அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: ராஜ்ய செய்தி எண் 35-ன் விநியோகம் தொடரும். ராஜ்ய செய்தி எண் 35-ன் கையிருப்பு தீர்ந்ததும், அறிவு புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். டிசம்பர்: பின்வரும் மூன்று புத்தகங்களில் ஏதாவது ஒன்றை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், (சிறியது 25.00 ரூபாய்க்கு), என்னுடைய பைபிள் கதை புத்தகம், (சிறியது 30.00 ரூபாய்க்கு), அல்லது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். மாற்று அளிப்பாக, நம் ராஜ்ய ஊழியத்தில் ஜூலை மாத அளிப்புக்காக பட்டியலிடப்பட்டிருந்த விசேஷ விலை புத்தகங்களில் எதையாவது 2.50 ரூபாய்க்கு அளிக்கலாம். ஜனவரி: பாதி விலைக்கு அல்லது விசேஷ விலைக்கு கொடுக்கும்படி சங்கத்தால் பட்டியலிடப்பட்டிருக்கிற 192-பக்க பழைய புத்தகங்களில் எதையாவது அளிக்கலாம். உள்ளூர் மொழியில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லாத சபைகளில், அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய்க்கு (பெரியது 45.00 ரூபாய்க்கு) அளிக்கலாம்; அல்லது சங்கத்தால் பாதி விலைக்கு அல்லது விசேஷ விலைக்கு கொடுக்கும்படி பட்டியலிடப்பட்டிருக்கிற 192-பக்க பழைய புத்தகங்களில் எதையாவது அளிக்கலாம். உள்ளூர் மொழியில் அப்படிப்பட்ட புத்தகங்கள் இல்லாத சபைகளில், அறிவு அல்லது குடும்ப மகிழ்ச்சி புத்தகங்கள் ஒவ்வொன்றையும் 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.
◼ நவம்பர் 16-ல் விசேஷ அளிப்பு ஏற்பாடு முடிந்த பிறகு, ராஜ்ய செய்தி எண் 35-ஐ இன்னும் கையிருப்பில் வைத்துள்ள சபைகள், வீட்டுக்குவீடு ஊழியத்திலோ, வேறெந்த முறையிலான ஊழியத்திலோ, துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தும் அதே விதத்தில் இவற்றையும் அளிக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்தலாம். உகந்த சந்தர்ப்பத்தில், பூட்டப்பட்ட வீடு ஒவ்வொன்றிலும் ஒரு துண்டுப்பிரதியை பிரஸ்தாபிகள் விட்டுச்செல்லலாம்; ஆனால், வழிப்போக்கர்களால் அது காணப்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமான செய்தியடங்கிய இந்தப் பிரதிகளில் மீந்துள்ளவை அனைத்தையும் விநியோகிக்க முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
◼ ஜனவரி 1998 முதல், “யெகோவாவின் இரட்சிக்கும் வல்லமையில் நம்பிக்கை வையுங்கள்” என்ற பொதுப் பேச்சையும், “யெகோவாவுக்குப் பயந்து நடக்கும் சபைகள்—நன்னடத்தையைக் காத்துக்கொள்கின்றன” என்ற முடிவான ஊழியப் பேச்சையும் தங்களுடைய சந்திப்பின்போது வட்டார கண்காணிகள் கொடுப்பார்கள். வியாழக்கிழமை (அல்லது வெள்ளிக்கிழமை) கொடுக்கப்படும் அவர்களுடைய முதல் ஊழியப் பேச்சின் தலைப்பு: “‘எல்லா இடங்களிலேயும்’ கடவுளைப் பற்றிய அறிவின் வாசனையைப் பரப்புதல்.”