உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/95 பக். 2
  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • துணை தலைப்புகள்
  • நவம்பர் 6-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 13-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 20-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 27-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 11/95 பக். 2

நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

நவம்பர் 6-ல் துவங்கும் வாரம்

பாட்டு 6

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.

15 நிமி: “வேதவாக்கியங்களெல்லாம் போதிப்பதற்கு பயனுள்ளவை.” புதிய உலக மொழிபெயர்ப்பின் அம்சங்களைக் கலந்தாலோசித்து, மற்றவற்றைவிட இது ஏன் சிறந்தது என்பதைக் காட்டுங்கள். நவீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் உள்ள பயன்களை விவரியுங்கள். (“வேதவாக்கியம் முழுவதும்” [ஆங்கிலம்] புத்தகத்தில் 328-ம் பக்கத்தில் 4-6 பாராக்களைக் காண்க.) புதிய உலக மொழிபெயர்ப்பை அளிப்பதைப் போல ஒன்றும் விசேஷ விலைக்கு சபையில் கிடைக்கக்கூடிய இரண்டு பழைய 192-பக்க பதிப்புகளை அளிப்பதைப் போல மற்றொன்றுமாக இரண்டு பிரசங்கங்களை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.

20 நிமி: “பெத்தேல் சேவை—கூடுதலான வாலண்டியர்கள் தேவை.” பேச்சு. 14-18 பாராக்களை சிந்திக்கையில் ஒரு தகப்பன் தன்னுடைய பருவ வயது மகனுடன் பெத்தேல் சேவை என்ற இலக்கைப் பற்றியும், கொடுக்கப்பட்டிருக்கிற ஆலோசனைகளுக்கு இசைவாக அதற்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள மகன் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் சம்பாஷிப்பதைப் போன்ற ஒரு நடிப்பை ஏற்பாடு செய்யுங்கள். பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் அல்லது தற்போதைய அங்கத்தினர்கள் சபையில் இருந்தால், இந்தத் தகப்பனார் தன்னுடைய மகனுடனான சம்பாஷணையில் அந்தச் சகோதரர்களில் ஓரிருவரை சேர்த்துக்கொள்ளலாம். 19-23 பாராக்கள் கேள்வி பதில் மூலம் சிந்திக்கப்படவேண்டும்.

பாட்டு 2, முடிவு ஜெபம்.

நவம்பர் 13-ல் துவங்கும் வாரம்

பாட்டு 33

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. வாரயிறுதி வெளி ஊழிய ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள்.

15 நிமி: “தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜராவது—நாம் உறுதியாய் நிற்பவர்களாயிருக்க இன்றியமையாதது.” பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.

20 நிமி: “நற்செய்திக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுங்கள்.” கேள்விகளும் பதில்களும். ஜூன் 15, 1989 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 16-17-லுள்ள பாராக்கள் 5-9-ன் அடிப்படையில் கூடுதலான குறிப்புகளை சொல்லுங்கள்.

பாட்டு 23, முடிவு ஜெபம்.

நவம்பர் 20-ல் துவங்கும் வாரம்

பாட்டு 64

10 நிமி: சபை அறிவிப்புகள்.

15 நிமி: சபையின் தேவைகள். (அல்லது ஜூன் 15, 1994, காவற்கோபுரம் பக்கங்கள் 8-11-லுள்ள “தனிப்பட்ட படிப்பை நீங்கள் அனுபவித்து மகிழ்கிறீர்களா?” கட்டுரையின் அடிப்படையில் பேச்சு கொடுக்கவும்.)

20 நிமி: “பைபிளின் மதிப்பை மற்றவர்கள் போற்ற உதவுங்கள்.” பைபிள் படிப்புகள் ஆரம்பிக்க வேண்டும் என்ற இலக்குடன் ஏன் மறுசந்திப்புகளைச் செய்யவேண்டும் என்பதை மூப்பர் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுடன் கலந்தாலோசிக்கிறார். மறுசந்திப்புகளுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்கங்களைப் பழகிப் பார்ப்பதைப் போன்று, மறுபார்வை செய்து நடித்துக்காட்டுங்கள்.

பாட்டு 8, முடிவு ஜெபம்.

நவம்பர் 27-ல் துவங்கும் வாரம்

பாட்டு 96

5 நிமி: சபை அறிவிப்புகள்.

15 நிமி: “மேலானவைகளையே நாடுங்கள்.” கேள்விகளும் பதில்களும்.

10 நிமி: “ஏற்ற வார்த்தைகள் பொய் போதனைகளை வீழ்த்திடும்.” பேச்சு. சங்கத்தின் பிரசுரங்களில் உபயோகிக்கப்படும் தேவராஜ்ய சொற்றொகுதியைக் கற்றுக்கொள்ள கவனமாயிருக்கும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி: டிசம்பர் மாதத்தில் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தை அளித்தல். புத்தகத்தின் கவர்ச்சியூட்டுகிற அம்சங்களை—கருத்தைக் கவருகிற அதிகாரத்தின் தலைப்புகளையும் அக்கறையைத் தூண்டும் படங்களையும் அதோடுகூட விளக்கங்களின் எளிமையையும், கச்சிதமான அளவையும், திறம்பட்ட கேள்விகளின் உபயோகத்தையும்—மறுபார்வை செய்யுங்கள். உள்ளூர் பிராந்தியத்திலுள்ள மக்களைக் கவரும் சில பேச்சுக் குறிப்புகளைத் தனிப்படுத்திக் காட்டுங்கள். மிகப் பெரிய மனிதர் புத்தகத்திற்காக ஒரு பிரசங்கத்தையும் மாற்றீடான அளிப்பாகிய என்றும் வாழலாம் புத்தகத்திற்காக ஒரு பிரசங்கத்தையும் நடித்துக்காட்டச் செய்யவும். என்றும் வாழலாம் புத்தகம் பைபிள் படிப்புக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது; பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, பிரசுரங்களைப் பெற்றுக்கொண்ட அனைவரையும் மீண்டும் சந்திக்க விசேஷித்த முயற்சி எடுக்கப்படவேண்டும். டிசம்பரில் இந்தப் புத்தகங்களை நல்ல முறையில் ஊழியத்தில் உபயோகிக்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 78, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்