ஜூலை ஊழியக் கூட்டங்கள்
ஜூலை 1-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். அந்த நாட்டுக்கும் உள்ளூர் சபைக்குமான ஏப்ரல் வெளி ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.
15 நிமி: “நம்முடைய பொருத்தனையைத் தினந்தோறும் நிறைவேற்றுதல்.” கேள்விகளும் பதில்களும். ஒரு பொருத்தனையானது ஏன் பொறுப்புணர்ச்சி வாய்ந்த கடமை என்பதைக் காண்பிக்கிற, உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 1162, பாராக்கள் 6-7-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
18 நிமி: “மற்றவர்கள்பேரில் உண்மையான அக்கறை காண்பிப்பதன் மூலம் யெகோவாவைப் பின்பற்றுங்கள்.” (பாராக்கள் 1-3) அந்தப் பேச்சுப்பொருளை படிப்படியாக சிந்திப்பதற்கு கட்டுரையிலுள்ள முதல் பாராவை பயன்படுத்துங்கள். சபையில் தற்போது கையிருப்பிலுள்ள எந்தச் சிற்றேடுகள் உங்களுடைய பிராந்தியத்திலுள்ளவர்களின் அக்கறையைத் தூண்டலாம் என்பதை தீர்மானியுங்கள். இவை எந்த மொழிகளில் கிடைக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு, அநேக மொழிகளில் உள்ள பல்வகைப்பட்ட சிற்றேடுகளைக் கொண்டுசெல்லும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். பின்பு 2-3 பாராக்களை மாத்திரம் மறுபார்வை செய்து, ஆரம்ப சந்திப்பு மற்றும் மறுசந்திப்பு ஆகிய இரண்டையும் கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டைக் கொண்டு எவ்வாறு கையாளலாம் என்பதை நடித்துக்காண்பியுங்கள். உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருக்கும் மற்றொரு சிற்றேட்டிற்கான தங்களுடைய சொந்த பிரசங்கத்தை எவ்வாறு பிரஸ்தாபிகள் தயார்செய்யலாம் என்பதை காண்பியுங்கள்.
பாட்டு 112, முடிவு ஜெபம்.
ஜூலை 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: “மற்றவர்கள்பேரில் உண்மையான அக்கறை காண்பிப்பதன் மூலம் யெகோவாவைப் பின்பற்றுங்கள்.” (பாராக்கள் 4-5) பாராக்கள் 4-5-ஐ மட்டும் கலந்தாலோசியுங்கள்; அதோடு நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் சிற்றேட்டின் முக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் கலந்தாலோசியுங்கள். பின்பு, முதல் சந்திப்புக்காகவும் மறுசந்திப்புக்காகவும் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை நடித்துக்காட்டுங்கள்.
20 நிமி: “ஒழுங்கான பயனியர் சேவைக்கு அதிக சகோதரர் தேவைப்படுகின்றனர்.” கேள்விகளும் பதில்களும். செப்டம்பர் 15, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 28-31-ல் சிந்திக்கப்பட்டுள்ளபடி, பணசம்பந்தமான தேவைகளை எவ்வாறு கையாளுவது என்பதன்பேரில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை நேரம் அனுமதிக்கிறபடி மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 16, முடிவு ஜெபம்.
ஜூலை 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “சாயங்கால சாட்சிகொடுத்தலை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?” சபையார் பங்கெடுப்பு மற்றும் ஒருசில பேட்டிகளுடன்கூடிய பேச்சு. ஒரு நாளின் பிற்பட்ட சமயங்களில் பிராந்தியத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது உள்ளூரில் என்ன கவனிக்கப்பட்டிருக்கிறது என்பதை விவரியுங்கள். மாலைநேர சாட்சிகொடுத்தலிலிருந்து கிடைத்த சாதகமான பலன்களைக் காண்பிக்கிற அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஊழியத்துக்கான கூட்டங்களின் உள்ளூர் வாராந்தர அட்டவணையையும் குறிப்பிடுங்கள்.
15 நிமி: “மற்றவர்கள்பேரில் உண்மையான அக்கறை காண்பிப்பதன் மூலம் யெகோவாவைப் பின்பற்றுங்கள்.” (பாராக்கள் 6-8) சிற்றேடுகளைப் பெற்றுக்கொண்டவர்களை உடனடியாக மீண்டும் சந்தித்து அனைவரையும் உற்சாகப்படுத்துவதற்கு அந்தக் கட்டுரையிலுள்ள கடைசி பாராவை பயன்படுத்துங்கள். பாராக்கள் 6-7-ஐப் பயன்படுத்தி, வாழ்க்கையின் நோக்கம் என்ற சிற்றேட்டை முதல் சந்திப்பில் எவ்வாறு அளிக்கலாம் என்பதையும் மறுசந்திப்பில் அறிவு புத்தகம் முதல் அதிகாரத்தில் எவ்வாறு ஒரு படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதையும் நடித்துக்காட்டுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி பிரசங்கங்களைப் பின்பற்றி, பிரஸ்தாபிகள் மற்ற சிற்றேடுகளுக்கான தங்களுடைய சொந்த பிரசங்கங்களைத் தயார்செய்யும்படி அவர்களுக்கு நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 64, முடிவு ஜெபம்.
ஜூலை 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். வீடுகளில் புதிய பத்திரிகை வெளியீடுகளை அளிப்பதில் பயன்படுத்தக்கூடிய அக்கறையூட்டும் முக்கியக் குறிப்புகளைச் சுட்டிக்காண்பித்து சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: முழுநேர ஊழிய இலக்கை நாடித்தொடருங்கள். டிசம்பர் 15, 1988, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 25-7-ன் அடிப்படையில், ஒரு மூப்பர் மற்றும் ஓரிரண்டு பருவ வயதினருக்கிடையே சம்பாஷணை. மேல்நிலை பள்ளிப் படிப்பை முடித்த பிறகு அவர்கள் என்ன இலக்குகளை நாடித்தொடருவார்கள் என்பதை தீர்மானிப்பதற்கு இளைஞர்கள் முயற்சிசெய்கிறார்கள். உலகப்பிரகாரமான வேலைகள் மூலம் கொடுக்கப்படுகிற பொருள்சம்பந்தமான அனுகூலங்களில் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். ஒழுங்கான பயனியர் சேவையை அடைய முயலுவது ஏன் அதிக மேம்பட்ட காரியமாக இருக்கும் என்பதற்கான நல்ல காரணங்களை மூப்பர் சுட்டிக்காண்பிக்கிறார். பருவ வயதினர் ஒத்துக்கொள்கிறார்கள், ஆனால் ஒழுங்கான பயனியர்களாக இருந்துகொண்டு பொருள் சம்பந்தமாக தங்களை ஆதரித்துக்கொள்ள முடியுமா என்பதைக் குறித்து அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அநேகருக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருகிற ஒழுங்கான பயனியர் சேவை நியாயமான, அடையத்தக்க இலக்கு என்பதைக் காண்பித்து, காவற்கோபுர கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட அனுபவங்களை மூப்பர் பகிர்ந்துகொள்கிறார். மூப்பருடைய குறிப்புகளுக்காக பருவ வயதினர் தங்களுடைய போற்றுதலையும், ராஜ்ய சேவையில் ஒரு முழுப் பங்கை வகிப்பதற்கான இலக்கை நாடித்தொடருவதற்கு கருத்தார்ந்த விதத்தில் சிந்தனை செலுத்துவதற்கான தங்களுடைய உறுதியான தீர்மானத்தையும் தெரிவிப்பதுடன் சம்பாஷணை முடிவடைகிறது.
20 நிமி: “அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது.” ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் பாராக்கள் 12-16-ஐ உட்படுத்துகிற ஒரு பேச்சு. முன்னேறி வருகிற ஒரு படிப்பு பற்றிய இரண்டு நடிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அச்சிடப்பட்டுள்ள கேள்விகளுக்கு அதிக நேரடியாய் பதிலளிக்கிற முக்கிய வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை சிறப்பித்து அல்லது கோடிட்டுக் காண்பிப்பதன் மூலம் மாணாக்கரை எவ்வாறு அந்தப் பாடத்திற்காக தயார்செய்ய பயிற்றுவிப்பது என்பதை முதல் நடிப்பு காண்பிக்கிறது. பொதுப் பேச்சிற்கும் காவற்கோபுர படிப்புக்கும் பைபிள் மாணாக்கர் ஆஜராகும்படி உற்சாகப்படுத்துவதற்கு நீங்கள் என்ன சொல்லக்கூடும் என்பதை இரண்டாவது நடிப்பு காண்பிக்கிறது.
பாட்டு 116, முடிவு ஜெபம்.
ஜூலை 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “கையிருப்பிலுள்ள புத்தகங்கள்” என்பதை மறுபார்வை செய்யுங்கள்.
20 நிமி: ஒரு பைபிள் படிப்பை பெறுவதற்கு எது உதவிசெய்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் அதிக வெற்றிகரமாக இருக்கும் வழிகளை மறுபார்வை செய்வதன் மூலம், பைபிள் படிப்பு வேலையில் வெற்றியைக் கண்டடைந்திருக்கிற இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கிடையே ஒரு மூப்பர் சம்பாஷணை செய்கிறார்: (1) யெகோவாவின் உதவிக்காக ஜெபியுங்கள். (2) அக்கறை காட்டும் நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் தவறாமல் பங்குகொள்ளுங்கள். (3) அக்கறைகாட்டும் அனைவரையும் குறித்துவைத்துக் கொண்டு, உடனடியாக மறுசந்திப்பு செய்யுங்கள். (4) அக்கறை காண்பிக்கிற இடங்களில் எப்பொழுதும் ஒரு படிப்பை அளியுங்கள். (பிப்ரவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கம் 20-ல், “பைபிள் படிப்புகளைத் தொடங்குவது” என்ற உபதலைப்பைப் பாருங்கள்.) (5) மே 1, 1985, காவற்கோபுரம், பக்கங்கள் 7-12-ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ஆலோசனைகளைப் பயன்படுத்துவதன் மூலம் போதிப்பதற்கான உங்களுடைய திறமையில் நம்பிக்கையை வளருங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள். அல்லது ஜனவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 21-3, “ஆறுதலும் உற்சாகமும்—அநேக கோணங்களில் ஜொலிக்கும் இரத்தினங்கள்” என்ற கட்டுரையின் பேரில் ஒரு மூப்பர் பேச்சு கொடுக்கிறார்.
பாட்டு 165, முடிவு ஜெபம்.