1995-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
1995-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பாடப் புத்தகங்கள் பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) [bi12], ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் [nw] (“All Scripture is Inspired of God and Beneficial”) [si], எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் [gt], மற்றும் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் காணப்படுகிற “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” [td] ஆகியவை நியமிக்கப்படும் பேச்சுக்களுக்கு அடிப்படையாக இருக்கும்.
பாட்டு, ஜெபம் மற்றும் வரவேற்புக் குறிப்புகளுடன் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு, பின்வருமாறு நடத்தப்படும்:
பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள், இந்தப் பேச்சு மூப்பர் அல்லது தகுதிபெற்ற உதவி ஊழியர் ஒருவரால் கையாளப்படவேண்டும், ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் அல்லது “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” என்பதன்பேரில் சார்ந்திருக்கும். இந்தப் பேச்சு நியமிப்பு 10 முதல் 12 நிமிட போதகப் பேச்சாகவும், அதைத் தொடர்ந்து இந்தப் பிரசுரத்திலுள்ள அச்சிடப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி 3 முதல் 5 நிமிட வாய்முறை மறுபார்வை செய்யப்படவும் வேண்டும். இதன் குறிக்கோளானது வெறுமென விஷயங்களைச் சிந்திப்பதாக இருக்கக்கூடாது, ஆனால் சபைக்கு அதிகப் பயனுள்ளதாக இருப்பதை சிறப்பித்துக் காண்பித்து, சிந்திக்கப்படும் விஷயங்களின் நடைமுறையான பயனில் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். காட்டப்பட்டுள்ள தலைப்புப் பொருள் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்திலிருந்து முழுமையாகப் பயன் பெறுவதற்காக கவனமாக முன்தயாரிப்பு செய்யும்படி எல்லாரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் அல்லது பேச்சாளர் முன்னதாகக் கேட்டுக்கொண்டால். தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். இதைப் பள்ளிக் கண்காணி அல்லது உள்ளூர் தேவைகளுக்கு அந்த விஷயத்தைப் பலன்தரத்தக்க முறையில் பொருத்திக்கூறக்கூடிய மற்றொரு மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும். இது, நியமிக்கப்பட்ட வாசிப்புப்பகுதியின் வெறும் ஒரு சுருக்கமாக இருக்கக்கூடாது. நியமிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் மறுபார்வை செய்வதை 30 முதல் 60 வது வினாடிகளுக்கு மட்டுப்படுத்துங்கள். முக்கிய குறிக்கோளானது, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதைச் சபையார் மதித்துணர உதவி செய்வதேயாகும். பின்பு மாணாக்கர்கள் பல்வேறு வகுப்பறைகளுக்கு செல்லும்படி பள்ளிக் கண்காணியால் சொல்லப்படுவர்.
பேச்சு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரரால் கொடுக்கப்படுகிற நியமிக்கப்பட்ட பகுதியினுடைய பைபிள் வாசிப்பாகும். மன்றத்திலுள்ள பள்ளிக்கும் மற்ற துணைத் தொகுதிகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முகவுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான விளக்கக் குறிப்பை கொடுக்குப்படி வாசிப்பு நியமிப்புகள் பொதுவாய் ஓரளவு சிறியவையாக இருக்கின்றன. சரித்திரப் பின்னணி, தீர்க்கதரிசன அல்லது கோட்பாட்டுக்குரிய முக்கியத்துவம், நியமங்களின் பொருத்தம் ஆகியவை சேர்க்கப்படலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களும் இடநிறுத்தம் இன்றி வாசிக்கப்பட வேண்டும். வாசிக்கப்படவேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தரப்பத்தில் வாசிப்பு தொடரவிருக்கும் வசனத்தை நிச்சயமாகவே மாணாக்கர் குறிப்பிடலாம்.
பேச்சு எண் 3: 5 நிமிடங்கள். இந்தப் பேச்சு சகோதரிகளுக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சுக்குரிய பொருள்கள் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தையோ புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் காணப்படுகிற “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” என்பதையோ சார்ந்தவையாயிருக்கும். நியமிக்கப்பட்ட மாணாக்கர் வாசிக்கத் தெரிந்தவராய் இருக்கவேண்டும். பேச்சு கொடுக்கையில், மாணாக்கர் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருக்கலாம். உதவியாளர் ஒருவரை பள்ளிக் கண்காணி நியமிப்பார், கூடுதலான உதவியாளர்களையும் பயன்படுத்தலாம். இந்தப் பேச்சிற்கு நியமிக்கப்பட்ட சகோதரிகள் தலைப்புப் பொருளையும் சிந்திக்கப்படவிருக்கிற விஷயத்தையும் நடைமுறையான சூழலுக்கு ஏற்ப பொருத்தியமைக்க வேண்டும், பேச்சு கொடுப்பவர் வெளி ஊழியம் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதாக அமைப்பது விரும்பத்தக்கது, பேச்சு அமைப்புக்கு (setting) அல்ல, ஆனால் பேசப்படும் விஷயத்திற்கே முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பேச்சு எண் 4: 5 நிமிடங்கள், ஒரு சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படுகிறது. இது. புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் காணப்படுகிற “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்” என்பதை சார்ந்திருக்கும். ஒரு சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், இது முழு சபையாருக்கும் கொடுக்கும் ஒரு பேச்சாக இருக்க வேண்டும். இந்தப் பேச்சு உண்மையில் கேட்பவர்களுக்கு அறிவூட்டுவதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்படி, அந்தச் சகோதரர் ராஜ்ய மன்றத்தில் கூடியிருக்கும் சபையாரை மனதிற்கொண்டு தனது பேச்சைத் தயாரிப்பது பொதுவாக மிக நல்லது ஒரு சகோதரிக்கும் நியமிக்கப்படுகையில் பேச்சு எண் 3-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தப் பேச்சைக் கொடுக்கவேண்டும்.
ஆலோசனை மற்றும் குறிப்புகள் கொடுத்தல்: மாணாக்கர் பேச்சு ஒவ்வொன்றுக்கும் பின்னர், பள்ளிக் கண்காணி குறிப்பான ஆலோசனைகளைக் கொடுப்பார். பேச்சு ஆலோசனைத் தாளில் (Speech Counsel Slip) கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான ஆலோசனைத் திட்டத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. மாறாக மாணாக்கர் முன்னேற வேண்டிய அம்சங்களுக்கு அவர் கவனஞ்செலுத்த வேண்டும். பேச்சுக் கொடுக்கும் மாணாக்கர் முன்னேறவேண்டிய அம்சங்களுக்கு அவர் கவனஞ்செலுத்த வேண்டும். பேச்சுக் கொடுக்கும் மாணாக்கர் “G” பெற தகுதியுடையவராய் இருந்து, வேறு எந்தப் பேச்சுப் பண்பிலும் “I” அல்லது “W” என்று குறிப்பிடப்படாவிடில், அப்பொழுது ஆலோசகர் “G” “I” அல்லது “W” என்று பொதுவாக காணப்படும் பெட்டியில் அடுத்தப்படியாக உழைக்க வேண்டிய பேச்சுப் பண்பைக் காட்ட ஒரு வட்டமிட வேண்டும். இதைக் குறித்து அன்று மாலை மாணாக்கருக்கு அவர் சொல்லுவார். அதோடுகூட அடுத் தேவராஜ்ய ஊழியப் பள்ளி பேச்சு நியமிப்புத் தாளிலும் (Assignment slip) (S-89) இந்தப் பேச்சுப் பண்பைக் குறிப்பிடுவார். பேச்சு கொடுப்பவர்கள் மன்றத்தின் முன் இருக்கைகளில் உட்காரவேண்டும். இது நேரத்தை சேமிக்கவும் அதே சமயத்தில் பள்ளிக் கண்காணி ஒவ்வொரு மாணாக்கரையும் நோக்கி நேராக ஆலோசனை கூறவும் உதவியாக இருக்கும். தேவையான நேரடி ஆலோசனை கொடுத்த பின்பு நேரம் அனுமதிக்கிறபடி, மாணாக்கரால் சிந்திக்கப்படாத அறிவூட்டும் நடைமுறையான குறிப்புகளின்பேரில் ஆலோசகர் குறிப்பு சொல்லலாம், பள்ளிக் கண்காணி ஒவ்வொரு மாணாக்கர் பேச்சுக்குப் பிறகும், ஆலோசனை கூறுவதற்கும் குறிப்புகள் சொல்லுவதற்கும் மொத்தம் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக பயன்படுத்தாதபடி கவனமாயிருக்க வேண்டும். பைபிள் சிறப்புக் குறிப்புகளை எடுத்துரைக்கும் பேச்சில் விரும்பப்படும் குறிப்புகள் விடப்பட்டிருந்தால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கப்படலாம்.
பேச்சுக்களைத் தயாரித்தல்: நியமிக்கப்பட்ட பேச்சைத் தயாரிப்பதற்கு முன்பாக, மாணாக்கர் தான் உழைக்கவேண்டிய பேச்சுப் பண்பை சிந்திக்கிற பள்ளி துணைநூல் (School Guidebook) பிரசுரத்திலுள்ள பகுதியைக் கவனமாக வாசிக்க வேண்டும். இரண்டாம் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள மாணாக்கர்கள், வாசிக்கவேண்டிய பைபிள் பகுதிக்குப் பொருத்தமான தலைப்புப் பொருள் ஒன்றை தெரிந்துகொள்ளலாம். மற்ற பேச்சுகள் அச்சடிக்கப்பட்ட அட்டவணையில் காட்டியுள்ள தலைப்புப் பொருளுக்கு ஏற்ப அமைக்கப்படும்.
நேரம்: எந்தப் பேச்சும் கொடுக்கப்படும் நேரத்தை மீறக்கூடாது. ஆலோசனை கூறுபவரின் ஆலோசனையும் குறிப்புகளுங்கூட நேரத்தை மீறக்கூடாது. பேச்சு எண் 2 முதல் 4 வரையுள்ள பேச்சுகள் நேரத்தை மீறுகையில் சாதுரியமாக நிறுத்தப்பட வேண்டும். நிறுத்தும் சமிக்கையை கொடுக்க நியமிக்கப்பட்டவர் அதை உடனடியாகச் செய்யவேண்டும். பேச்சு நியமிப்பு எண் 1-யும் பைபிள் சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்கள் நேரத்தை மீறுகையில், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை கொடுக்க வேண்டும். எல்லாரும் நேரத்தைக் கவனமாகக் கடைபிடிக்க வேண்டும். முழு நிகழ்ச்சி நிரல் பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.
எழுத்துமுறை மறுபார்வை: ஒழுங்கான கால இடைவெளிகளில் ஓர் எழுத்து முறை மறுபார்வை கொடுக்கப்படும். அதைத் தயார்செய்கையில், கொடுக்கப்பட்ட பகுதிகளை மறுபார்வை செய்து, பைபிள் வாசிப்பு பகுதியை முடியுங்கள். இந்த 25 நிமிட மறுபார்வையின்போது பைபிள் மட்டுமே பயன்படுத்தப்படலாம். மீந்திருக்கும் நேரம் கேள்விகளையும் பதில்களையும் கலந்தாலோசிப்பதற்குச் செலவிடப்படும். ஒவ்வொரு மாணாக்கரும் அவருடைய தாள்களைத் திருத்துவர். பள்ளிக் கண்காணி இந்த மறுபார்வை கேள்விகளுக்கான பதில்களைச் சபையாரோடு கலந்தாலோசிப்பார்; கடினமான கேள்விகளின்பேரில் கூடுதலான கவனம் செலுத்தி, எல்லாரும் பதில்களைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவி செய்வார். ஏதோ காரணத்தினிமித்தம், சபையின் சூழ்நிலைகள் அவசியப்படுத்தினால், எழுத்துமுறை மறுபார்வையை அட்டவணையில் காட்டப்பட்ட வாரத்திற்கு ஒரு வாரம் பிந்தி நடத்தலாம்.
பெரிய சபைகள்: 50 அல்லது அதற்கு மேற்பட்ட மாணாக்கர்கள் பள்ளியில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டதாயுள்ள சபைகள், அட்டவணையிலுள்ள பேச்சுக்களை மற்ற ஆலோசகர்களுக்கு முன்பாகக் கொடுக்கும்படி கூடுதலான மாணாக்கர்கள் தொகுதிகளை ஏற்பாடுசெய்ய விரும்பலாம். கிறிஸ்தவ நியமங்களுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை நடத்தும் முழுக்காட்டப்படாத ஆட்களும் நிச்சயமாகவே பள்ளியில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து பேச்சு நியமிப்புகளைப் பெறலாம்.
வரத்தவறுவோர்: வாராந்தர கூட்டம் ஒவ்வொன்றுக்கும் ஆஜராயிருக்கும்படி முயற்சி செய்வதன்மூலம், தங்கள் பேச்சு நியமிப்புகளை நன்றாய் தயாரிப்பதன் மூலமா, கேள்வி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதன்மூலம் சபையிலுள்ள அனைவரும் இந்தப் பள்ளிக்காக போற்றுதலைக் காண்பிக்கலாம். எல்லா மாணாக்கர்களும் தங்கள் பேச்சு நியமிப்புகளைப் பொறுப்புணர்ச்சியுடன் கருதுவார்களென்று நம்பப்படுகிறது. அட்டவணையில் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாணாக்கர் வரவில்லையெனில், அந்தப் பேச்சை வாலண்டியர் ஒருவர் ஏற்று, அத்தகைய குறுகிய நேர அறிவிப்பில் செய்வதற்கு பொருத்தமான குறிப்புகள் என்று அவர் நினைப்பதை தயாரித்து எடுத்துரைக்கலாம். அல்லது பள்ளிக் கண்காணி பொருத்தமாக சபையார் பங்கெடுத்தலோடு அந்த விஷயத்தைச் சிந்திக்கலாம்.
அட்டவணை
“td—புதிய உலக மொழிபெயர்ப்பில் காணப்படுகிற “கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப்பொருள்கள்”
ஜன. 2 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 119:113-176
பாட்டு எண் 127 (64)
எண் 1: திரள் கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ளுதல் (uw பக். 103-4 பாரா. 1-4)
எண் 3: இயேசு ஏன் ‘அந்த மனிதன்’ என்றழைக்கப்பட்டார்? (gt அதி. 123)
எண் 4:td 32A மனிதனுடைய முடிவு முன்னதாக விதிக்கப்படுவதில்லை
ஜன. 9 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 120 முதல் 130
பாட்டு எண் 26 (9)
எண் 1: மற்ற செம்மறியாடுகள் காண்பிக்கவேண்டிய குணங்கள் (uw பக். 105 பாரா. 5)
எண் 3: பிலாத்து ஏன் இயேசுவுக்கு பயந்தான் (gt அதி. 124)
எண் 4: td 33A இயேசுவின் மானிட ஜீவன் எல்லாரையும் மீட்கும்பொருளாக இருந்தது
ஜன. 16 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 131 முதல் 136
பாட்டு எண் 129 (66)
எண் 1: ஏன் திரள்கூட்டத்தினர் மிகுந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைக்கின்றனர் (uw பக். 106-9 பாரா. 6-13)
எண் 3: மனிதவர்க்கத்திற்காக இயேசுவினுடைய அன்பின் சான்றுகள் (gt அதி. 125)
எண் 4: td 33B இயேசு ஏன் மீட்கும்பொருளை கொடுக்க முடிந்தது
ஜன. 23 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 137 முதல் 140 வரை
பாட்டு எண் 205(118)
எண் 1: ஏன் இன்று பூமியில் ராஜ்ய சுதந்திரவாளிகள் வெகு சிலரே இருக்கின்றனர்(uw பக். 110-12 பாரா. 1-7)
எண் 3: இயேசு எவ்வாறு இறுதிவரை முன்மாதிரியானவராய் இருந்தார் (gt அதி. 126)
எண் 4: td 34A ஒரே உண்மையான மதத்தை அடையாளம் கண்டுகொள்வது எப்படி
ஜன. 30 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 141 முதல் 145
பாட்டு எண் 165(81)
எண் 1: சங்கீதம்—ஏன் பயனுள்ளது—பகுதி 1(si பக். 104-5 பாரா 23-7)
எண் 3: இயேசுவின் அடக்கமும் காலியான கல்லறையும் நமக்கு ஏன் அக்கறைக்குரியது (gt அதி. 127)
எண் 4: td 34B பொய் போதனைகளைக் கண்டனம் செய்வது தவறா?
பிப். 6 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 146 முதல் 150
பாட்டு எண் 102(53)
எண் 1: சங்கீதம்—ஏன் பயனுள்ளது—பகுதி 2(si பக். 105-6 பாரா. 28-32)
எண் 3: இயேசுவினுடைய உயிர்த்தெழுதல் சந்தோஷம் (gt அதி.128)
எண் 4: td 34C மதத்தை மாற்றிக்கொள்வதை கடவுள் எப்பொழுது அங்கீகரிக்கிறார்
பிப். 13 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 1 மற்றும் 2
பாட்டு எண் 185(98)
எண் 1: நீதிமொழிகளுக்கு முன்னுரை பகுதி—1 (si பக். 106-7 பாரா. 1-5)
எண் 3: உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்வாறு பலப்படுத்தப்படுகிறது (gt அதி. 129)
எண் 4: td 34D எல்லா மதங்களிலும் கடவுள் நல்லதை காண்கிறாரா?
பிப். 20 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 3 மற்றும் 4
பாட்டு எண் 200(108)
எண் 1: நீதிமொழிகளுக்கு முன்னுரை—பகுதி 2(si பக். 107-8 பாரா. 6-11)
எண் 3: gt td 35A மரித்தோரிலிருந்து யார் உயிர்த்தெழுப்பப்படுவர்?
பிப். 27 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 5 மற்றும் 6
பாட்டு எண் 11(12)
எண் 1: தாங்கள் ஆவிக்குரிய குமாரர்கள் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்? (uw பக். 112-16 பாரா. 8-14)
எண் 3: இயேசு எவ்வாறு தம்முடைய சீஷர்களைப் பலப்படுத்துகிறார் (gt அதி. 131)
எண் 4: td 35B மரித்தோர் எங்கே உயிர்த்தெழுப்பப்படுவர்?
மார்ச் 6 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 7 மற்றும் 8
பாட்டு எண் 105(46)
எண் 1: யெகோவாவின் காணக்கூடிய அமைப்பை அடையாளம் கண்டுகொள்ளுதல் (uw பக். 117-20 பாரா. 1-7)
எண் 3: கடவுளுடைய வலது பாரிசத்தில் இயேசு என்ன செய்கிறார் (gt அதி. 132)
எண் 4: td 36A இயேசு மீண்டும் வருவது காணமுடியாதது
மார் 13 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 9 மற்றும் 10
பாட்டு எண் 224(106)
எண் 1: நிர்வாகக் குழுவினுடைய வேதப்பூர்வமான பாகம் (uw பக். 120-22 பாரா. 8-12)
எண் 3: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் இயேசு ஏன் மிகப் பெரிய மனிதர் (gt அதி. 133)
எண் 4: td 36B இயேசு மீண்டும் வருவது காணக்கூடிய உண்மைகளால் பகுத்துணரப்படுகிறது
மார்ச் 20 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 11 மற்றும் 12
எண் 1: கடவுளுடைய அமைப்புக்கான நம்முடைய போற்றுதலை பகுத்தாராய்தல் (uw பக். 123-4 பாரா. 13, 14)
எண் 3: ஏன் அனைவரும் மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை வாசிக்க வேண்டும் (gt—புத்தகத்திலுள்ள முன்னுரையிலிருந்து தயார்செய்யுங்கள்)
எண் 4: td 37A கிறிஸ்தவர்கள் ஓய்வுநாளை ஆசரிக்கவேண்டிய கடமையில் இல்லை
மார்ச் 27 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 13 மற்றும் 14
எண் 1: ஆலோசனைக்கு ஏன் செவிகொடுக்க வேண்டும்? (uw பக்.. 125-7 பாரா. 1-4)
எண் 3: td 37B ஓய்வுநாள் சட்டம் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை
எண் 4: td 37c கடவுளுடைய ஓய்வுநாள் எப்பொழுது ஆரம்பித்து, எப்பொழுது முடிவடைகிறது
ஏப் 3: பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 15 மற்றும் 16
பாட்டு எண் 59(31)
எண் 1: ஆலோசனையை ஏற்றுக்கொண்டவர்களுடைய மாதிரியைப் பின்பற்றுங்கள் (uw பக். 127-8 பாரா. 5, 6)
எண் 3: td38A கிறிஸ்துவின் மூலம் மாத்திரமே கடவுள் இரட்சிப்பை அளிக்கிறார்
எண் 4: td38B “ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவர்கள்” என்பது வேதப்பூர்வமானதல்ல
ஏப் 10 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 17 மற்றும் 18
பாட்டு எண் 163 (94)
எண் 1: விலைமதியா பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள் (uw பக். 128-31 பாரா 7-14)
எண் 3: td38C “சர்வலோக இரட்சிப்பு” என்பது வேதப்பூர்வமானதல்ல
எண் 4: td38A பாவம் என்பது என்ன
ஏப். 17 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 19 மற்றும் 20
பாட்டு எண் 35(15)
எண் 1: உண்மை கிறிஸ்தவர்களை அன்பு அடையாளங்காட்டுகிறது (uw பக். 132-3 பாரா. 1-5)
எண் 3: td39B ஆதாமின் பாவத்தின் காரணமாக ஏன் எல்லா மனிதர்களும் துன்புறுகின்றனர்
எண் 4: td39C விலக்கப்பட்ட கனி என்ன?
ஏப். 24 எழுத்துமுறை மறுபார்வை. சங்கீதம் 119:113 முதல் நீதிமொழிகள் 20 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 6 (4)
மே 1 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 21 மற்றும் 22
பாட்டு எண் 95(52)
எண் 1: பிரச்சினைகள் எழும்புகையில் என்ன செய்வது (uw பக். 134 பாரா. 6-9)
எண் 3: td39D பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவம் என்பது என்ன?
எண் 4: td40A ஆத்துமா என்பது என்ன?
மே 8 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 23 மற்றும் 24
பாட்டு எண் 46(20)
எண் 1: பிரச்சினைகளை வேதப்பூர்வமாக கையாளுங்கள் (uw பக். 135-8 பாரா. 10-17)
எண் 3: td 40B ஆத்துமாவும் ஆவியும் எவ்வாறு வேறுபடுகிறது?
எண் 4: td 41A பரிசுத்த ஆவி என்பது என்ன?
மே 15 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 25 மற்றும் 26
பாட்டு எண் 145(115)
எண் 1: வீட்டில் தெய்வபக்தியை அனுசரியுங்கள் (uw பக். 139-41 பாரா 1-5)
எண் 3: td 41B மனிதன் மற்றும் மிருகத்தினுடைய உயிர்-சக்தி ஆவி என்றழைக்கப்படுகிறது
எண் 4: td 41C நாம் ஏன் எல்லா வகையான ஆவியுலகத் தொடர்புகளையும் விட்டோழிக்கிறோம்
மே 22 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 27 மற்றும் 28
பாட்டு எண் 84(30)
எண் 1: நீதிமொழிகள்—ஏன் பயனுள்ளது—பகுதி 1 (si பக். 109-10 பாரா. 19-28)
எண் 3: td 42A ஏன் யெகோவா திரித்துவத்தின் ஒரு பாகமாக இருக்க முடியாது
எண் 4: td 42B குமாரன் பிதாவுக்கு சமமானவர் அல்ல
மே 29 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 29 முதல் 31
பாட்டு எண் 50(23)
எண் 1: நீதிமொழிகள்—ஏன் பயனுள்ளது—பகுதி 2 (si பக். 110-11 பாரா. 29-38)
எண் 3: td42C கடவுளும் கிறிஸ்துவும் எவ்வாறு ஒன்றாக இருக்கிறார்கள்
எண் 4: td42D பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல
ஜூன் 5 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 1 முதல் 3
பாட்டு எண் 41(22)
எண் 1: பிரசங்கிக்கு முன்னுரை (si பக். 112-13 பாரா. 1-8)
எண் 2: பிரசங்கிக்கு 3:1-9, 18-22
எண் 3: td 43A உலக வேதனைக்கு கடவுள் காரணர் அல்ல
எண் 4: td 43B கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதித்திருக்கிறார்
ஜூன் 12 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 4 முதல் 6
பாட்டு எண் 62(34)
எண் 1: கடவுளுடைய குடும்ப ஏற்பாட்டில் உங்களுடைய பாகத்தை நிறைவேற்றுங்கள் (uw பக்.142-4 பாரா. 6-13)
எண் 3: td 43C கடவுள் தம்முடைய பெரிதான இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்
எண் 4: td 43D கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே ஒரே பரிகாரம்
ஜூன் 19 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 7 முதல் 9
பாட்டு எண் 162(89)
எண் 1: நாம் ஏன் மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை என்பதற்கு வேதப்பூர்வ காரணங்கள் (uw பக். 146-8 பாரா. 1-6)
எண் 3: td 44A உண்மைகிறிஸ்தவர்கள் அனைவரும் சத்தியத்திற்கு சாட்சிபகர வேண்டும்
எண் 4: td 44B நாம் ஏன் ஜனங்களை தொடர்ந்த சந்திக்க வேண்டும்
ஜூன் 26 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 10 முதல் 12
பாட்டு எண் 113 (68)
எண் 1: பிரசங்கி—ஏன் பயனுள்ளது (si பக். 114 பாரா. 15-19)
எண் 3: td 44C சாட்சிகொடுத்தல் இரத்தப்பழியிலிருந்து நம்மை விடுவிக்கிறது
எண் 4: td 1a முன்னோர்களை வழிபடுதல் ஏன் வீணானது
ஜூலை 3 பைபிள் வாசிப்பு: உன்னதப்பாட்டு 1 முதல் 4
பாட்டு எண் 168(84)
எண் 1: உன்னதப்பாட்டுக்கு முன்னுரை (si பக். 115 பாரா. 1-4)
எண் 3: td 1B நாம் மனிதரை கனம்பண்ணலாம், ஆனால் கடவுளை மட்டும் வணங்குகிறோம்
எண் 4: td 2A துன்மார்க்கத்தை அழிப்பதற்கான கடவுளுடைய போர்
ஜூலை 10 பைபிள் வாசிப்பு: உன்னதப்பாட்டு 5 முதல் 8
பாட்டு எண் 152(82)
எண் 1: உன்னதப்பாட்டு—ஏன் பயனுள்ளது (si பக். 117 பாரா. 16-18)
எண் 3: td 2B அர்மகெதோன் கடவுளுடைய அன்பை மீறுவதில்லை
எண் 4: td 3A முழுக்காட்டுதல் ஒரு கிறிஸ்தவதேவை
ஜூலை 17 பைபிள் வாசிப்பு: ஏசாயா 1 முதல் 3
பாட்டு எண் 180(100)
எண் 1: ஏசாயாவுக்கு முன்னுரை (si பக். 118-119 பாரா. 1-8)
எண் 3: td 3B முழுக்காட்டுதல் பாவங்களைக் கழுவிவிடுவதில்லை
எண் 4: td 4A பைபிள் கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை
ஜூலை 24 பைபிள் வாசிப்பு: ஏசாயா 4 முதல் 7
பாட்டு எண் 144(78)
எண் 1: மன்னிப்பதற்கும் இரட்சிப்பதற்கும் விசுவாசம் இன்றியமையாதது (uw பக். 148 பாரா. 7-10)
எண் 3: td 4B பைபிள் நம்முடைய நாளுக்கான நடைமுறையான வழிகாட்டி
எண் 4: td 4C பைபிள் எல்லா தேசத்து மக்களுக்கும் இனத்தாருக்குமான புத்தகம்
ஜூலை 31 பைபிள் வாசிப்பு: ஏசாயா 8 முதல் 10
பாட்டு எண் 140(77)
எண் 1: நியாயப்பிரமாணத்தை அறிந்துகொள்வதிலிருந்து வரும் நன்மைகள் (uw பக். 150-1 பாரா. 11-13. பக். 153 பாரா. 14)
எண் 3: td 5A இரத்தமேற்றுதல்கள் கடவுளுடைய சட்டத்தை மீறுகின்றன
எண் 4: td 5B கடவுளுக்கு கீழ்படிதல் இன்றியமையாதது
ஆகஸ்ட் 7 பைபிள் வாசிப்பு: ஏசாயா 11 முதல் 13
பாட்டு எண் 44(22)
எண் 1: மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள சில அடிப்படை நியமங்கள்: “கடவுளிடமுள்ள பொறுப்புகள்” (uw பக். 152)
எண் 3: td 6A புறஜாதியாருடைய காலங்கள் 1914-ல் முடிவடைந்தன
எண் 4: td 7A உண்மை கிறிஸ்தவ சர்ச்சை அடையாளம் கண்டுகொள்ளுதல்
ஆகஸ்ட் 14 பைபிள் வாசிப்பு: ஏசாயா 14 முதல் 17
பாட்டு எண் 170(95)
எண் 1: மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள சில அடிப்படை நியமங்கள்: “தடைவிதிக்கப்பட்ட மத பழக்கவழக்கங்கள்” (uw பக்.152)
எண் 3: td 7B உண்மை கிறிஸ்தவ சர்ச் கிறிஸ்தவத்தின்மீது கட்டப்பட்டுள்ளது
எண் 4: td 8A சிருஷ்டிப்பு நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானத்தோடு ஒத்திருக்கிறது
ஆகஸ்டி 21 பைபிள் வாசிப்பு: ஏசாயா 18 முதல் 22
பாட்டு எண் 175(104)
எண் 1: மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள சில அடிப்படை நியமங்கள்: “திருமணமும் குடும்ப வாழ்க்கையும்” (uw பக். 152)
எண் 3: td 8B சிருஷ்டிப்பின் நாட்கள் 24-மணிநேர நாட்கள் அல்ல
எண் 4: td 9A நிந்தனையின் கழுமரத்தில் இயேசு மரித்தார், சிலுவையில் அல்ல
ஆகஸ்ட் 28 எழுத்துமுறை மறுபார்வை. நீதிமொழிகள் 21 முதல் ஏசாயா 22 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 204(55)
செப். 4 பைபிள் வாசிப்பு: ஏசாயா 23 முதல் 26
பாட்டு எண் 106(55)
எண் 1: மோசேயின் நியாயப்பிரமாணத்திலுள்ள சில அடிப்படை நியமங்கள்: “மற்ற ஆட்கள் உட்படும் கடமைகள்” (uw பக். 152)
எண் 3: td 9B சிலுவையை வழிபடுவது ஏன் விக்கிரகாராதனை
எண் 4: td 10A ஏன் மனிதன் மரிக்கிறான்
செப். 11 பைபிள் வாசிப்பு: ஏசாயா 27 முதல் 29
பாட்டு எண் 27(7)
எண் 1: உயிரும் இரத்தமும் பரிசுத்தமானவை (uw பக். 154-56 பாரா. 1-6)
எண் 2: ஏசாயா 28:1-13
எண் 3: td 10B மரித்தோர் உணர்வற்றவர்களாயும் ஒன்றும் அறியாதவர்களாயும் இருக்கிறார்கள்
எண் 4: td 10C மரித்தோருடன் பேசுவது ஏன் கூடாதகாரியம்
செப். 18 பைபிள் வாசிப்பு: ஏசாயா 30 முதல் 33
பாட்டு எண் 160(88)
எண் 1: இரத்தத்தின் மருத்துவ பயன் மற்றும் கிறிஸ்தவரின் உத்தரவாதம் (uw பக். 156-160 பாரா. 7-12)
எண் 3: td 11A பிசாசு உண்மையில் இருக்கிறான்
எண் 4: td 11B பிசாசு இந்தக் காரிய ஒழுங்குமுறையை ஆளுகிறான்
செப். 25 பைபிள் வாசிப்பு: ஏசாயா 34 முதல் 37
பாட்டு எண் 146(80)
எண் 1: உண்மை கிறிஸ்தவர்கள் உலகத்தின் பாகமானவர்களல்ல (uw பக். 161-3 பாரா. 1-6)
எண் 3: td 11C சாத்தானுடன் சேர்ந்துகொண்ட தூதர்கள் தங்களைத் தாங்களே பேய்களாக்கிக் கொண்டார்கள்
எண் 4: td 12A பூமிக்கான கடவுளுடைய நோக்கம்
ஆக. 2 பைபிள் வாசிப்பு: ஏசாயா 38 முதல் 40
பாட்டு எண் 143(76)
எண் 1: உலகத்தின் பாகமில்லாதவர்களாயிருப்பது கிறிஸ்தவர்களிடம் தேவைப்படுத்துவது என் (uw பக் 163-8 பாரா. 7-16)
எண் 3: td 12B பூமி எப்பொழுதும் குடியிருக்கப்பட்டிருக்கும்
எண் 4: td 13A எவ்வாறு பொய் தீர்க்கதரிசிகளை அடையாளம் காண்பது
ஆக. 9 பைபிள் வாசிப்பு: 41 முதல் 43
பாட்டு எண் 92(51)
எண் 1: தைரியத்துடன் கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து பேசுங்கள் (uw பக். 169-71 பாரா 1-7)
எண் 2: ஏசாயா 43:1-15
எண் 3: td 14A ஆவிக்குரிய சுகப்படுத்துதல் நிரந்தர நன்மைகளையுடையது
எண் 4: td 14B கடவுளுடைய ராஜ்யம் நிரந்தர சரீர சுகப்படுத்துதலைக் கொண்டுவரும்
ஆக். 16 பைபிள் வாசிப்பு: ஏசாயா 44 முதல் 46 வரை
பாட்டு எண் 166(90)
எண் 1: அப்போஸ்தலருடைய முன்மாதிரியிலிருந்து பயனடைதல் (uw பக். 172 பாரா 8)
எண் 3: td 14C தற்போதைய விசுவாச சுகப்படுத்துதலில் தெய்வீக அங்கீகாரம் இல்லை
எண் 4: td 14D அந்நியபாஷை பேசுதல் அதன் நோக்கத்தை சேவித்தது
அக். 23 பைபிள் வாசிப்பு: 47 முதல் 49
பாட்டு எண் 56(33)
எண் 1: தைரியத்துடனும் பகுத்துணர்வுடனும் பிரசங்கித்தல் (uw பக். 173-5 பாரா. 9-13)
எண் 3: td 15A 1,44,000 பேர் மாத்திரமே பரலோகத்திற்கு செல்கின்றனர்
எண் 4: td 16A ஒருவரும் நரகத்தில் வதைக்கப்படுவதில்லை
அக். 30 பைபிள் வாசிப்பு: ஏசாயா 50 முதல் 53
பாட்டு எண் 132(70)
எண் 1: யெகோவாவின் நாள் அண்மையில் இருக்கிறது என்பதை மனதில் வையுங்கள் (uw பக். 176-7 பாரா. 1-4)
எண் 3: td 16B அக்கினி அழிவுக்கு அடையாளமாயிருக்கிறது
எண் 4: td 16C ஐசுவரியவானும் லாசருவும் பற்றிய உண்மையில் சொல்லர்த்தமான எந்த அக்கினியும் இல்லை
நவ. 6 பைபிள் வாசிப்பு: ஏசாயா 54 முதல் 57
பாட்டு எண் 187(93)
எண் 1: அடையாளத்தை நிறைவேற்றும் சம்பவங்களுக்கு விழிப்புடனிருங்கள் (uw பக். 178-83 பாரா. 7-14
எண் 3: td 17A பூர்வ கிறிஸ்தவர்கள் பிறந்தநாட்களையோ கிறிஸ்மஸையோ கொண்டாடவில்லை
எண் 4: td 18A உருவ வழிபாடு கடவுளை நிந்திக்கிறது
நவ. 13 பைபிள் வாசிப்பு: ஏசாயா 58 முதல் 62
பாட்டு எண் 107(57)
எண் 1: மகத்தான பிரிக்கும் வேலை—முடிவு சமீபம் என்பதற்கு அத்தாட்சி (uw பக். 179-83 பாரா 7-14)
எண் 3: td 18B உருவ வழிபாடு இஸ்ரவேலுக்கு கண்ணியாக இருந்தது
எண் 4: td 18C யெகோவா நிராகரிக்கிற வழிபாடு
நவ. 20 பைபிள் வாசிப்பு: ஏசாயா 63 முதல் 66
பாட்டு எண் 77(41)
எண் 1: ஏசாயா—ஏன் பயனுள்ளது (si பக். 123. பாரா. 34-9)
எண் 3: td 19A கலப்பு விசுவாசம் கடவுளால் அங்கீகரிக்கப்படுவதில்லை
எண் 4: td 19B தனிப்பட்ட பக்தியை கடவுள் கேட்கிறார்
நவ. 27 பைபிள் வாசிப்பு: எரேமியா 1 முதல் 3
பாட்டு எண் 70 (39)
எண் 1: எரேமியாவுக்கு முன்னுரை (si பக். 124. பாரா 1-5)
எண் 3: td 20A உண்மைகிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரை அறிந்திருக்கவும் பயன்படுத்தவும் வேண்டும்
எண் 4: td 20B கடவுள் இருக்கிறார் என்பதற்கு பைபிளும் சிருஷ்டிப்பும் சான்றுபகருகின்றன
டிச. 4 பைபிள் வாசிப்பு: எரேமியா 4 முதல் 6
பாட்டு எண் 97(50)
எண் 1: யெகோவாவின் ஞானமான மற்றும் அன்பான நோக்கம் (uw பக். 184-85 பாரா. 1-5)
எண் 3: td 20C யெகோவாவின் வியக்கத்தக்க குணங்கள்
எண் 4: td 20D எல்லாரும் அதே கடவுளை சேவிக்கிறதில்லை
டிச. 11 பைபிள் வாசிப்பு: எரேமியா 7 முதல் 9
பாட்டு எண் 158(85)
எண் 1: யெகோவா தம்முடைய ஜனத்தை ஒற்றுமைப்படுத்துகிறார் (uw பக். 186-7 பாரா. 6-9)
எண் 3: td 21A யெகோவாவின் சாட்சிகளுடைய ஆரம்பம்
எண் 4: td 22A இயேசு கடவுளுடைய குமாரன், நியமிக்கப்பட்ட அரசர்
டிச. 18 பைபிள் வாசிப்பு: எரேமியா 10 முதல் 12
பாட்டு எண் 222(119)
எண் 1: மனித சிருஷ்டி விடுதலையாக்கப்படும் (uw பக். 188-91 பாரா. 10-17)
எண் 3: td 22B நாம் ஏன் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்கவேண்டும்
எண் 4: td 22C கிறிஸ்துவில் விசுவாசம் கிரியைகளுடன் சேர்ந்து வரவேண்டும்
டிச. 25 எழுத்துமுறை மறுபார்வை. ஏசாயா 23 முதல் எரேமியா 12 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 34(8)