வெற்றிகரமான மறுசந்திப்புகள் பலன்தரும் போதனையை அவசியப்படுத்துகின்றன
1 மறுசந்திப்புகள் நம்முடைய வெளி ஊழியத்தின் முக்கியமான, சந்தோஷமிக்க பாகமாக இருக்கின்றன. அக்கறை காட்டுபவர்களைத் திரும்பவும் சந்திப்பதில் நாம் ஏன் ஊக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டும்? யெகோவாவின் பெயர் தெரிவிக்கப்பட்டு, இந்தச் சீஷராக்கும் வேலையினால் கனப்படுத்தப்படுகிறது, தேவபயமுள்ள ஆட்கள் ஜீவனுக்கான வழியைக் கண்டுபிடிக்க உதவப்படுகின்றனர். (2 கொ. 2:17–3:3) யெகோவாவின் பெயர் பரிசுத்தம் செய்யப்படுகிறது என்பதையும் பிறருடைய உயிர்களும் அடங்கியிருக்கின்றன என்பதையும் அறிந்திருப்பது, திரும்ப செல்வதற்கு முன்பு நன்கு தயாரிக்க நம்மை உந்துவிக்க வேண்டும்.
2 ஒரு நல்ல போதகர் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட அஸ்திவாரத்தின்மீது கட்ட மாணாக்கருக்கு உதவுவார். நாளுக்கு நாள் மாணாக்கர் பெறும் அறிவின்பேரில் பள்ளி ஆசிரியர் கட்டுவது போலவே, அதே பொருளின் பேரில் மேலுமான குறிப்புகளை சொல்வதோடு வழக்கமாக நம்முடைய முதல் சந்திப்பை பின்தொடரலாம். இது ஒரே கருத்தைத் தொடரவும் படிப்படியாக சிந்தனையை வளர்க்கவும் சாத்தியமாக்குகிறது.
3 “கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?” என்ற சிற்றேட்டை கொடுத்த பிறகு மறுபடியும் சந்திக்கையில், இதை நீங்கள் பலன்தருவதாய்க் காணலாம்:
◼ “நான் போன முறை சந்தித்தபோது, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கடைசிநாட்களைப்’ பற்றியும் அது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் பற்றியும் நாம் சிந்தித்துக்கொண்டிருந்தோம். நாம் கடைசிநாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்று நமக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். (2 தீ. 3:1) அந்தக் கேள்விக்கு பதிலைப் பெற இயேசுவின் சீஷர்கள் ஆவலாயிருந்தனர். [மத்தேயு 24:3-ஐ வாசியுங்கள்.] தன்னுடைய பதிலில், இன்று நம்மைச் சுற்றியிருக்கும் நிலைமைகளை இயேசு விவரித்தார். இவை முன்னொருபோதும் சம்பவித்திராத துயரத்தையும் வன்முறையையும் உள்ளடக்குகின்றன.” 19-ம் பக்கத்தில் உள்ள 3, 4 பாராக்களில் சிந்திக்கப்பட்டிருக்கும் அடையாளத்தின் அம்சத்தை சுட்டிக்காட்டுங்கள். பிரதிபலிப்பு சாதகமாயிருந்தால், 20-ம் பக்கத்தில் உள்ள 5 முதல் 8 பாராக்களில் சொல்லப்பட்ட அடையாளத்தின் பிற அம்சங்களை சுட்டிக்காட்டுங்கள். திரும்ப வந்து, அந்தச் சிற்றேட்டின் முன்பக்கத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்புவதாகச் சொல்லுங்கள்.
4 “வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?” என்ற சிற்றேட்டில் அக்கறையைக் காண்பித்தவரை மீண்டும் சந்திக்கையில், நீங்கள் இவ்வாறு கூறலாம்:
◼ “வாழ்க்கைக்கான நோக்கம் சம்பந்தப்பட்ட நம்முடைய சம்பாஷணையைத் தொடர நான் மிகவும் ஆவலாயிருக்கிறேன். கடவுள், இன்று நாம் அனுபவிக்கும் குழப்படியில் வாழ்வதைக் காட்டிலும் இந்தப் பூமியில் சந்தோஷமுள்ள, சமாதானமுள்ள நிலைமைகளில் வாழவேண்டுமென உத்தேசித்தார் என்று நாம் இருவருமே ஒப்புக்கொள்வோம் என்று நான் நினைக்கிறேன். தம்முடைய வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். ஏசாயா 55:11-ஐ வாசித்து, 30-ம் பக்கத்திலுள்ள 25 முதல் 27-ம் பாராக்களின் கருத்துக்களை அதன்பின் கலந்து பேசுங்கள். வாழ்க்கையில் பிரயோஜனமான நோக்கத்தைக் கண்டுபிடிக்க தனிப்பட்ட பைபிள் படிப்பைச் சிறந்த வழியாகப் பரிந்துரை செய்யுங்கள்.
5 “பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!” என்ற சிற்றேட்டில் முன்பு அக்கறை காண்பித்தவரை மீண்டும் சந்திக்கையில், நீங்கள் மறுபடியும் அதைக் காட்டி இவ்வாறு சொல்லலாம்:
◼ “இந்தச் சிற்றேட்டில் உள்ள அட்டையில் வர்ணிக்கப்பட்டிருக்கிற அழகான உலகைப் பற்றி நாம் பேசினோம். அங்கே வாழ விரும்பும் மக்களுக்கு இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது ஏன் வெகு முக்கியம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விருப்பப்படுகிறேன்.” 41-ம் படத்திற்குத் திருப்பி, ஏசாயா 9:6-ஐ வாசியுங்கள். 62-ம் படத்தைக் குறிப்பிட்டுக் காட்டி, யோவான் 3:16-ஐ வாசித்து, கீழ்ப்படிதலுக்கான தேவையை அறிவுறுத்திக் காட்டுங்கள். பைபிளைப் படித்து, அதன் ஆலோசனையின்படி வாழ முயல்வதன் மூலம், விசுவாசத்தை மக்கள் எவ்வாறு காட்டலாம் என்பதைக் கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் உதவுகின்றனர் என்பதை விளக்கிக் காட்டுங்கள்.
6 ஒவ்வொரு மறுசந்திப்புக்கு பிறகும், உங்கள் பலன்தரும் தன்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு அதை ஆய்வுசெய்து பாருங்கள். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: நான் ஏதாவது திட்டவட்டமான காரியத்தை மனதில் வைத்திருந்து சொன்னேனா? பைபிளின்பேரில் கவனத்தை ஒருநிலைப்படுத்தினேனா? முதல் சந்திப்பில் போடப்பட்ட அஸ்திவாரத்தின்மீது கட்டினேனா? பைபிள் படிப்புக்கு வழிநடத்தும்படி என்னுடைய பிரசங்கம் திட்டமைக்கப்பட்டிருந்ததா? ஆம் என்ற பதில்கள் கடவுளுடைய வார்த்தையின் நல்ல போதகராக இருக்க நீங்கள் முயற்சி எடுக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.