அறிவிப்புகள்
◼ அக்டோபர் பிரசுர அளிப்புகள்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்கள். சந்தா மறுக்கப்பட்டால், தனிப்பிரதிகளை அளிக்கலாம். நவம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளோடு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை அளிக்க வேண்டும். ஜனவரி: பாதிவிலைக்கு அல்லது விசேஷ விலைக்கு பட்டியலிடப்பட்ட ஏதேனும் 192 பக்க பழைய புத்தகம்.
◼ பின்வரும் பாதிவிலைக்குரிய புத்தகங்களும் (பயனியர்களுக்கு ரூபாய் 5.00, சபைக்கும் பொதுமக்களுக்கும் ரூபாய் 10.00) விசேஷ விலைக்குரிய புத்தகங்களும் (பயனியர்களுக்கும் சபைக்கும் பொதுமக்களுக்கும் ரூபாய் 2.50) கிடைக்கின்றன. ஜனவரி 1999 மாத பிரசுர அளிப்பிற்காக இந்த புத்தகங்களை சபைகள் இப்பொழுதே ஆர்டர் செய்யலாம்.
பாதிவிலை: உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் (மலையாளம்)
விசேஷ விலை: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? (ஆங்கிலம்); “உம்முடைய ராஜ்யம் வருவதாக” (ஆங்கிலம்/குஜராத்தி/ஹிந்தி/மராத்தி); “சமாதான பிரபுவின்கீழ்” உலகெங்கும் பாதுகாப்பு (ஆங்கிலம்); நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் (குஜராத்தி); நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு (குஜராத்தி); உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் (குஜராத்தி); “கடவுள் பொய்ச் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்” (கன்னடம்); ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் (மராத்தி/நேப்பாளி); பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் (மராத்தி).
◼ இந்த நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் “1999-க்குரிய தேவராஜ்ய ஊழியப்பள்ளி அட்டவணை” உள்ளது. 1999-ம் ஆண்டு முழுவதும் எடுத்துப் பார்பதற்காக இதை வைத்திருக்கவேண்டும்.
◼ சபை கூட்டங்கள் எந்த மொழியில் நடக்கிறதோ அந்த மொழியில் உள்ள தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணையை சபைகள் பின்பற்ற வேண்டும். ஆங்கில அட்டவணையை பின்பற்ற வேண்டாம். இது ஆஜராயிருக்கும் அனைவரும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நிகழ்ச்சியை தயாரித்து பயன்பெற உதவும்.
◼ உங்கள் சபையின் கூட்ட நேரங்கள் ஜனவரி 1 முதல் மாற்றப்படுமானால் அதற்காக புதிய கைப்பிரதிகளை ஆர்டர் செய்யுங்கள்.
◼ பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களுக்கு போன் வந்தால் இரவு 10 மணியிலிருந்து காலை 6:30 வரை இணைப்பு கொடுக்கப்படாது. நைட் டூட்டியில் இருக்கும் சகோதரர் ஏதாவது செய்திகள் இருக்குமானால் காலை 8 மணிக்கு மேல் சம்பந்தப்பட்ட நபரிடமோ அல்லது டிபார்ட்மெண்டிடமோ தெரியப்படுத்துவார். ஆனால் அவசர காரியங்களுக்கும், ஹாஸ்பிட்டல் இன்ஃபர்மேஷன் டெஸ்க்குக்கும் இது பொருந்தாது.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
துண்டுபிரதி எண் 13, நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்—அஸ்ஸாமிஸ்
கிடைக்கக்கூடிய புதிய ஆடியோ கம்பாக்ட் டிஸ்க்குகள்:
இசை—பாட்டு: ராஜ்ய பாடல்களைப் பாடுதல் (ஒரு டிஸ்க்)—ஆங்கிலம்
இசை—ஆர்கஸ்டிரா: கிங்டம் மெலடீஸ், 1-ஆம் எண்ணிலிருந்து 8-ஆம் எண் வரை (எட்டு டிஸ்க்குகள்) [தேவையான டிஸ்க்கின் எண்ணை குறிப்பிட்டு தனி டிஸ்க்காகவும் ஆர்டர் செய்யலாம்]
குறிப்பு: ஒரு டிஸ்க்கின் விலை பயனியர்களுக்கு ரூபாய் 100 பிரஸ்தாபிகளுக்கு ரூபாய் 120.