தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
மே 1 துவங்கி ஆகஸ்ட் 21, 1995 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. கடவுளை வணங்குவது தனிப்பட்ட விஷயம், மற்றவர்களுடன் உள்ள நம்முடைய உறவின்பேரில் எவ்விதத்திலும் சார்ந்ததில்லை. (1 யோ. 4:20) [uw பக். 134 பா. 7]
2. விக்கிரகாராதனை, இரத்தம், விபசாரம் ஆகியவற்றிற்கு விலகியிருக்க வேண்டும் என்ற புறஜாதி கிறிஸ்தவர்களுக்கான நிர்வாகக் குழுவின் அறிவுரை மோசேயின் நியாயப்பிரமாணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். (அப். 15:28, 29) [uw பக். 149 பா. 8]
3. முதன்முதலில், மோசேயின் நியாயப்பிரமாணம் அனைத்து மனிதவர்க்கத்தையும் கட்டுப்படுத்துவதாய் இருந்தது. (சங். 147:19, 20) [uw பக். 147 பா. 5]
4. கிறிஸ்துவினுடைய பிறப்புக்கு சுமார் 700 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஏசாயா 53-ம் அதிகாரம், இயேசு கிறிஸ்துவையும் அவர் நடத்தப்பட்ட விதத்தையும் வர்ணிப்பது நேரில் பார்த்த சாட்சியின் தெளிவான விவரப்பதிவைப் போல் இருக்கிறது. [si பக். 119 பா. 8]
5. பிரசங்கி 3:1, 2-ல் உள்ள சாலொமோனின் வார்த்தைகள், பிறப்பு, இறப்பு பற்றிய தொடர்ச்சியான சுழற்சியைத்தான் குறிப்பிடுகின்றன, தனிநபர் முன்குறிக்கப்படுவதை அல்ல. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 1/15 பக். 5-ஐக் காண்க.]
6. குடும்பப் பிரச்சினைகளின் பேரில் பைபிள் கொடுக்கிற மிகச் சிறந்த ஆலோசனைக்கு ஈடான ஆலோசனையை உலகப்பிரகாரமான வேறெந்த ஊற்றுமூலமும் கொடுக்க முடியாது. [uw பக். 144 பா. 11]
7. நீதிமொழிகள் புத்தகம், நம்முடைய முழு நம்பிக்கையையும் கடவுளில் வைக்கும்படி அறிவுரை கொடுப்பதில் நம்முடைய பிரச்சினைகளின் அடித்தளத்திற்கே செல்கிறது. [si பக். 111 பா. 35]
8. தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிற எவற்றையும் பார்ப்பதற்குத் தங்களுடைய பிள்ளைகளை அனுமதிக்கிற பெற்றோர்கள், உண்மையில் கட்டுப்பாடில்லாமல் அவர்களை விடுகிறவர்களாக இருக்கிறார்கள். (நீதி. 29:15) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL89 3/1 பக். 12 பா. 8-ஐக் காண்க.]
9. விவாகத்தில் பிரச்சினைகள் எழும்புகையில், உண்மை கிறிஸ்தவன் ஒருவன் தன்னுடைய சொந்த பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கு சாக்குப்போக்காக, தன் துணையின் குறைபாடுகளைச் சுயநலத்துடன் பயன்படுத்திக்கொள்ள மாட்டான். [uw பக். 140-1 பா. 4, 5]
10. எல்லாம் மாயை என்று பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் உரைத்தது, எந்த விதிவிலக்குமின்றி எல்லாவற்றிற்கும் பொருந்துகிறது. [si பக். 114 பா. 15]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. யாத்திராகமம் 20:7-ல் உள்ள அடிப்படை நியமம் என்ன? [uw பக். 152]
12. ஏசாயா ஒரு தீர்க்கதரிசியாக சேவித்துக்கொண்டிருந்தபோது, யூதேயாவில் ஆண்டுகொண்டிருந்த நான்கு ராஜாக்களில் இருவர் யார்? [si பக். 118 பா. 3]
13. ஏசாயா 14:4, 12-14-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, பாபிலோனிய அரசனால் யாருடைய மனப்பான்மை பிரதிபலிக்கப்பட்டது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w85 3/15 பக். 16 பா. 2-ஐக் காண்க.]
14. யாத்திராகமம் 19:10, 11-ன்படி, யெகோவா தம்முடைய வணக்கத்தாரிடம் என்ன எதிர்பார்க்கிறார்? [uw பக். 152]
15. நவீனகால காவற்காரன் யார், அவன் எதை அறிவிக்கிறான்? (ஏசா. 21:8, 12) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 3/1 பக். 12 பா. 10-ஐக் காண்க.]
16. புத்தகங்கள் சம்பந்தமாக பிரசங்கி 12:12 ஏன் இப்படிப்பட்ட எதிர்மறையான கருத்தைத் தருகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 9/15 பக். 25-ஐக் காண்க.]
17. நீதிமொழிகள் 1:2-4-க்கு இசைவாக, நீதிமொழிகள் புத்தகம் எதை முக்கியப்படுத்திக் காண்பிக்கிறது? [si பக். 109 பா. 19]
18. ‘விரிவாக்குங்கள்’ என்று கொரிந்தியருக்கு பவுல் புத்திமதி சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்? (2 கொ. 6:13, NW) [uw பக். 137 பா. 14]
19. எவ்விதமாக அன்பு ‘மரணத்தைப்போல் வலிதாக’ இருக்கிறது? (உன். 8:6, 7) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 11/15 பக். 25-ஐக் காண்க.]
20. சாலொமோன் எழுதிய அழகிய உன்னதப்பாட்டில், என்ன நடைமுறையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன? [si பக். 117 பா. 16]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. நாம் நியாயப்பிரமாண சட்டத்தின்கீழ் இல்லையென்றாலும், அதை அடிப்படையாகக் கொண்டுள்ள __________________________________ மற்றும் அதில் அடங்கியிருக்கிற _________________________ மாதிரிகள் பற்றிய திருத்தமான அறிவினால் நாம் பயனடைகிறோம். [uw பக். 153 பா. 14]
22. யாத்திராகமம் 20:4-6-ல் உள்ள சட்டம் _________________________ தடைசெய்கிறது, யெகோவா _______________________________ கேட்கிறவர் என்ற நியமத்தை இந்தச் சட்டம் ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பதை அந்த வசனம்தானேயும் வெளிப்படுத்துகிறது. [uw பக். 152]
23. கடவுளுடைய ஊழியர் _________________________ சேவிக்காத ஒருவருடன் _________________________ ஒப்பந்தம் செய்யக்கூடாது என்பதை உபாகமம் 7:1-4-ல் உள்ள நியமம் தெளிவாக காட்டுகிறது. [uw பக். 152]
24. உன்னதப்பாட்டு 2:1-3-ல் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லணிகள் _________________________ தாழ்மையையும் அடக்கத்தையும், அதோடுகூட அவளுடைய அன்பிற்குரிய _________________________ விரும்பத்தக்க பண்புகளையும் திறமைகளையும் வெளிப்படுத்துகின்றன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL88 1/1 பக். 8-ஐக் காண்க.]
25. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர் _________________________ சார்பாக _________________________ தகவல் கேட்கும் பழக்கத்தை ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். ஏனென்றால் இப்படிப்பட்ட பேச்சுத்தொடர்புகள் உண்மையில் _________________________ கொள்ளும் தொடர்புகளாகவே இருக்கின்றன. (ஏசா. 8:19) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 8/1 பக். 9 பா. 11-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. நீதிமொழிகள் 26:20, 21-ன்படி, நாம் (வெடுக்கென்று மறுமொழி உரைப்பவர்களாக; வெளிப்படையாக பேசுகிறவர்களாக; சாந்தகுணமுள்ளவர்களாக) இருந்தால், ‘நெருப்பில் விறகை சேர்த்து’ மற்றவர்களைக் கோபமூட்டுவதற்குப் பதிலாக அவர்களுடன் (தனிப்பட்ட பிரச்சினைகளை; குறைவான பேச்சுத்தொடர்பை; நல்ல உறவை) கொண்டிருப்போம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 1/15 பக். 11 பா. 16-ஐக் காண்க.]
27. நீதிமொழிகள் 27:6-ன்படி, உங்களை நேசிக்கிற ஒரு நபர் (உங்களுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தும் எதையும் ஒருபோதும் சொல்லமாட்டார்; உங்களைப் பற்றிய உண்மையை உங்களிடம் சொல்வதற்குப் பயப்படுவார்; உங்களுக்குத் தேவைப்படுகிற சமயத்தில் அறிவுரை கொடுப்பார்). [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 9/15 பக். 28-ஐக் காண்க.]
28. பிரசங்கி புத்தகத்தை எழுதியவர் சாலொமோன் என்பதற்கான அத்தாட்சியை, (புத்தகம் முழுவதும் அவருடைய பெயர் வருவதிலிருந்து; பைபிள் புத்தகங்களின் மற்ற எழுத்தாளர்கள் அதன் எழுத்தாளராக அவருடைய பெயரைக் குறிப்பிடுவதிலிருந்து; அந்தப் புத்தகம்தானே எழுத்தாளர் சாலொமோன் என்பதை அவரைப் பெயரிடாமலேயே உறுதிப்படுத்துவதிலிருந்து) காணலாம். [si பக். 112 பா. 4]
29. எந்த நியாயத்தையும் ஏற்றுக்கொள்ளாத, எதுவென்றாலும் பரவாயில்லை என்ற இன்றைய மனப்பான்மையால் அறிவொளியூட்டப்பட்டிருப்பதாக நினைக்கிற மக்கள் உண்மையில் (தீங்கற்றவர்களாக; வெறுமனே சகித்துக்கொள்கிறவர்களாக; ஆவிக்குரிய இருளில்) இருக்கிறார்கள். (ஏசா. 5:20) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w93 3/1 பக். 11-ஐக் காண்க.]
30. சாலொமோனின் உன்னதப்பாட்டு, (ராஜாவாக சாலொமோன் வகித்த பாகத்தை; சாலொமோனின் திரளான ஐசுவரியத்தை; ஒரு மேய்ப்பனாக இருந்த இளைஞனிடம் நாட்டுப்புற பெண் காண்பிக்கும் உண்மைத்தன்மையை) முக்கியப்படுத்திக் காண்பிக்கிறது. [si பக். 115 பா. 2]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
நீதி. 22:3; பிர. 7:21, 22; ஏசா. 13:19, 20; மத். 5:23, 24; கொலோ. 3:18-20, 23, 24
31. யெகோவா தம்முடைய மக்களை விபத்துக்கள், உள்நாட்டுப் போர்கள், அல்லது வன்முறை ஆகியவற்றிலிருந்து தன்னியல்பாக பாதுகாக்காதபோதிலும், பைபிள் அடிப்படையிலான நடைமுறை ஞானத்தைப் பொருத்திப் பிரயோகிப்பது மதிப்புள்ளதாக இருக்கக்கூடும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 4/1 பக். 13 பா. 23-ஐக் காண்க.]
32. ஏவப்பட்டெழுதப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை ஒருபோதும் சந்தேகிக்காமல் இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w93 5/15 பக். 6-ஐக் காண்க.]
33. உண்மை கிறிஸ்தவர் ஒருவர் தன்னுடைய சகோதரர்களுடன் சமாதானமான உறவை முன்னேற்றுவிப்பதற்குக் கூடுதலான முயற்சிகள் எடுக்கிறார். [uw பக். 135 பா. 10]
34. குடும்ப உறவுகளில் முன்னேற்றமானது, ஏதோவொன்றை மற்றவர் செய்வதற்கு ஒவ்வொருவரும் காத்திருப்பதன் மூலம் அல்ல, ஆனால் ஒவ்வொருவரும் தன்னுடைய பாகத்தை நன்றாக செய்வதன் மூலம் வருகிறது, இவ்வாறு தனிப்பட்ட விதமாக வீட்டில் தேவபக்தியைக் கடைப்பிடிக்கிறார் என்பதைக் காண்பிக்கிறார். [uw பக். 143 பா. 10]
35. உங்களிடமிருந்து அல்லது அபூரணமுள்ள மற்ற மனிதர்களோடு கொண்டுள்ள உங்கள் உறவுகளில் நடைமுறைக்கேற்றதல்லாத விதமாக பரிபூரணத்தை எதிர்பார்க்காதேயுங்கள். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 3/1 பக். 8-ஐக் காண்க.]