தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜனவரி 5 முதல் ஏப்ரல் 20, 1998, வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. அப்போஸ்தலர் 15:29-லுள்ள “சுகமாயிருப்பீர்களாக” என்ற கூற்று, ‘நீங்கள் இரத்தத்திற்கும் வேசித்தனத்திற்கும் விலகியிருப்பீர்களானால், உங்களுக்கு நல்ல சுகம் இருக்கும்’ என்று தெரிவிக்கும் ஒரு வாக்குறுதி ஆகும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 3/1 பக். 25 பாரா 7 அடிக்குறிப்பைக் காண்க.]
2 தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயண காலப் பகுதியின்போது, கொரிந்து கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய நலனின்மீது பவுல் வைத்திருந்த ஆழமான அக்கறையே, அவர்களுக்கு தன் முதல் கடிதத்தை எழுதும்படி அவரைத் தூண்டியது. [si பக். 210 பாரா 3]
3. கழுகுத் தலை தெய்வமான, ஹோரஸின் மெய்யான மறு அவதாரமாக பார்வோனை எகிப்தியர்கள் கருதினர். [w-TL96 1/15 பக். 24 பாரா 1]
4. அப்போஸ்தலர் 8:9-24-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் சம்பவத்திலிருந்து பெறப்பட்ட ஆங்கில வார்த்தையாகிய “சைமனி” என்பது மாயவித்தை செய்வதை அர்த்தப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 1/1 பக். 13 பாரா 8-ஐக் காண்க.]
5. ரோமர் 8:6, 7-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘மாம்சம்’ என்பது சுதந்தரிக்கப்பட்ட பாவ மனப்பான்மையுள்ள அபூரண மனிதர்களாக நம்முடைய நற்குணம் இழந்துபோன நிலையைக் குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 3/1 பக். 21 பாரா 4-ஐக் காண்க.]
6. பிற்பாடு யெகோவா, தானியத்தையும் நிலத்தின் மற்ற கனிகளையும் காணிக்கைகளாக ஏற்றுக்கொண்டார். எனவே, காயீனுடைய காணிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் அவனுடைய இருதய எண்ணத்தில் ஏதோ தவறு இருந்ததே. (ஆதி. 4:3-5) [w-TL96 6/15 பக். 4 பாரா 8]
7. கிறிஸ்தவர் ஒருவர், பைபிளின் ஒழுக்கப்பிரகாரமான ஆவிக்குரியபிரகாரமான தராதரங்களை தன்னுடைய வாழ்க்கையில் பொருத்தும்போது, அவர் யெகோவாவின் வார்த்தையால் தூய்மையாக்கப்படுகிறார்; யெகோவா தேவன் வெறுக்கும் எல்லா பழக்கவழக்கங்களிலிருந்தும் ‘சுத்தமாக கழுவப்படுகிறார்.’ (1 கொ. 6:9-11, NW) [w-TL96 1/1 பக். 30 பாரா 4]
8. கொரிந்துவிலிருந்த ஸ்தேவானின் வீட்டாருக்கு அப்போஸ்தலனாகிய பவுலே முழுக்காட்டுதல் கொடுத்தார். [w-TL96 6/15 பக். 29 பாரா 2]
9. அப்போஸ்தலர் 20:20, (NW)-லுள்ள “வீட்டுக்கு வீடு” என்ற சொற்றொடர், உடன் விசுவாசிகளின் வீடுகளில் நடத்திய மேய்ப்பு சந்திப்பையே முக்கியமாக குறிப்பிடுகிறது. ஏனெனில், சபையிலிருந்த மூப்பர்களை நோக்கி பவுல் பேசியதாகவே சூழமைவு காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 1/15 பக். 11 பாரா 5-ஐக் காண்க.]
10. ஆவிக்குரிய காரியங்களுக்கு போற்றுதல் தெரிவிக்கும் விதமாக நம்முடைய இருதயத்தை நாம் பயிற்றுவித்து, இதன் சம்பந்தமாக உதவியளிக்க கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காக ஜெபித்தால் அப்போது நாம் ‘மாம்ச சிந்தையைத்’ தவிர்ப்போம். (ரோ. 8:6, 7) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 3/1 பக். 21 பாரா 5-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11 . ஜீவனுக்குரிய பாதையில் ஒருவரை வழிநடத்தும் திருத்தமான அறிவைப் பெற, வெறுமனே கடவுளுடைய வார்த்தையை வைத்திருப்பதும் தனிப்பட்ட விதமாக அதைப் படிப்பதும் மட்டுமே போதாது என்பதை அப்போஸ்தலர் புத்தகத்திலுள்ள எந்தப் பதிவு காட்டுகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 9/1 பக். 19 பாரா 16-ஐக் காண்க.]
12. குற்றம் காணும் மனநிலையோடு நம் ஆவிக்குரிய சகோதரர்களை நியாயந்தீர்ப்பதிலிருந்து எது நம்மை தடுக்க வேண்டும்? [w-TL96 3/15 பக். 22 பாரா 5]
13. மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள், “தெய்வீக அருளினால்” என்ற கருத்தை உட்படுத்தும் விதமாக அப்போஸ்தலர் 11:26-ஐ மொழிபெயர்க்காத போதிலும், ‘தெய்வீக அருளினால் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டார்கள்’ என்ற வார்த்தைகளை புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிள் ஏன் உபயோகிக்கிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 1/1 பக். 19 பாரா 19-ஐக் காண்க.]
14. தன்னுடைய கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட ஒரு கிறிஸ்தவ மனைவிக்கு எது உதவும்? (எபே. 5:33) [w-TL96 3/1 பக். 21 பாரா 5]
15. அப்போஸ்தலர் 17:11-ல் எவ்வகையான தனிப்பட்ட படிப்பு உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறது? [si பக். 205 பாரா 38]
16. ரோமிலிருந்து கிறிஸ்தவர்களுக்கான பவுலின் கடிதத்தில், யூதர்களையும் புறஜாதியாரையும் பற்றிய எதை அவர் உறுதியாக ஸ்தாபித்தார்? [si பக். 206 பாரா 2]
17. ரோமர் 12:2-ன்படி தேவனுடைய வார்த்தையின் வல்லமையால் எந்தளவுக்கு கிறிஸ்தவர்களின் ஆளுமைகள் மாற்றமடைகின்றன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL90 11/1 பக். 23 பாரா 3-ஐக் காண்க.]
18. ரோமர் 11:25-ல் (NW) பவுல் குறிப்பிடுகிற “பரிசுத்த இரகசியம்” எது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w83 8/15 பக். 16 பாரா 16-ஐக் காண்க.]
19. மனந்திரும்பாத குற்றவாளிகளை கிறிஸ்தவ சபை சபைநீக்கம் செய்வது ஏன் நியாயமானது? (1 கொ. 5:11, 13) [வாராந்தர பைபிள் வாசிப்பு; g-TL96 9/8 பக். 27 பாரா. 2-3-ஐக் காண்க.]
20. அக்கினித்தழலை எதிரியின் தலையின்மேல் குவிப்பது எப்படி தீமையை வெல்லுவதில் உதவும்? (ரோ. 12:20, 21) [வாராந்தர பைபிள் வாசிப்பு; g-TL86 10/8 பக். 6 பாரா 5-ஐக் காண்க.]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. _________________________-லுள்ள தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றமடைந்தது என்பதை பிலிப்பு அந்த எத்தியோப்பிய மந்திரிக்கு விளக்கினார்; அதனால், அறிவொளியூட்டப்பட்ட அவர் தன்னை _________________________ தாழ்மையோடு வேண்டிக் கொண்டார். (அப். 8:28-35) [si பக். 204 பாரா 33]
22. _________________________பற்றிய காரியத்தில் விவாதம் எழுந்தபோது, “அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது” என்று தன்னுடைய தீர்மானத்தை சொல்வதன் மூலம் _________________________ஆதாரமளித்தார். (அப். 15:15-18) [வாராந்தர பைபிள் வாசிப்பு; si பக். 204 பாரா 33-ஐக் காண்க.]
23. _________________________என்ற குணம், ‘மற்றவர்களை நம்மிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணும்படி’ நமக்கு உதவிசெய்கையில், _________________________ ‘தீமையைச் சகிக்கிறவர்களாக’ இருக்கும்படி நம்மை செய்விக்கிறது. (பிலி. 2:3; 2 தீ. 2:24, 25) [w-TL96 5/15 பக். 21 பாரா 5]
24. ரோமர் 11-ல், அடையாள அர்த்தமுள்ள ஒலிவ மரத்தைப்பற்றிய பவுலின் விவரிப்பின்படி, இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் ஆபிரகாமிலிருந்து ஈசாக்கின் வழியாக வந்ததுபோலவே அடையாள அர்த்தமுள்ள _________________________12 கோத்திரங்களும் _________________________வழியாக வருகின்றன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w83 8/15 பக். 16 பாரா 15-ஐக் காண்க.]
25. _________________________வனாந்தரத்தில் முகாமிட்டிருந்த இஸ்ரவேலர்களை யெகோவா காத்து வந்தது போலவே இந்த_________________________நம்மை அவர் காத்துவர முடியும். [w-TL96 8/15 பக். 7 பாரா. 1-2]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. அப்போஸ்தலர் 17-ம் அதிகாரத்திலுள்ள பவுலின் சொற்பொழிவிற்குப் பின்பு, அவர் ஜீவனுள்ள தேவனின் (அரசதிகாரத்தை; நீதியை; அன்பை) சாதுரியமாக நிலைநாட்டுகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; si பக். 204 பாரா 37-ஐக் காண்க.]
27. ஊக்கந்தளராமல் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததற்கு (பெரோயா, மக்கெதோனியா; எருசலேம்) மக்களை (பவுல்; பேதுரு; லூக்கா) மனமாரப் பாராட்டினார். (அப். 17:11) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 5/1 பக். 14 பாரா 3-ஐக் காண்க.]
28. ரோமர் 1:25-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பொய் அல்லது பொய்மை (விக்கிரகாராதனையை; அசுத்தமான பாலுறவு பழக்கங்களை; பொய் பேசுவதை) குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 2/15 பக். 6 பாரா 6-ஐக் காண்க.]
29. காரியங்கள் தவறாக நடக்கையில் அதற்கான காரணம் பெரும்பாலும் (ஜனங்களே; கடவுளும் கிறிஸ்துவுமே; சாத்தானும் பிசாசுகளுமே). [w-TL96 9/1 பக். 5 பாரா 3]
30. பவுல் (ரோமாபுரி; எபேசு; கொரிந்து)-ல் இருக்கையில், ஏறக்குறைய பொ.ச. (52; 55; 56)-ம் ஆண்டில் தன்னுடைய முதல் கடிதத்தை கொரிந்தியருக்கு எழுதினார். [si பக். 210 பாரா 3]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
நீதி. 17:27; பிர. 9:11; மத். 10:16; அப். 10:34, 35; 2 கொ. 4:18
31. யெகோவாவின் ஊழியராக, நாம் எல்லா இனத் தொகுதிகளிலிருந்து வரும் ஜனங்களையும் அவர் நோக்கும் விதமாகவே நோக்கவேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 8/1 பக். 8 பாரா 6-ஐக் காண்க.]
32. நம்முடைய தற்போதைய சூழ்நிலைகளுக்கு அப்பால் கிறிஸ்தவ வாழ்க்கைப் போக்கின் சந்தோஷமான இறுதி பலன்மீது நம்முடைய கண்களை ஊன்ற வைக்க வேண்டும். [w-TL96 2/15 பக். 27 பாரா. 3-4]
33. மனதைப் புண்படுத்தும் எதையாவது உளறிக் கொட்டும்படியான நம்முடைய உள்ளத் தூண்டுதலைக் கட்டுப்படுத்துவதற்கு, தெளிந்துணர்வும் சகோதர அன்பும் நமக்கு உதவிசெய்யும். [w-TL96 5/15 பக். 22 பாரா 7]
34. துன்புறுத்தலை எதிர்ப்படுகையில், மெய்க் கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு ராஜ்ய செய்தியை அறிவிப்பதில் புத்திசாலித்தனத்தையும் தூய்மையையும் ஒன்றுசேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. [w-TL96 7/15 பக். 22 பாரா 4]
35. விபத்துகளுக்கு சிருஷ்டிகர் காரணமாய் இருக்கிறார் அல்லது விபத்துக்களுக்கு உட்படுபவர்கள் ஏதோ ஒரு வழியில் தண்டிக்கப்படுகின்றனர் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. [w-TL96 9/1 பக். 5 பாரா 4]