தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 22, 1997 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. அறிவுள்ள சிருஷ்டிகளுக்குத் தெரிவுசெய்யும் சுயாதீனத்தைக் கடவுள் அளித்திராவிட்டால் பொல்லாங்கு இருந்திருக்காது. [rs-TL பக். 428 பாரா 2]
2. லூக்கா 22:30-லும் மத்தேயு 19:28-லும் குறிப்பிடப்பட்டுள்ள ‘இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்’ என்பது ஒரே முக்கியத்துவத்தை உடையதாயிருக்கிறது. கிறிஸ்துவின் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட உடன் ஆசாரியர்கள் மட்டுமல்லாமல் மனிதவர்க்கத்திலுள்ள மற்றவர்களும் இந்தப் பொருத்தத்தில் உட்படுகின்றனர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 3/1 பக். 27 பாரா 10; பக். 28 பாரா 12-ஐக் காண்க.]
3. இயேசு சமாரியப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து அவரது சீஷர்கள் ஆச்சரியப்பட்டதற்கான காரணம், அவள் ஒழுக்கக்கேடான வாழ்க்கை பின்னணி உடையவளாக இருந்ததுதான். (யோவா. 4:27) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 7/15 பக். 15 பாரா. 1-2-ஐக் காண்க.]
4. யோவான் 6:64-ல் சொல்லப்பட்ட ‘ஆதிமுதல்’ என்ற சொற்றொடர் யூதாஸை அப்போஸ்தலனாக தேர்ந்தெடுத்த அந்த சமயத்திலேயே, தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறது இவன்தான் என்பதை இயேசு அறிந்திருந்தார் என்று சுட்டிக்காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; it-2 பக். 129 பாரா. 4-6-ஐக் காண்க.]
5. யாத்திராகமம் 21:22, 23, இன்னும் பிறவாத மனித சிசுவை கடவுள் மதிப்புள்ளதாகக் கருதுகிறார் என்பதை நாம் மதித்துணர உதவிசெய்கிறது. [kl-TL பக். 128 பாரா 21]
6. ஒன்று பேதுரு 3:3, 4, மேலாடைகளை அணியக்கூடாதென குறிக்காததைப் போலவே, அடக்கமான நியாயமான ஆபரணங்களையும் சிங்காரிப்பு பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என்பதையும் குறிப்பதில்லை. [rs-TL பக். 435 பாரா 1.]
7. யோவான் 5:1-ல் சொல்லப்பட்டுள்ள “யூதருடைய பண்டிகை” பொ.ச. 31-ன் பஸ்காவைக் குறிக்கிறது. [si பக். 194 பாரா 8]
8. உடன் வணக்கத்தார் நம்மை புண்படுத்திவிட்டால் அவரிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லாமல் அவரை நம் வாழ்க்கையினின்றே தூர விலக்கி வைக்க முயற்சிப்பது தவறானது. [uw-TL பக். 134 பாரா 7]
9. சமூக அதிகாரங்கள் நீதியாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கிறிஸ்தவர்கள் உள்ளூர் சட்டத்தின்படி சரிவர திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும். [kl-TL பக். 122 பாரா 11]
10. எபேசுவில் இருந்தபோது ‘அப்போஸ்தலர்’ புத்தகத்தை லூக்கா எழுதினார். [si பக். 199 பாரா 3]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. முதல் நூற்றாண்டிலிருந்த எபேசிய கிறிஸ்தவர்களின் முன்மாதிரிக்கு இசைவாக, பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்பதற்கு தேவையான ஒரு படி என்ன? (அப். 19:19) [kl-TL பக்.114 பாரா 14]
12. நோவாவின் நாளில் சில தேவதூதர்கள் எப்படி பாவம் செய்தனர்? [kl-TL பக். 109 பாரா 4]
13. ஆஸ்தி சம்பந்தமான ஒரு வாக்குவாதத்தில் தலையிட இயேசு ஏன் மறுத்தார்? (லூக். 12:13, 14) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 4/1 பக். 28-ஐக் காண்க.]
14. அப்போஸ்தலர் 1:6-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி ராஜ்யத்தை இஸ்ரவேலுக்கு திரும்பக் கொடுப்பீரோ என்று சீஷர்கள் இயேசுவிடம் கேட்டபோது அவர்கள் எதை அறியாதிருந்தார்கள்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL90 12/1 பக். 25 பாரா 4-ஐக் காண்க.]
15. நிலைத்துநிற்கும் திருமணத்திற்கு உதவும் இரண்டு அம்சங்களைக் குறிப்பிடுங்கள். [uw-TL பக். 140 பாரா 4]
16. குறிப்பிட்ட சில சமயங்களில் கிறிஸ்தவ பெண்கள் ஏன் தலையில் முக்காடிட்டுக் கொள்கிறார்கள்? [rs-TL பக். 433 பாரா 3]
17. யோவான் 1:1-ஐ மற்ற மொழிபெயர்ப்புகள் “அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்று மொழிபெயர்த்திருக்கும்போது புதிய உலக மொழிபெயர்ப்பு “அந்த வார்த்தை ஒரு தேவனாயிருந்தது” என்று ஏன் மொழிபெயர்க்கிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; rs-TL பக். 212 பாரா 5-ஐக் காண்க.]
18. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டதற்கு இசைவாக, “ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்கள்” மனந்திரும்பி தங்களுடைய வழியை மாற்றிக்கொள்ளாவிட்டால் எங்கே அவர்கள் அழிக்கப்படுவார்கள்? [kl-TL பக். 112 பாரா 8]
19. இயேசு ஒரு பரிபூரணமான மனிதராகவும் போதகராக தம்முடைய பங்கை அறிந்தவராகவும் இருந்ததால், “நல்ல போதகரே” என்று தாம் அழைக்கப்படுவதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? (லூக். 18.18, 19) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 3/1 பக். 15 பாரா 7-ஐக் காண்க.]
20. யோவான் 13:34-ல் சொல்லப்பட்ட கட்டளையில் அடங்கிய புதிய அம்சம் என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 2/1 பக். 21 பாரா. 5-6-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. நமக்கு விரோதமாக நம் சகோதரனுக்கு ஏதாவது மனஸ்தாபமிருப்பதை நாம் அறியவந்தால் முன்முயற்சி எடுக்கவும் _________________________ திரும்ப நிலைநாட்டுவதற்குப் பிரயாசப்படவும் _________________________ அதோடுகூட _________________________ தேவைப்படுகிறது. [uw-TL பக். 135 பாரா 10]
22. “பத்து ராத்தல்” என்பது ஆவியால் பிறப்பிக்கப்பட்ட சீஷர்கள் பரலோக ராஜ்யத்திற்கு இன்னும் அதிகமான _________________________ உண்டாக்குவதில் உபயோகப்படுத்தக்கூடிய _________________________ பிரதிநிதித்துவம் செய்கிறது. (லூக். 19:13) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 10/1 பக். 8-ஐக் காண்க.]
23, யூதேயாவின் ரோம ஆளுநரான பிலாத்துவிடம், இவன் தன்னை _________________________ என்றும் _________________________ செலுத்த வேண்டியதில்லையென்றும் சொல்வதோடு _________________________ கலங்கப்படுத்தவும் கண்டோம் என்பதாக இயேசுவுக்கு விரோதமாக யூதர்கள் மூன்று குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள். (லூக். 23:2) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 12/1 பக். 9 பாரா 1.-ஐக் காண்க.]
24. உண்மைக் கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு _________________________ கொடுப்பதன் காரணமாக கிறிஸ்மஸை அல்லது பொய் மத நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்ட வேறு எந்த விடுமுறைகளையும் கொண்டாடுவதில்லை; அவர்கள் பாவமுள்ள மனிதர்களை அல்லது தேசங்களை _________________________ விடுமுறைநாட்களையும்கூட கொண்டாடுவதில்லை. [kl-TL பக். 126 பாரா 16]
25. பைபிள் மாணாக்கர்களாக, பொருளை ஆராய்ச்சி செய்வதற்கு கிடைக்கும் பொருளடக்க அட்டவணைகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு கேள்விக்கும் _________________________ அல்லது _________________________ என்ற பதிலை எதிர்பார்க்கக் கூடாது; மேலும் _________________________ மற்றும் நம்முடைய குடும்ப அங்கத்தினர்களுக்கான அன்பை வெளிப்படுத்துகிற _________________________ செய்ய வேண்டும். [uw-TL பக். 144 பாரா 13]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. அப்போஸ்தலன் பேதுருவின் பிரகாரமாக யெகோவாவின் (தயவு; அன்பு; பொறுமை) நாம் (மனந்திரும்புவதற்கு; விசுவாசத்திற்கு; கீழ்ப்படிவதற்கு) வேண்டிய வாய்ப்பை நம்முடைய நாள் வரையாக நீட்டப்பட்டிருப்பதை மெய்ப்பித்துக்காட்டுகிறது. (2 பே. 3:9) [rs-TL பக். 429 பாரா 2]
27. (அறிவியலை; பொய்மதத்தை; இயேசு கிறிஸ்துவை) பற்றிய சத்தியம் மக்களை விடுவிக்கும் சத்தியமாக இருக்கிறது. ஏனென்றால் இது மட்டுமே (பொய் போதகங்களிலிருந்து; உலக பிரச்சாரத்திலிருந்து; மரணத்தை பிறப்பிக்கும் பாவத்திலிருந்து) நம்மை விடுவிக்கமுடியும். (யோவா. 8:12-36) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 5/1 பக் 9 பாரா 5-ஐக் காண்க.]
28. நாம் தேவ பக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது (நாம் எப்போதும் மற்றவர்களைவிட நன்றாக நடத்தப்படுவோம்; பொருளாதார செழுமையை நாம் இப்போது அனுபவிப்போம்; நாம் சரியானதை செய்துகொண்டிருப்பதால் கடவுளுடைய அங்கீகாரப் புன்முறுவலைப் பெறுவோம்) என்பதற்கு உத்தரவாதமளிக்கிறது. [kl-TL பக். 188 பாரா 2]
29. “இவற்றைக்காட்டிலும் அதிகமாய் நீ என்னை நேசிக்கிறாயா” என்று அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு கேட்டபோது, (மற்ற சீஷர்களைக்காட்டிலும்; மற்ற சீஷர்கள் இயேசுவை நேசித்ததைக்காட்டிலும்; மீன்கள் போன்ற இவற்றை நேசித்ததைக்காட்டிலும்) தம்மை அதிகம் நேசித்தாரா என்பதைக் குறித்து பேதுருவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். (யோவா. 21:15, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 11/1 பக். 31 பாரா 9-ஐக் காண்க.]
30. யோவான் 10:16-ல் சொல்லப்பட்ட ‘வேறே ஆடுகள்’ என்பது (புறஜாதி கிறிஸ்தவர்களை; யூத கிறிஸ்தவர்களை; யாரெல்லாம் பரதீஸிய பூமியில் வாழ்வதற்கான சிலாக்கியம் பெறுகிறார்களோ அவர்களை) குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 4/15 பக். 31 பாரா 4-ஐக் காண்க.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
யாத். 31:12 13; நீதி. 3:9, 10; மத். 5:14-16; லூக். 9:60, 62; 13:4, 5
31. இயேசு தமக்குச் செவிகொடுத்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நன்றாக அறிந்திருந்த சோக நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு விதியைப்பற்றிய விளக்கத்துக்கு எதிராக தர்க்கித்தார். அதற்கு காரணம் சமயமும் எதிர்பாரா சம்பவமுமே என்று சொன்னார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 9/1 பக். 5 பாரா 5-ஐக் காண்க.]
32 மோசேயின் நியாயப்பிரமாணம் மனிதவர்க்கம் முழுவதும் கைக்கொள்ளும்படி ஒருபோதும் கருதப்படவில்லை. [uw-TL பக். 147 பாரா 5]
33. கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க தேவையானது ஒருமுகப்படுத்தப்பட்ட பக்தியே. [si பக். 192 பாரா 32]
34. மெய்வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக நம்முடைய சக்தி, பணம் உட்பட மற்ற வள ஆதாரங்களைப் பயன்படுத்தும்போது யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார். [kl-TL பக். 120 பாரா 8]
35. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் கடவுளுடைய பெயரையும் நோக்கத்தையும் குறித்து உலகத்துக்கு சுறுசுறுப்பாய்ச் சாட்சிகொடுப்போராய் இருக்கவேண்டும். [rs-TL பக். 438 பாரா 4]