உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/95 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 11/95 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்

நவம்பர்: கூடியபோதெல்லாம், பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தோடு சேர்த்து 75.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்க வேண்டும். அல்லது கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் என்ற ஆங்கில புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். வீட்டுக்காரர்கள் ஆங்கிலம் அறியாதவர்களாய் இருந்தால் நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு விசேஷ அளிப்பு புத்தகங்களாக பட்டியலிடப்பட்ட எந்தவொரு 192 பக்க புத்தகத்தையும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இவ்வகையான புத்தகங்களில் அநேகம் இன்னும் எங்களிடம் இருக்கின்றன; ஆகஸ்ட் 1995, நம் ராஜ்ய ஊழியத்தில் ‘அறிவிப்புகள்’ பகுதியைக் காண்க. பஞ்சாபி அல்லது பெங்காலி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் அல்லது “இதோ!” சிற்றேடுகளையும் நேப்பாளி வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கையை அனுபவியுங்கள் சிற்றேட்டையும் அளிக்கலாம். மலையாளம் விருப்பப்படும் ஆட்களுக்கு, உன் இளமை—அதை மிக நன்றாய் பயன்படுத்துதல்! புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். விசேஷ விலைக்கு இந்தப் புத்தகத்தை அளிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.

டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இதற்குப் பதிலாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அதே நன்கொடைக்கு அளிக்கலாம் (என்றும் வாழலாம் புத்தகம் சிறிய அளவு 25.00 ரூபாய்).

ஜனவரி: விசேஷ அளிப்பாக நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு பட்டியலிடப்பட்டுள்ள 192-பக்க புத்தகங்கள் எவற்றையும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.

பிப்ரவரி: வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தை 50.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இதற்குப் பதிலாக, நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு விசேஷ அளிப்பு புத்தகங்களாக பட்டியலிடப்பட்ட எந்தவொரு 192-பக்க புத்தகத்தையும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்.

◼ நம் ராஜ்ய ஊழியம் மாநாட்டு காலப் பகுதியில் ஊழியக் கூட்டம் ஒன்றை ஒவ்வொரு வாரமும் திட்டமிடும். சபைகள், “சந்தோஷமாய் துதிப்போர்,” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிப்பதற்கும், அதைத் தொடர்ந்து வரும் வாரத்தில் ஊழியக் கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலில் முக்கியக் குறிப்புகளை 30 நிமிடங்களுக்கு மறுபார்வை செய்வதற்கும் தேவையான சரிப்படுத்துதல்களைச் செய்யலாம். மாவட்ட மாநாட்டின் ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிநிரலையும் மறுபார்வை செய்வதற்கு, முனைப்பாய் நிற்கும் குறிப்புகளின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்த முடிந்த தகுதிவாய்ந்த இரண்டு அல்லது மூன்று சகோதரர்களை முன்கூட்டியே நியமிக்க வேண்டும். சபையோர் முக்கிய குறிப்புகளைத் தனிப்பட்ட பொருத்தத்திற்கும் வெளி ஊழியத்தில் உபயோகிப்பதற்கும் ஞாபகத்தில் வைக்க இந்த நன்கு தயாரிக்கப்பட்ட மறுபார்வை உதவிசெய்யும். சபையாரின் பதில்களும் சொல்லப்படும் அனுபவங்களும் சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருக்கவேண்டும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 1990-1994 —ஆங்கிலம் (பயனியர்களுக்கு 11.00 ரூபாய்; பிரஸ்தாபிகளுக்கும் வெளி ஆட்களுக்கும் 18.00 ரூபாய்.)

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் (துண்டுப்பிரதி எண் 13) —ஆங்கிலம், மலையாளம்

யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (துண்டுப்பிரதி எண் 14) —ஆங்கிலம், மலையாளம்

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) —ஆங்கிலம், தமிழ், மலையாளம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்