உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/98 பக். 2
  • மே ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • துணை தலைப்புகள்
  • மே 4-ல் துவங்கும் வாரம்
  • மே 11-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 5/98 பக். 2

மே ஊழியக் கூட்டங்கள்

மே 4-ல் துவங்கும் வாரம்

பாட்டு 10

8 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.

15 நிமி: “யெகோவாவின் ஆவி நம்மோடு இருக்கிறது.” கேள்விகளும் பதில்களும். பாரா 3-ஐ நடத்தும்போது, 1998 வருடாந்தர புத்தகத்திலிருந்து பொருத்தமான பகுதிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

22 நிமி: “மக்களின் கருத்தைக் கவரும் கட்டுரைகளை தேர்ந்தெடுங்கள்.” கட்டுரையிலுள்ள முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். இன்னும் நல்ல நிலையிலுள்ள பழைய பத்திரிகைகளும்கூட இவ்விதமாக அளிக்கப்படலாம் என விளக்குங்கள். பிரஸ்தாபிகள் சிறப்பித்துக் காட்டியிருக்கிற எத்தகைய கட்டுரைகள் நல்ல பலன்களைத் தந்திருக்கின்றன என்பதை விவரிக்கும்படி சொல்லுங்கள். பாரா 7-ல் உள்ள அளிப்பை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

பாட்டு 212, முடிவு ஜெபம்.

மே 11-ல் துவங்கும் வாரம்

பாட்டு 197

8 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

12 நிமி: “கோடைக்காக என்ன திட்டம் போட்டிருக்கிறீர்கள்?” ஒரு மூப்பர் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுடன் கோடை மாதங்களுக்கான அவர்களுடைய திட்டங்களைப் பற்றி உரையாடுகிறார். தங்களுடைய ஊழிய நடவடிக்கையை அதிகரிப்பது, விடுமுறைக்குச் செல்வது, நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பது, மேலும் இந்த வருடத்தின் கடைசியில் மாநாட்டுக்கு ஆஜராவது ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளைப் பற்றி அவர்கள் மறுபார்வை செய்கின்றனர். தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள், வெளி ஊழியம் ஆகியவற்றை அசட்டை செய்யமாட்டோம் என அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர்; மேலும் தேவராஜ்ய காரியங்களை நன்கு செய்வதற்கு எப்படி திட்டமிடுகின்றனர் என்பதை விளக்குகின்றனர்.

25 நிமி: “தேவை—அதிக பைபிள் படிப்புகள்.” ஊழியக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சும் சபையினரோடு கலந்தாலோசிப்பும். சபையின் பைபிள் படிப்பு நடவடிக்கையை மறுபார்வை செய்யுங்கள். சபை நன்றாக செய்திருக்கிற அம்சத்தை பாராட்டுங்கள். குடும்பப் படிப்புகள் உட்பட, பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் இன்னும் அதிகமாக என்ன செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டுங்கள். குடும்பப் படிப்பை தவறாமல் நடத்திவரும் பெற்றோர் ஒருவரைப் பேட்டி காணுவதன் மூலம் பாரா 5-ஐ விளக்குங்கள். பாரா 8-ஐ வாசித்து, பட்டியலிடப்பட்டிருக்கும் எட்டுக் குறிப்புகளையும் வலியுறுத்துங்கள். பைபிள் படிப்பை நடத்துவதில் திறம்பட்டவராக இருக்கும் ஒரு பிரஸ்தாபியை அழைத்து, அனாவசியமாக நேரத்தை வீணடிக்காமல் பொருளை முழுமையாக அவரால் எப்படி கலந்தாலோசித்து முடிக்க முடிகிறது என்பதைப் பற்றி விவரிக்கும்படி கேட்டு, பாரா 13-ஐ விளக்குங்கள். சபை பிராந்தியம் எவ்வாறு நல்ல பலன்களை அடைந்திருக்கிறது என்பதை காண்பிக்க நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு அனுபவத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டு 48, முடிவு ஜெபம்.

மே 18-ல் துவங்கும் வாரம்

பாட்டு 141

8 நிமி: சபை அறிவிப்புகள்.

22 நிமி: “உங்களுக்கு ‘மாம்சத்திலே ஒரு முள்’ இருக்கிறதா?” கேள்விகளும் பதில்களும். நவம்பர் 15, 1987, ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கம் 29-ல் உள்ள “வாசகரிடமிருந்து கேள்விகள்” பகுதியிலிருந்து குறிப்பு சொல்லுங்கள்.

15 நிமி: கேள்விப் பெட்டி. முதல் கேள்விக்கான பதிலை சபைக்கு பொருத்துங்கள். குறிப்பிட்ட சில பிராந்தியங்கள் அணுக முடியாதவையாக இருக்குமானால், பகுத்துணர்வுக்கும் சாதுரியத்துக்குமான தேவையை கலந்தாலோசியுங்கள். இரண்டாவது கேள்வியை கையாளும்போது, உலகம் முழுவதுமுள்ள பெரும் அவலங்களை எதிர்ப்படுகிற சகோதரர்களுக்கு அக்கறை காட்டுவதை உற்சாகப்படுத்துவதற்கு சங்கத்தின் பிரசுரங்களிலுள்ள அனுபவங்களைப் பயன்படுத்துங்கள்.

பாட்டு 139, முடிவு ஜெபம்.

மே 25-ல் துவங்கும் வாரம்

பாட்டு 137

10 நிமி: சபை அறிவிப்புகள்.

15 நிமி: சபை தேவைகள்.

20 நிமி: சபை கூட்டங்களை நான் ஏன் உயர்வாய் மதிக்கிறேன். ஒழுங்காக ஆஜராகிறவர்களின் ஒரு தொகுதியோடு மூப்பர் கலந்துரையாடுகிறார்; அவர்கள் சபையின் பிரஸ்தாபிகளை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஒருவேளை ஒரு தம்பதி, ஒரு வயதானவர், ஒரு பருவ வயதினர் ஆகியோர் அதில் அடங்கியிருக்கலாம். தாங்கள் ஏன் தவறாமல் ஆஜராகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் சொல்கின்றனர்: அன்றாட பிரச்சினைகளை சமாளிக்கவும் ஆவிக்குரியவிதமாக தங்களை உறுதியாக வைத்திருக்கவும் உதவக்கூடிய நல்ல கூட்டுறவு, தெய்வீக போதனை, நியாயமான புத்திமதி. கூட்டங்களுக்கு தவறாமல் ஆஜராவதன் மூலம் நாம் அனைவரும் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்பதைக் குறிப்புகள் அழுத்திக்காட்டுகின்றன.

பாட்டு 222, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்