டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்
டிசம்பர் 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “தினந்தோறும் யெகோவாவைத் துதியுங்கள்.” கேள்விகளும் பதில்களும். பாராக்களைப் படிக்கச் செய்யுங்கள். ஓரிரண்டு பிரஸ்தாபிகளை அவர்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியான, உற்சாகமான அனுபவங்களை விவரிக்கச் சொல்லுங்கள்.
20 நிமி: “திருத்தமான அறிவைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.” கேள்விகளும் பதில்களும். 2 மற்றும் 3-ம் பாராக்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி துண்டுப்பிரதி பயன்படுத்தப்படுவதை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 224, முடிவு ஜெபம்.
டிசம்பர் 11-ல் துவங்கும் வாரம்
13 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. வெளி ஊழியத்தில் முழுமையாகவும், அர்த்தமுள்ள விதத்திலும் பங்குகொள்ள ஏன் திட்டமிட வேண்டும் என்று சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். வெளி ஊழியத்திற்குப் போகும்போது ஒரு மணிநேரமோ அல்லது அதற்கு கூடுதலாகவோ செய்துவிட்டு நிறுத்திவிடுவதைவிட, இரண்டு மணிநேரமோ அல்லது அதற்கு கூடுதலாகவோ ஏன் செய்யக்கூடாது? முன்னதாகவே மறுசந்திப்புகளை திட்டமிடுவதிலும், இரண்டு மணிநேரமோ அல்லது அதற்கு அதிகமாகவோ செலவிடத் திட்டமிடும் நபர்களுடன் ஊழியம் செய்ய ஏற்பாடு செய்வதிலுமே வெற்றி பொதுவாகச் சார்ந்திருக்கிறது.
15 நிமி: சபையின் தேவைகள். அல்லது ஆகஸ்ட் 1, 1995, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 25-9 வரையாக வெளியான “விடாமுயற்சியினால் வரும் பலன்கள்” என்ற கட்டுரையிலிருந்து ஒரு பேச்சு.
17 நிமி: “சபைக் கூட்டங்களுக்குத் தயார்செய்து அவற்றை அனுபவியுங்கள்.” பேச்சு மற்றும் கலந்துரையாடல். கூட்டங்களை மகிழ்ந்து அனுபவிக்கவும் அதிலிருந்து முழு பயனைப் பெற்றுக்கொள்ளவும் எதை செய்வது அவர்களுக்கு உதவி அளிக்கிறது என்பதை ஓரிரண்டு பிரஸ்தாபிகளை அழைத்து விவரிக்க சொல்லுங்கள்.
பாட்டு 28, முடிவு ஜெபம்.
டிசம்பர் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். விடுமுறைகால வாழ்த்துரைகளுக்கு எப்படி சாதுரியமாக பிரதிபலிக்க வேண்டும் என்று சில ஆலோசனைகளை கொடுங்கள். டிசம்பர் 25-ம் தேதிக்கான விசேஷித்த வெளி ஊழிய ஏற்பாடுகளை பற்றி அறிவியுங்கள்.
15 நிமி: “உங்களுடைய முன்னேற்றத்தை விளங்கப்பண்ணுங்கள்.” கேள்விகளும் பதில்களும்.
20 நிமி: “அக்கறை காண்பித்தவர்களை பகுத்துணர்வோடு மீண்டும் சந்தியுங்கள்.” சபையாருடன் கலந்தாலோசிப்பு. 3 மற்றும் 4-ம் பாராக்களில் உள்ள குறிப்புகளை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 44, முடிவு ஜெபம்.
டிசம்பர் 25-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி 1-ம் தேதி முதல் உங்களுடைய கூட்டங்களுக்கான நேரங்கள் மாறப்போகுமேயானால் அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வதன்மூலம், தங்களுடைய முழு ஆதரவைத் தெரிவிக்குமாறு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். (டிசம்பர் 1994 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 2-ஐ பாருங்கள்.) ஜனவரி 1-ம் தேதிக்கான விசேஷித்த வெளி ஊழிய ஏற்பாடுகளைப் பற்றி அறிவியுங்கள்.
10 நிமி: “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிர”லை மறுபார்வை செய்யுங்கள். உங்கள் வட்டாரத்தில் அடுத்து வரப்போகும் வட்டார மாநாட்டின் தேதிகள் தெரிந்திருந்தால் அதை அறிவித்து, அதற்கு செல்ல இப்போதிருந்தே ஏற்பாடுகளை செய்ய அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். முழுக்காட்டுதல் பெற தகுதியுள்ளோர், முடிந்தளவு விரைவில் நடத்தும் கண்காணியிடம் பேசினால், அவர்களைச் சந்திப்பதற்கு அவர் மூப்பர்களை ஏற்பாடு செய்வார் என்று அவர்களிடம் கூறுங்கள்.
25 நிமி: “நம்முடைய ஒளியைத் தொடர்ந்து பிரகாசிக்கச் செய்தல்.” ஒரு சுருக்கமான முன்னுரையை, 1-5 வரையான பாராக்களின் அடிப்படையில் அளியுங்கள். 6-16 வரையாக உள்ள பாராக்கள் கேள்வி பதில் மூலம் சிந்திக்கப்படவேண்டும். 6-9, 15, 16 ஆகிய பாராக்களை வாசியுங்கள். முடிவுரைக்கு 17-19 வரையாக உள்ள பாராக்களை உபயோகியுங்கள். முடிந்தால் இதை, ஊழியக் கண்காணி கையாளுவார்.
பாட்டு 3, முடிவு ஜெபம்.