உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/98 பக். 2
  • ஜூலை ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • துணை தலைப்புகள்
  • ஜூலை 6-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 7/98 பக். 2

ஜூலை ஊழியக் கூட்டங்கள்

ஜூலை 6-ல் துவங்கும் வாரம்

பாட்டு 110

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டின் மற்றும் சபையின் ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையின்பேரில் குறிப்பு சொல்லுங்கள். தேவராஜ்ய செய்திகள்.

15 நிமி: “கூட்டங்களுக்கு தவறாமல் வருவதில்தான் எத்தனை இன்பம்!” கேள்விகளும் பதில்களும். கூட்டங்களுக்கு தவறாமல் வருவதற்கு இளைஞர்களை உற்சாகப்படுத்த ஜூன் 8, 1988, ஆங்கில விழித்தெழு!, பக்கங்கள் 19-21-ல் உள்ள குறிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

20 நிமி: “நம் அயலார் நற்செய்தியைக் கேட்க வேண்டும்.” சபையில் ஸ்டாக்கில் உள்ள சிற்றேடுகள் சிலவற்றை அளிப்பதற்கான ஆலோசனைகளை மறுபார்வை செய்ய இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளை ஏற்பாடு செய்யுங்கள். அவை ஏன் சபை பிராந்தியத்தில் பலன் தருபவையாய் இருக்கலாம் என்பதை விளக்குங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலோ அறிவு புத்தகத்திலோ பைபிள் படிப்பு ஆரம்பிப்பதை இலக்காக வைக்கும்படி வலியுறுத்துங்கள். முதல் சந்திப்பையும், பின்பு பைபிள் படிப்பை நடத்துகிற ஒரு மறுசந்திப்பையும் நடித்துக் காட்டச் செய்யுங்கள்.

பாட்டு 73, முடிவு ஜெபம்.

ஜூலை 13-ல் துவங்கும் வாரம்

பாட்டு 116

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ஐந்து வாரயிறுதிகள் இருப்பதால் ஆகஸ்ட் மாதத்தில் துணைப் பயனியர் செய்வதைக் குறித்து சிந்திக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி: சபை தேவைகள்.

20 நிமி: உலக ஆவி உங்களை விஷப்படுத்துகிறதா? அக்டோபர் 1, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 25-9-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.

பாட்டு 182, முடிவு ஜெபம்.

ஜூலை 20-ல் துவங்கும் வாரம்

பாட்டு 18

8 நிமி: சபை அறிவிப்புகள். “இருபதாயிரம்!” என்ற தலைப்பிலுள்ள பெட்டியை மறுபார்வை செய்தல்.

12 நிமி: “நன்மை பயக்கும் ஒரு சந்திப்பு.” இரண்டு மூப்பர் கலந்துரையாடுகிறார்கள். செப்டம்பர் 15, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 20-3-ல் உள்ள மேய்ப்புச் சந்திப்பின் நோக்கங்களை விளக்குங்கள். மூப்பர்களின் சந்திப்புக்களுக்காக ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள்.

25 நிமி: “பயனியர் சேவை—உங்களால் செய்ய முடியுமா?” (பாராக்கள் 1-14) ஊழியக் கண்காணி, ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்வதைக் குறித்து ஆழ்ந்து யோசிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்தி சுருக்கமான அறிமுக குறிப்புகளை கொடுக்கிறார். பிறகு அவர் முதல் கேள்வியை 1998 இயர் புக் பக்கங்கள் 104-5-ல் உள்ள “ஆர்வம் ததும்புகிற பயனியர் மனப்பான்மை” என்ற தலைப்பில் வரும் குறிப்புகளை சேர்த்து கலந்தாலோசிக்கிறார். கேள்வி 2-ஐ கலந்தாலோசிக்கையில் பயனியர் செய்த அனுபவமுள்ள இரண்டு அல்லது மூன்று பேர் அவரோடு சேர்ந்து கொள்கிறார்கள். பயனியர்கள் பொருள்சம்பந்தமான காரியங்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதைக் குறித்த நடைமுறையான, யதார்த்தமான நோக்குநிலையை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். பிறகு கேள்வி 3-ஐ கலந்தாலோசிக்கையில் இரண்டு பெற்றோர்கள் அந்தத் தொகுதியைச் சேர்ந்து கொள்கிறார்கள். முழுநேர ஊழியத்தை வாழ்க்கைப்பணியாக ஆக்குவதைப் பற்றி இளைஞர்கள் ஏன் ஆழ்ந்து யோசிக்கவேண்டும் என்பதற்கு அவர்கள் நம்பிக்கையூட்டுகிற காரணங்களை கொடுக்கிறார்கள். மீதமுள்ள கேள்விகள் அடுத்த கூட்டத்தில் சிந்திக்கப்படவிருப்பதால், அந்த வார ஊழியக் கூட்டத்துக்கும் வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 80, முடிவு ஜெபம்.

ஜூலை 27- ல் துவங்கும் வாரம்

பாட்டு 155

15 நிமி: சபை அறிவிப்புகள். அனைவரையும் ஜூலை மாதத்துக்கான ஊழிய அறிக்கைகளை போடும்படி நினைப்பூட்டுங்கள். ஆகஸ்ட்டின் முதல் வாரயிறுதிக்கான ஊழிய ஏற்பாடுகளைக் குறித்து அறிவித்து, அனைவரையும் பங்குபெறும்படி உற்சாகப்படுத்துங்கள். “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்” என்ற பகுதியை மறுபார்வை செய்யுங்கள்.

30 நிமி: “பயனியர் சேவை—உங்களால் செய்ய முடியுமா?” (பாராக்கள் 15-25) மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சும் கலந்தாலோசிப்பும். கேள்விகள் 4 மற்றும் 5-க்காக பயனியர்களும், முன்பு பயனியர் செய்தவர்களும் தங்களுடைய இருதயப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். நல்ல அட்டவணை வைத்து, அதை கடைப்பிடிக்க வேண்டியதன் தேவையை அவர்கள் வலியுறுத்துகிறார்கள், நடைமுறையில் பலன்தரக்கூடிய வாராந்தர ஊழிய அட்டவணைகளுக்கு சில உதாரணங்களை கொடுக்கிறார்கள். கேள்வி 6-க்கு பதிலளிக்கிற தூண்டுவிக்கும் பேச்சுடன் மூப்பர் முடிக்கிறார். ஊழிய ஆண்டின் துவக்கமாகிய செப்டம்பர் 1 புதிய பயனியர்கள் தங்களுடைய முழுநேர ஊழியத்தை ஆரம்பிப்பதற்கான உகந்த சமயமாக இருக்கிறது. சபையின் ஊழியக் குழுவிலுள்ள அங்கத்தினர் எவரிடமிருந்தாவது அவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பாட்டு 51, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்