நீங்களும் நல்ல அனுபவங்களைப் பெறலாம்!
தங்களுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் ஒரு நல்ல சந்திப்பை அல்லது மறுசந்திப்பைப்பற்றி சொல்வதற்கு அக்கறையூட்டும் உற்சாகமூட்டும் அனுபவங்களை எப்போதுமே சில பிரஸ்தாபிகள் கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக நல்ல அனுபவங்கள் தற்செயலாக நிகழ்வதில்லை. பெரும்பாலானவை ஊக்கமான, தொடர்ச்சியான முயற்சியின் விளைவாகவே இருக்கின்றன. மிகச் சரளமாக பேசுகிற அல்லது அதிக திறம்பட்ட பிரஸ்தாபிகளுக்கு மட்டுமே அவை வரையறுக்கப்பட்டவையாக இல்லை.
அதிக வெற்றியைக் கண்டிருப்பவர்களிடம் கவனிக்கப்பட்டுள்ள சில காரியங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன: (1) அவர்கள் ஒரு ஒழுங்கான முறையில், வழக்கமாக ஒரு வாரத்தில் பலமுறை வெளி ஊழியத்தில் பங்கெடுக்கிறார்கள்; அக்கறையுள்ள ஆட்களை நிச்சயமாக சந்திப்பதற்கு பல வாய்ப்புகளை இது அவர்களுக்குக் கொடுக்கிறது; (2) வீட்டுக்காரர்கள் பிரதிபலிக்கமாட்டார்கள் என்று அவர்கள் முன்னதாகவே தீர்மானிக்காமல், அவர்களிடம் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்கிறார்கள்; (3) அவர்கள் சிநேகப்பான்மையான பாங்கை உடையவர்களாய் இருக்கிறார்கள்; செவிகொடுப்பவர்களிடம் கனிவான, உண்மையான அக்கறையைக் காண்பிக்கிறார்கள்; (4) மறுசந்திப்புகளையும் வீட்டில் இல்லாதவர்களையும் திரும்பச் சென்றுபார்ப்பதில் அவர்கள் ஊக்கமுள்ளவர்களாகவும் விடாமுயற்சியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்; (5) பைபிள் படிப்புகளைத் தொடங்கவேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் நடவடிக்கையைச் சோதித்துப் பார்த்தபின், ஒருவேளை உங்களுடைய ஊழியத்தைப் பலன்தருவதாகவும் உற்சாகமுள்ளதாகவும் ஆக்குவதற்கு அதிகத்தைச் செய்யக்கூடிய அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான அனுபவங்கள் பலவற்றை எப்படி பெறலாம் என்று உங்களால் காணமுடியும்.