அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகள் ஏதாகிலும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?. செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்க்கு). வீட்டு பைபிள் படிப்புகளைத் தொடங்க முயற்சி எடுக்கவேண்டும். அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரத்துக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஓராண்டு சந்தா 70.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஓராண்டு சந்தாக்களும் மாதம் இருமறை வரும் பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்கள் கிடையா. நவம்பர்: கூடியபோதெல்லாம், ஆங்கில பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பை பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தோடு சேர்த்து 75.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கவேண்டும். அல்லது கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் என்ற ஆங்கில புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஆங்கிலம் தெரியாத வீட்டுக்காரர்களிடம் விசேஷ அளிப்பு புத்தகங்களாக நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு பட்டியலிடப்பட்ட 192-பக்க புத்தகங்களில் ஏதாவதொன்றை 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்த வகையான பின்வரும் புத்தகங்கள் இன்னும் எங்களிடம் கிடைக்கின்றன: ஆங்கிலம்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மேலும் மனிதன் இங்கே வந்தது பரிணாமத்தின் மூலமா படைப்பின் மூலமா? கன்னடம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக“ மேலும் “கடவுள் பொய் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்;” குஜராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு, மேலும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மேலும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மேலும் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மேலும் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மேலும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” “இதோ!” அல்லது நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டை பஞ்சாபி அல்லது பெங்காலி தெரிந்த ஆட்களிடம் அளிக்கலாம், மேலும் வாழ்க்கையை அனுபவியுங்கள் சிற்றேட்டை நேப்பாளி தெரிந்த ஆட்களிடம் அளிக்கலாம். மலையாளம் விருப்பப்படும் ஆட்களுக்கு 15.00 ரூபாய் நன்கொடைக்கு உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் புத்தகத்தை அளிக்கலாம். விசேஷ விலைக்கு இந்தப் புத்தகத்தை அளிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து கவனியுங்கள். கவனிக்கவும்: மேற்குறிப்பிட்ட அளிப்புத் திட்டப் பிரசுரங்களை இதுவரை தருவித்திராத சபைகள் தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யவேண்டும்.
◼ ஒவ்வொரு சபையும் மூன்று பிரசுர விவரப்பட்டியல் நமூனாக்களை (S-AB-18) பெறும். ஆகஸ்ட் முற்பகுதியில் சபை செயலர் புத்தக ஊழியரை சந்தித்து, அம்மாத கடைசியில் சபை கையிருப்பிலுள்ள பிரசுரத்தை விவரப்பட்டியல் எடுக்க ஒரு தேதியைக் குறிக்கவேண்டும். கையிருப்பிலுள்ள எல்லா பிரசுரங்களை உண்மையில் எண்ணவேண்டும், மொத்தங்களை பிரசுர விவரப்பட்டியல் நமூனாவில் எழுதவேண்டும். பத்திரிகை ஊழியரிடமிருந்து கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகை எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். தயவுசெய்து செப்டம்பர் 6-ற்குள் சொஸைட்டிக்கு நமூனாவின் அசல் பிரதியை தபாலில் அனுப்பி வையுங்கள். கார்பன் நகலை உங்கள் கோப்பில் வையுங்கள். மூன்றாம் நகலை கணக்குப் போடும் தாளாக பயன்படுத்தலாம். அந்த விவரப்பட்டியல் எடுப்பதை செயலர் மேற்பார்வையிட வேண்டும், பூர்த்தியாக்கப்பட்ட நமூனாவை நடத்தும் கண்காணி சரிபார்க்க வேண்டும். செயலரும் நடத்தும் கண்காணியும் அந்த நமூனாவில் கையெழுத்திடுவார்கள்.
◼ சபை பரிசீலனை அறிக்கை நமூனாவில் (S-10) பதிவாக்குவதற்காக, சபை செயலர் ஊழிய அறிக்கைகளை தொகுக்கவும் செய்வார். பிரஸ்தாபி பதிவு அட்டைகளிலிருந்து (S-21) வேண்டிய தகவலை திருத்தமாக வரிசைப்படுத்துவதை நிச்சயப்படுத்துமாறு, அறிக்கையை தொகுப்பதற்கு உதவி செய்யும் எந்தவொரு மூப்பரையோ உதவி ஊழியரையோ ஜாக்கிரதையாய் செய்யும்படி அறிவுரை கூறுவார். சபை பரிசீலனை அறிக்கை நமூனாவானது திருத்தமாகவும் நேர்த்தியாகவும் பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பமிடுவதற்கு முன்பாக ஊழிய ஆலோசனைக் குழுவால் கவனமாக சரிபார்க்கப்பட வேண்டும். தயவுசெய்து செப்டம்பர் 10-ற்குள் சொஸைட்டிக்கு S-10 அசல் நமூனாவை அனுப்பி வையுங்கள்; உங்கள் கோப்பில் கார்பன் நகலை வைத்துக்கொள்ளுங்கள்.
◼ செப்டம்பர் 1, 1995 முதல் ஒழுங்கான பயனியர் சேவை துவங்க திட்டமிடும் பிரஸ்தாபிகள் தாமதமில்லாமல் விண்ணப்பிக்க வேண்டும்.
◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:
யெகோவாவின் சாட்சிகள்—ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் —ஆங்கிலம், நேப்பாளி.
◼ கையிருப்பிலில்லாத பிரசுரங்கள்:
பைன்டு செய்யப்பட்ட 1965-1969, 1975-1979, மற்றும் 1993 ஆண்டுகளுக்கான ஆங்கில காவற்கோபுர தொகுதிகள். இந்தத் தொகுதிகளுக்கான பின்-அனுப்பும் ஆர்டர்களை நாங்கள் வைக்காததால், மறுபடியும் அறிவிப்பு செய்யும் வரை அவற்றிற்காக தயவுசெய்து விண்ணப்பிக்காதீர்கள்.