட வெளி ஊழிய அறிக்கையையும் உள்ளூர் சபையின் வெளி ஊழிய அறிக்கையையும் பற்றி குறிப்பிடுங்கள்.
15 நிமி: “எல்லாரும் ‘வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ள’ வேண்டும்!” கேள்வி பதில். ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் பாரா 21-ல் இருந்து எடுக்கப்பட்ட கூடுதலான குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “எனக்கு ஒரு பைபிள் படிப்பு வேண்டும்!” ஊழிய கண்காணி சபையாருடன் கலந்தாலோசிக்கிறார். மறுசந்திப்பு செய்வதற்காக எல்லாரும் சேர்ந்து ஒருமனதாய் திட்டமிட்டு எடுக்கும் முயற்சிகள் உள்ளூர் சபையில் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படும் என்பதை விளக்குங்கள். அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகள் புதியவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்கு தங்களால் முடிந்தவரை முயலுவார்கள். மே 1998 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் பாராக்கள் 12 முதல் 15 வரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை மறுபடியும் கலந்தாலோசியுங்கள். மறுசந்திப்பில் வேதப்படிப்பை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பதை, திறமை வாய்ந்த ஒரு பிரஸ்தாபி நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். பைபிள் படிப்பு ஒன்றை புதிதாக தொடங்குவதற்கு எப்படியாவது பிரயாசப்படும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 35, முடிவு ஜெபம்.
நவம்பர் 9-ல் துவங்கும் வாரம்
13 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. கேள்விப் பெட்டி.
15 நிமி: சபையின் தேவைகள்.
17 நிமி: “கூட்டங்களில் பதில் சொல்வதன்மூலம் ஒருவரையொருவர் கட்டி எழுப்புங்கள்.” கேள்வி பதில். கூட்டங்களில் பதில் சொல்வது நம் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை விளக்குங்கள். (பள்ளி துணைநூல் புத்தகத்தில், 38-வது அதிகாரம், 4-வது பாராவைக் காண்க.) ஆரம்பத்தில் கூட்டங்களில் பதில் சொல்வதற்கு தங்களுக்கிருந்த தயக்கத்தை சிலர் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்பதையும் கூட்டங்களில் பதில் சொன்னதால் எந்தளவுக்கு பலனடைந்திருக்கிறார்கள் என்பதையும் விவரிக்கச் சொல்லுங்கள்.
பாட்டு 51, முடிவு ஜெபம்.
நவம்பர் 16-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். “இந்திய மொழிகளில் ஆத்துமா உபயோகிக்கப்படுதல்” என்ற தலைப்புடைய பெட்டியை கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: “வழிகாட்டும் கண்காணிகள்—தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணி.” பள்ளி கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. பள்ளி துணைநூல் புத்தகத்தில் 10-11 பக்கங்கள், 6 முதல் 12 வரையான பாராக்களை மறுபார்வை செய்யுங்கள்.
17 நிமி: “உங்கள் ஊழியத்தில் திறம்பட்டவர்களாய் இருங்கள்.” உட்சேர்க்கையிலிருந்து 1-7 பாராக்களை கேள்வி பதில் முறையில் கலந்தாராய்தல். உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமான குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பாட்டு 167, முடிவு ஜெபம்.
நவம்பர் 23-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். ஆகஸ்ட் 8, 1998, விழித்தெழு! பத்திரிகையின் பின்பக்க அட்டையில், மிகப் பெரிய மனிதர் புத்தகத்தால் மக்கள் எந்தளவுக்கு பயனடைந்திருக்கின்றனர் என்பதைப் பற்றிய அனுபவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை விவரியுங்கள். பொருத்தமான சந்தர்ப்பங்களில் இந்தப் புத்தகத்தை அளிக்க பிரஸ்தாபிகள் தயாராய் இருக்க வேண்டும்.
17 நிமி: “உங்கள் ஊழியத்தில் திறம்பட்டவர்களாய் இருங்கள்.” உட்சேர்க்கையிலிருந்து 8-21 பாராக்களை கேள்வி பதில் மூலம் கலந்தாராய்தல். உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமான குறிப்புகளை முக்கியமாய் கவனம் செலுத்துங்கள்.
20 நிமி: உங்களுடைய பைபிள் வாசிப்பை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகள். மே 1, 1995, காவற்கோபுரம், 16-17 பக்கங்களின் அடிப்படையிலான பேச்சு. தினந்தோறும் பைபிளை வாசிப்பதனால் பெறும் ஆவிக்குரிய நன்மைகளை முக்கியப்படுத்திக் காட்டுங்கள். கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை திரும்பவும் எடுத்துச்சொல்லுங்கள். அவற்றை எவ்வாறு பொருத்துவது என்பதை கலந்தாராயுங்கள். கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசிப்பதனால் தாங்கள் எவ்வாறு நன்மையடைகிறார்கள் என்பதைச் சொல்ல இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளை அழையுங்கள்.
பாட்டு 46, முடிவு ஜெபம்.
நவம்பர் 30-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். வெளி ஊழிய அறிக்கைகளை போடும்படி எல்லாரையும் நினைப்பூட்டுங்கள். நவம்பர் மாதத்தில் பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பிக்காதவர்கள், டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து அதற்காக முயற்சியெடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். அறிவு புத்தகமும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் அப்போது அளிக்கப்படும். அறிவு புத்தகத்தில் பக்கம் 19-ல் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியைப் பயன்படுத்தி மறுசந்திப்பு செய்வது எவ்வாறு என்பதை திறம்பட்ட ஒரு பிரஸ்தாபி நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். பைபிள் போதனைகளைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பிரஸ்தாபி விளக்குகிறார். பிறகு ஒரு படிப்பை ஆரம்பிக்கிறார்.
15 நிமி: யெகோவாவின் சாட்சிகளுடைய 1999-ம் வருட காலண்டரை நன்றாக பயன்படுத்துங்கள். பேச்சு. காலண்டரின் முக்கிய அம்சங்களை விமர்சியுங்கள்: (1) முக்கியமான பைபிள் நிகழ்ச்சிகளையும் போதனைகளையும் விளக்கிக் காட்டும் கண்கவர் வண்ணப் படங்கள், (2) தேவராஜ்ய ஊழியப்பள்ளிக்கான வாராந்தர பைபிள் வாசிப்பு அட்டவணை, (3) நினைவு ஆசரிப்புக்கு முந்தின வாரத்திற்கான வருடாந்தர பைபிள் வாசிப்பு அட்டவணை, (4) வரவிருக்கும் எழுத்துமுறை மறுபார்வை அறிவிப்புகள், (5) பத்திரிகை ஊழியத்தில் தவறாமல் பங்கேற்பதற்கு நினைப்பூட்டுதல்கள் ஆகியவை. கொடுக்கப்பட்டிருக்கும் காலியிடத்தைப் பயன்படுத்தும் வழிகளைக் கலந்தாலோசியுங்கள்: வெளி ஊழிய அட்டவணையைப் போடுவதற்கு, ஊழிய அறிக்கையைக் குறிப்பதற்கு, யார் யாரோடு சேர்ந்து மறுசந்திப்பு வேதப்படிப்புகளுக்குப் போவது என்பதைக் குறிப்பதற்கு, கூட்டங்களில் கொடுக்கப்போகும் பேச்சுக்களைக் குறிப்பதற்கு, வட்டார ஊழியரது சந்திப்புகள் மற்றும் வரவிருக்கும் அசெம்பிளிகளின் தேதிகளைக் குறிப்பதற்கு. வீட்டிலானாலும் சரி, வேலை பார்க்கும் இடத்திலானாலும் சரி, பளிச்சென்று தெரியும் இடத்தில் காலண்டரை மாட்டி வைத்தால், வேதப்பூர்வமான கலந்தாலோசிப்புகளை ஆரம்பிக்க அது வழிவகுக்கும். 1988 வருடாந்தர புத்தகத்தில் (ஆங்கிலம்) 8-வது பக்கத்திலிருக்கும் அனுபவத்தை விளக்கவும்.
15 நிமி: “தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள்.” மார்ச் 1997, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலிருந்து கொடுக்கப்படும் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். நற்செய்தியில் விருப்பம் காட்டிய எல்லாரையும் மறுசந்திப்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
பாட்டு 121, முடிவு ஜெபம்.