ஜூன் ஊழியக் கூட்டங்கள்
ஜூன் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். அந்த நாடு மற்றும் உள்ளூர் சபை ஆகிய இரண்டுக்குமான மாதாந்திர வெளி ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.
15 நிமி: “அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” கேள்விகளும் பதில்களும். செப்டம்பர் 15, 1991, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 13-ல் உள்ள பெட்டியில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ள விசுவாசத்தின் அத்தாட்சிகளை மறுபார்வை செய்யுங்கள். அநேக ஆண்டுகளாக தங்களுடைய ஒழுங்கான ராஜ்ய நடவடிக்கையைக் காத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு எது உதவி செய்திருக்கிறது என்பதைக் காண ஓரிரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டிகாணுங்கள்.
20 நிமி: “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பரப்புதல்.” (பாராக்கள் 1-3) பாரா 1-ஐ கலந்தாலோசியுங்கள். (ஜனவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 12-13, பாராக்கள் 11-12-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.) முதலில் சந்தித்தவர்களை மீண்டும் சந்திப்பதற்கு நன்கு ஆயத்தமானவர்களாக இருப்பதற்கு நமக்கு உதவிசெய்யும்படி நம் ராஜ்ய ஊழியத்தின் கடைசி பக்கத்திற்காக புதிய வடிவம் திட்டமைக்கப்பட்டிருப்பதை விளக்கிக்கூறுங்கள். நீண்ட நாட்களுக்குக் காத்திருப்பதற்குப் பதிலாக, ஓரிரண்டு நாட்களில் மறுசந்திப்பு செய்வது பெரும்பாலும் ஞானமான காரியமாக இருப்பதால், வீட்டுக்கு வீடு சந்திப்பு மற்றும் மறுசந்திப்புக்காக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை அதே ஊழியக் கூட்டத்தில் நாம் கலந்தாலோசிப்போம். பாராக்கள் 2 மற்றும் 3-ஐ சுருக்கமாக மறுபார்வை செய்து, பின்பு ஒவ்வொன்றுக்கும் ஒரு நடிப்பைக் கொண்டிருங்கள். முதல் நடிப்பில், உலகளாவிய வேலைக்காக எவ்வாறு நன்கொடை அளிக்கலாம் என்பதன் பேரில் சுருக்கமான குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்தக் கட்டுரையிலுள்ள மீதமான பிரசங்கங்கள் அடுத்த இரண்டு ஊழியக் கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்படும்.
பாட்டு 143, முடிவு ஜெபம்.
ஜூன் 10-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி: “ ‘நாடோறும்’ யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்.” கேள்விகளும் பதில்களும். துணைப் பயனியர் மற்றும் ஒழுங்கான பயனியர் சேவைக்காக நம்பிக்கையூட்டும் ஊக்குவிப்பைக் கொடுங்கள்.
10 நிமி: “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பரப்புதல்.” (பாராக்கள் 4-5) ஒரு சுருக்கமான அறிமுகத்திற்குப் பின், பாராக்கள் 4 மற்றும் 5-ல் உள்ள முதல் சந்திப்பு மற்றும் மறுசந்திப்புக்கான பிரசங்கங்களை நடித்துக்காட்டுங்கள். அறிவு புத்தக்தைப் பெற்றுக்கொண்ட அனைவரையும் உடனடியாக சந்திக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “அறிவு புத்தகத்தை பயன்படுத்தி எவ்வாறு சீஷர்களை உண்டுபண்ணுவது.” பாராக்கள் 1-2-ன் அடிப்படையில் சுருக்கமான ஆரம்ப குறிப்புகளைக் கொடுங்கள். பாராக்கள் 3-11-ஐக் கேள்வி பதில் மூலம் கலந்தாலோசியுங்கள். அந்த உட்சேர்க்கையின் மீதிபாகம் ஜூலை மற்றும் ஆகஸ்டில் நடைபெறும் ஊழியக் கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்படும் என்று சொல்லுங்கள். அதைப் பத்திரப்படுத்தி வைக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 92, முடிவு ஜெபம்.
ஜூன் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “நட்பான உரையாடல்களால் இருதயத்தை அடைய முடியும்.” கேள்விகளும் பதில்களும். நட்புறவான அணுகுமுறையால் எவ்வாறு நல்ல பிரதிபலிப்பை பெற்றார்கள் என்பதைக் காண்பிக்கிற உற்சாகமூட்டும் அனுபவங்களை ஓரிரண்டு பிரஸ்தாபிகள் சொல்லும்படி அழையுங்கள்.
20 நிமி: “நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவைப் பரப்புதல்.” (பாராக்கள் 6-7) மறுசந்திப்பு செய்வதில் உள்ள இலக்குகளை வலியுறுத்திக் கூறுங்கள்: அக்கறையை வளருங்கள், ஒரு படிப்பை ஆரம்பியுங்கள், மீண்டும் செல்வதற்கு திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். பாராக்கள் 6 மற்றும் 7-ல் உள்ள பிரசங்கங்களை சுருக்கமாக மறுபார்வை செய்த பிறகு, ஒரு படிப்பை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதைக் காண்பிக்கும்படி, ஒவ்வொன்றையும் நடித்துக்காட்ட செய்யுங்கள். ஜனவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கம் 14-ல் உள்ள 17-ம் பாராவை வாசியுங்கள்.
பாட்டு 211, முடிவு ஜெபம்.
ஜூன் 24-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
8 நிமி: வெளி ஊழியத்தில் பிள்ளைகளைப் பயிற்றுவித்தல். மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. சிறிய வயதிலிருந்தே, நம்முடைய பிள்ளைகள் ஊழியத்தில் நம்முடன் சுறுசுறுப்புள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் பெறுகிற பயிற்சியும் அனுபவமும், பிற்பட்ட ஆண்டுகளில் அவர்களுடைய விசுவாசத்திற்கும் வைராக்கியத்திற்கும் ஒரு பலமான ஆதாரத்தை அளிக்கும். ஊழியத்தைக் கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக்கொண்டு, தங்களை தகுந்தவிதத்தில் நடத்திக்கொள்வதன் அவசியத்தை அவர்கள் மதித்துணருவது முக்கியம். ரௌடித்தனமான நடத்தையை பிள்ளைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; ஊழியம் விளையாடுவதற்கான நேரம் அல்ல. வயதுவந்தவர்களுடன் ஊழியம் செய்வது அவர்களுக்கு மிகவும் நல்லது. அவர்களுடைய திறமைகளுக்கேற்ப பிரசங்கங்களைக் கொடுப்பதில் பங்குகொள்வதற்கு அவர்கள் உதவிசெய்யப்பட வேண்டும். (நவம்பர் 1, 1989, காவற்கோபுரம், பக்கம் 20, பாரா 20-ஐக் காண்க.) பெற்றோர்கள் மேற்பார்வை செய்யவேண்டிய உத்தரவாதமுள்ளவர்களாக இருக்கிறார்கள்; அவர்களைக் கண்காணிப்பதற்கு முதிர்ந்த நபர் ஒருவர் இல்லாமல் ஊழியத்திற்கான கூட்டங்களுக்குப் பிள்ளைகளை அவர்கள் அனுப்பக்கூடாது. பிள்ளைகள் நன்றாக செய்யும்போது அவர்களைப் போற்றுங்கள்.
12 நிமி: சபையின் தேவைகள். (அல்லது ஜனவரி 1, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 29-31-ஐ அடிப்படையாகக் கொண்டு, ‘சத்திய வசனத்தை சரியாக கையாளுதல்’ என்பதன்பேரில் ஒரு பேச்சு கொடுங்கள்.)
20 நிமி: “மறுபடியும் சேவிக்க அவர்களுக்கு உதவுங்கள்.” மூப்பரால் கொடுக்கப்படும் ஒரு பேச்சும் கலந்தாலோசிப்பும். செயலற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, நவம்பர் 1, 1992, காவற்கோபுரத்தில், “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்,” என்ற கட்டுரையைப் பயன்படுத்தும்படி ஆலோசனை வழங்குங்கள். முக்கிய குறிப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.
பாட்டு 71, முடிவு ஜெபம்.