அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கான சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 70.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கான சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கான ஆறு மாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்கள் கிடையாது. தயவுசெய்து கவனியுங்கள்: மாதம் இருமுறை வரும் காவற்கோபுர பத்திரிகைகளுக்கான சந்தாக்கள் கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன. மாதாந்தர பத்திரிகைகளுக்கான சந்தாக்கள் உருது, குஜராத்தி, நேப்பாளி, பெங்காலி, ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன. மாதம் இருமுறை வரும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்கள் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் கிடைக்கின்றன. மாதாந்தர பத்திரிகைகளுக்கான சந்தாக்கள் கன்னடம், குஜராத்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கின்றன. வினியோகஸ்தர் ஆர்டர்களுக்கான விழித்தெழு! பிரதிகள் நேப்பாளி, பெங்காலி, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் காலாண்டுப் பிரதிகளாக சபைகளுக்கு கிடைக்கின்றன. ஆனால் தனிப்பட்ட சந்தாக்கள் இந்த நான்கு மொழிகளில் கிடையாது. நவம்பர்: பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அதோடு பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? புத்தகம். ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில், பள்ளி சிற்றேடில்லாமல் வேறு எந்தச் சிற்றேட்டையாகிலும் அல்லது ஏதாவது 192-பக்க புத்தகத்தையாகிலும் அளிக்கலாம். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம் 40.00 ரூபாய் நன்கொடைக்கு. இந்தப் பிரசுரம் உங்களுடைய கையிருப்பில் இல்லாமல் இருக்குமானால், அல்லது வித்தியாசமான அளிப்புக்கே சூழ்நிலைமை பொருத்தமாக இருக்குமானால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அதே நன்கொடைக்கு பயன்படுத்தலாம் (சிறிய அளவு என்றும் வாழலாம் புத்தகம் 20.00 ரூபாய்). ஜனவரி: 192-பக்க பழைய புத்தகங்களின் விசேஷ அளிப்பு ஒவ்வொன்றும் நன்கொடை 6.00 ரூபாய்.
◼ ஒரு சபையோடு கூட்டுறவுகொண்டிருக்கிற அனைவரும், தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான புதிய மற்றும் புதுப்பித்தல் சந்தாக்கள் அனைத்தையும் சபைமூலம் அனுப்பவேண்டும், சங்கத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது.
◼ இந்த நம் ராஜ்ய ஊழிய வெளியீட்டின் உட்சேர்க்கையானது, “1995-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை.” இதை 1995-ம் ஆண்டு முழுவதற்குமுரிய மேற்கோளுக்காக வைத்துக்கொள்ள வேண்டும். 1994-க்குரிய அட்டவணை பிப்ரவரி 20, 1995 வரையுள்ள வாரத்திற்கு இருந்தபோதிலும், 1995-க்குரிய அட்டவணை ஜனவரி 2, 1995-ல் இருந்து ஆரம்பிக்கிறது என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இப்படி மீண்டும் வருவதற்கு காரணம், பல பத்தாண்டுகளாக நாம் செய்திருக்கிறபடி, புரூக்லினுடைய அட்டவணைக்கு இரண்டு மாதங்கள் பின்தங்கி வருவதற்கு பதிலாக, 1995 முதற்கொண்டு நாம் அதையே பின்பற்றிவருவோம். இதன் விளைவாக, 1994-க்குரிய அட்டவணையில் ஜனவரி மற்றும் பிப்ரவரிக்காக பேச்சுப் பொருள் அட்டவணையிடப்பட்டிருந்தபோதிலும், பயன்படுத்தப்படாது. பிப்ரவரி 20-ல் துவங்கும் வாரத்திற்கு அட்டவணையிடப்பட்ட எழுத்துமுறை மறுபார்வையும் இருக்காது. பள்ளிக் கண்காணிகள் வரக்கூடிய நாட்களில் நடக்கப்போகிற கூட்டங்களில் இந்தப் பகுதியிலிருந்து தங்களால் முடிந்தளவு குறிப்புகளை எடுத்துச் சொல்லலாம். ஆனால் ஜனவரி 2, 1995-ல் துவங்கும் வாரத்திலிருந்து எல்லா சபைகளும் 1994-க்குரிய அட்டவணையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, 1995-க்குரிய அட்டவணையை பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும். இதுமுதற்கொண்டு பள்ளி அட்டவணையானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதற்கொண்டு டிசம்பர் வரையாக இருக்கும். 1995-ல், உலகிலுள்ள நம்முடைய பெரும்பாலான சகோதரர்களால் பின்பற்றப்படுகிற பள்ளி அட்டவணையையே நாமும் கொண்டிருப்போம் என்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
◼ பிளாஸ்டிக் பேட்ஜ்-கார்டு உறைகளை ஆர்டர் செய்வதன்பேரில் நம் ராஜ்ய ஊழியம், ஏப்ரல் 1994-ல் உள்ள கடைசி அறிவிப்பை தயவுசெய்து மறுபார்வை செய்யுங்கள்.
◼ பிரஸ்தாபிகளுக்கு பெரிய அளவு பாட்டுப் புத்தகத்தின் விலை 60.00 ரூபாய், பயனியர்களுக்கு 45.00 ரூபாய்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
கன்னடம், குஜராத்தி, மராத்தி மற்றும் ஹிந்தி: இந்த இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள்.
◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
ஆங்கிலம்: புதிய உலக மொழிபெயர்ப்பு—சாதாரண அளவு (bi12), யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்—பெரிய அளவு; கன்னடம்: பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம், குருச்சேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும், விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை; நேப்பாளி: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!; பெங்காலி: குருச்சேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும், அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?; ஹிந்தி: பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்.
◼ கையிருப்பிலில்லா பிரசுரங்கள்:
ஆங்கிலம்: பரதீஸுக்குச் செல்லும் வழியை கண்டுபிடிப்பது எவ்வாறு (How to Find the Road to Paradise) (துண்டுப்பிரதி); யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (Jehovah’s Witnesses—Proclaimers of God’s Kingdom); குஜராத்தி: அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?, “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி”; தமிழ்: உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்; மலையாளம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கம் என்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?; ஹிந்தி: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி”.