நவம்பர் ஊழியக் கூட்டங்கள்
நவம்பர் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டின் மற்றும் உள்ளூர் சபையின் ஜூலை மாத ஊழிய அறிக்கையின்பேரில் குறிப்புகள் சொல்லுங்கள்.
15 நிமி: “சுறுசுறுப்பான செயலுக்கான பெரிய கதவு திறந்திருக்கிறது.” சபையாரை கலந்தாலோசிப்பில் உட்படுத்தும், மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. பிரசங்க வேலையில் இன்னும் அதிகமாக ஈடுபடும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1988, பக்கம் 22-ல் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் சிலவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
20 நிமி: “ராஜ்ய செய்தியில் ஆர்வம் காண்பித்தோரை மறுபடியும் சந்தியுங்கள்.” கேள்விகளும் பதில்களும். பாரா 6-ல் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை நடித்துக்காட்டுங்கள். அவற்றுள் ஒன்றில், ஒரு பைபிள் படிப்பு தொடங்கப்படுவதாகக் காட்டுங்கள்.
பாட்டு 144 மற்றும் முடிவு ஜெபம்.
நவம்பர் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ராஜ்ய செய்தி எண் 35-ஐ இன்னும் விநியோகிக்க மீதமுள்ள பிராந்தியங்களை சபைக்கு அறிவியுங்கள். இந்த விசேஷ அளிப்பு ஏற்பாட்டின் கடைசி வாரத்தில் முழுமையாக பங்குபெற அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “சத்தியத்தில் இல்லாத துணைகளை அணுகுங்கள்.” சத்தியத்திலில்லாத துணைவர்களைப் பற்றி தனிப்பட்ட வகையில் தெரிந்துகொள்வதைக் கருத்தில்கொண்டுள்ள இரண்டு மூப்பர்களின் கலந்தாலோசிப்பு. காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1990, பக்கங்கள் 23-24, பாராக்கள் 6-9-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளையும் அவர்கள் கருத்தில்கொள்கிறார்கள். காவற்கோபுரம், அக்டோபர் 1, 1995, பக்கங்கள் 10-11, பாராக்கள் 11-12-ல் இருக்கும் அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 148 மற்றும் முடிவு ஜெபம்.
நவம்பர் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ராஜ்ய செய்தி எண் 35-ன் அளிப்பு ஏற்பாட்டிலிருந்து பெற்ற உள்ளூர் அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
15 நிமி: “இன்டர்நெட்டில் நற்செய்தி.” இந்தக் கட்டுரையை விளக்குவதற்கு, ஜூலை 22, 1997 விழித்தெழு! பத்திரிகையிலுள்ள தகவலைப் பயன்படுத்துங்கள். முக்கியக் குறிப்பை—சட்டப்பூர்வமாய் கிடைக்கும் சாதனங்கள் அனைத்தையும், மக்களுக்கு நற்செய்தியை அளிக்க பயன்படுத்துவதே நம் ஆவல் என்பதை—எடுத்துரையுங்கள்.
20 நிமி: ஒப்பற்ற இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்ளுங்கள்! காவற்கோபுரம், நவம்பர் 15, 1996, பக்கங்கள் 21-3-ன் அடிப்படையிலான பேச்சு.
பாட்டு 151 மற்றும் முடிவு ஜெபம்.
நவம்பர் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “நான்கு-வண்ண அச்சு இயந்திரங்கள்” என்ற பெட்டியைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: சபை புத்தகப் படிப்பில் நல்ல நடத்தைமுறை. புத்தகப் படிப்பு நடத்துவதற்காக தங்கள் வீட்டை அளிக்க முன்வரும் குடும்பங்களின் உபசரிக்கும் தன்மையை நாங்கள் போற்றுகிறோம். இது, கணிசமான தயாரிப்பையும் அசௌகரியத்தையும் உட்படுத்தலாம். புத்தகப் படிப்பில் கலந்துகொள்ளும்போது, நல்ல நடத்தைமுறையை நாம் காட்ட வேண்டும்; மரியாதையையும் கரிசனையையும் காட்ட வேண்டும்; இவை பின்வருபவற்றை உள்ளடக்கும்: (1) தரைகளையோ, கம்பள விரிப்புகளையோ அழுக்காக்குவதைத் தவிர்ப்பதற்காக, உள்ளே நுழைவதற்கு முன்பு, கவனத்துடன் நம் கால்களைத் துடைத்துவிட்டுச் செல்ல வேண்டும்; அல்லது, ஷூக்களைக் கழற்றுவது பழக்கமாய் இருந்தால், அவ்வாறு செய்யவேண்டும். (2) பெற்றோர் தங்கள் பிள்ளைகளை மேற்பார்வை செய்ய வேண்டும்; அவர்கள் நன்றாக நடந்துகொள்கிறார்களா என்பதையும், புத்தகப் படிப்பிற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்குள் அமைதியாய் இருக்கிறார்களா என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். (3) புத்தகப் படிப்புத் தொகுதி சிறியதாயும், அதன் சூழல் ஒரு சாதாரண சூழலாயும் இருக்கும் அதே சமயத்தில், இது ஒரு சபைக் கூட்டமாய் இருக்கிறது; ஆகவே ராஜ்ய மன்றத்துக்குச் செல்லும்போது நாம் அணிவதைப் போலவே உடை அணிய வேண்டும். (4) கூட்டத்துக்குப் பிறகு அளவளாவுவது சுருக்கமாய் இருக்க வேண்டும்; அப்போதுதான் அந்த வீட்டுக்காரருக்குரிய தனிப்பட்ட நேரம் பாதிக்கப்படாமல் இருக்கும். (5) எப்பொழுதாவது, படிப்பு நடத்தப்படும் வீட்டுக்காரர் படிப்பு முடிந்ததும், எளிய சிற்றுண்டியை வழங்க முன்வரலாம் என்றாலும், அது எதிர்பார்க்கப்படுவதுமில்லை தேவைப்படுவதுமில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
20 நிமி: சீஷராக்கி, அவர்களுக்குக் கற்பியுங்கள். ஒரு தொகுதியாக, மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகளிடம் மூப்பர் கலந்தாலோசிப்பை நடத்துகிறார். நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 88-92-ஐ அடிப்படையாக வைத்து, பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்: (1) திறம்பட்ட ஊழியத்திற்கு, மறுசந்திப்புகள் செய்வது ஏன் தேவையாய் இருக்கிறது? மறுசந்திப்பு வேலையின் சவாலை ஒருவர் எவ்வாறு சமாளிக்கலாம்? (2) பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு நாம் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? படிப்புகளை நடத்துவதில் நாம் எவ்வாறு திறம்பட்டவர்களாகலாம்? (3) மாணாக்கர்களை அமைப்பினிடம் வழிநடத்துவது ஏன் முக்கியம்? இதை நாம் எவ்வாறு செய்யலாம்? இந்த விஷயங்களில் சமீபத்திய நம் ராஜ்ய ஊழியம் ஜூன் 1996 மற்றும் மார்ச், ஏப்ரல் 1997 உட்சேர்க்கைகள் எவ்வாறு தங்களுக்கு உதவியிருக்கின்றன என்பதை அந்தத் தொகுதி தெரிவிக்கிறது.
பாட்டு 160 மற்றும் முடிவு ஜெபம்.