உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/95 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 7/95 பக். 7

அறிவிப்புகள்

◼ புத்தக அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32-பக்க சிற்றேடுகள் எதையாகிலும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் ஆகியவை. செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் (பெரிய அளவு 45.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம். வீட்டு பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்குச் சந்தாக்கள். மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 70.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கான ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதம் ஒருமுறை வெளிவரும் பதிப்புகளுக்கு ஆறுமாத சந்தா கிடையாது. குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட அளிப்புத் திட்டப் பிரசுரங்களை இதுவரை தருவிக்காத சபைகள் தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ பிரசுரங்களின் வருடாந்தர கணக்கெடுப்பின் காரணமாக, ஆகஸ்ட் 1-க்கு பின்னர் பெறப்படும் ஆர்டர்கள், செப்டம்பர் இரண்டாம் வாரம் வரையாகக் கையாளப்படமாட்டாது. ஆகவே, சபைகள் தங்கள் தேவைகளை முன்னதாகவே கணக்கிட்டு அதற்கேற்றாற்போல ஆர்டர் செய்யவேண்டும்.

◼ “தெய்வீக போதனை உலகெங்கிலும் வெற்றிசிறக்கிறது” என்ற தலைப்பையுடைய பொதுப் பேச்சை விரைவில் வட்டாரக் கண்காணிகள் கொடுப்பார்கள்; சமீபத்தில் நடத்தப்பட்ட விசேஷித்த சர்வதேச “தெய்வீக போதனை” மாநாடுகளைச் சிறப்பித்துக்காட்டும் சிலைடு படக்காட்சி பேச்சாக அது இருக்கும். வட்டாரத்திலுள்ள எல்லா சபைகளிலும் அது காண்பிக்கப்படும் வரையில் வட்டாரக் கண்காணிகள் இந்தப் பேச்சைக் கொடுப்பார்கள். ஜூலை 1, 1995 முதல், சிலைடுகள் கிடைக்கும் வரையாகவும் எல்லா சபைகளிலும் சிலைடுகளைக் காண்பித்து முடித்தப் பின்னர் ஜூன் 1996-ன் முடிவு வரையாகவும் “எல்லா ஆறுதலுக்கும் தேவனாக இருக்கிறவரை நம்புங்கள்” என்ற பேச்சை அவர்கள் கொடுப்பார்கள். அடுத்த புதிய பேச்சு, ஜூலை 1996-ன் முதல் வாரத்திலிருந்து தொடங்கும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்