உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/94 பக். 2
  • ஜூலை மாத ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை மாத ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
  • துணை தலைப்புகள்
  • ஜூலை 4-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 11-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 18-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 25-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 7/94 பக். 2

ஜூலை மாத ஊழியக் கூட்டங்கள்

ஜூலை 4-ல் துவங்கும் வாரம்

பாட்டு 141 (64)

10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். சபை இருப்பிலுள்ள சிறு புத்தகங்களின் தலைப்புகளைக் குறிப்பிடுங்கள்; ஊழியத்தில் பயன்படுத்துவதற்குப் போதியவற்றைப் பெற்றுக்கொள்ளும்படி பிரஸ்தாபிகளை ஊக்குவியுங்கள். குறிப்பிட்ட ஒரு மொழியில் சிறு புத்தகங்கள் சபை இருப்பில் இல்லையெனில், அந்த மொழியில் சிற்றேடுகளைப் பயன்படுத்தும்படி ஆலோசனை கூறுங்கள்.

17 நிமி:“தளராது வீடுவீடாகச் செல்லுதல்” கேள்வி-பதில் சிந்திப்பு. வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தின் மூலம் சத்தியத்தைப் பெற்ற, சபையிலுள்ள சிலர் நன்றிமதித்துணர்வான கூற்றுகளைக் கூறும்படி அழையுங்கள்.

18 நிமி:“சத்தியத்தைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். ஆலோசனை கொடுக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று பிரசங்கங்களைத் திறம்பட்ட பிரஸ்தாபிகள் நடித்துக் காட்டும்படி ஏற்பாடு செய்யுங்கள். சுருக்கமான, எளிய அணுகுமுறையின் பயன்களை அறிவுறுத்துங்கள்.

பாட்டு 120 (26), முடிவு ஜெபம்.

ஜூலை 11-ல் துவங்கும் வாரம்

பாட்டு 115 (15)

12 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் அதோடுகூட நன்கொடைக்காகச் சங்கத்தின் நன்றிதெரிவிப்புகள் எவையாயினும் இருந்தால் அவற்றையும் வாசியுங்கள். நன்கொடைக்காகப் போற்றுதலைத் தெரிவியுங்கள். (யாத். 35:29) சாயங்கால ஊழியம் செய்வதைப்பற்றி சிந்திக்கும்படி பிரஸ்தாபிகளை ஊக்குவியுங்கள்—வீடுவீடாகச் செய்யும் ஊழியத்துக்கும் மறுசந்திப்புகளுக்கும் நல்ல நேரம்.

15 நிமி:சபையின் தேவைகள். அல்லது பிப்ரவரி 15, 1994-ன் காவற்கோபுரம், பக்கங்கள் 22-5-லுள்ள, “ஆபத்து அச்சுறுத்தும்போது விலகி இருங்கள்” என்ற கட்டுரையின்பேரில், அனுபவமுள்ள மூப்பர் ஒரு பேச்சைக் கொடுக்கும்படி செய்யுங்கள்.

18 நிமி:“நாம் மறுசந்திப்பு செய்யாவிட்டால் அவர்கள் எவ்வாறு கேள்விப்படுவார்கள்?” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். பாரா 3-லும் 4-லும் உள்ள ஆலோசனைகளை நடித்துக் காட்டுங்கள். படிப்புகள் தொடங்கும் இலக்குடன் மறுசந்திப்புகள் செய்ய வேண்டியதன் காரணத்தைக் காட்டி கூடுதலான குறிப்புகளைக் கொடுங்கள்.

பாட்டு 123 (63), முடிவு ஜெபம்.

ஜூலை 18-ல் துவங்கும் வாரம்

பாட்டு 125 (44)

15 நிமி:சபை அறிவிப்புகள். வார இறுதிக்குரிய வெளி ஊழிய ஏற்பாடுகளைக் கூறி, பத்திரிகை வினியோகத்தில் பங்குகொள்ளும்படி ஊக்குவியுங்கள்.

8 நிமி:கேள்விப் பெட்டி. கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.

22 நிமி:“அக்கறைகாட்டுவோரை, பலன்தரும் தெரு ஊழியத்தின்மூலம் கண்டுபிடித்தல்.” ஊழியக் கண்காணி அல்லது தெரு ஊழியத்தில் பலன்தரத்தக்கவராயுள்ள வேறு மூப்பர், இந்தக் கட்டுரையைத் தெரு ஊழியத்தில் அனுபவமுள்ளோராக இருக்கும் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளோடு கலந்தாலோசிக்கிறார். கலந்தாலோசிப்பில் இரண்டு அல்லது மூன்று சுருக்கமான அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். சமீப வெளியீட்டு பத்திரிகைகளைக் கொண்டு அணுகுமுறைகளை நடித்துக் காட்டுங்கள்.

பாட்டு 134 (33), முடிவு ஜெபம்.

ஜூலை 25-ல் துவங்கும் வாரம்

பாட்டு 140 (77)

10 நிமி:சபை அறிவிப்புகள். பத்திரிகைகளின் சமீப வெளியீடுகளை அளிக்கும் முறையை நடித்துக் காட்டுங்கள். பத்திரிகை வினியோகிப்பில் எல்லாரும் பங்குகொள்ளும்படி ஊக்குவியுங்கள்.

15 நிமி:“இளைஞருக்கு நல்ல முன்மாதிரி தேவை.” கேள்வி-பதில் மூலம். நல்ல முன்மாதிரிகளாக இருக்கிற ஒன்றிரண்டு இளைஞரைப் பேட்டி காணுங்கள். அவர்கள் தங்களுக்கு ஆவிக்குரிய என்ன இலக்குகளை வைத்திருக்கின்றனரெனவும் அவர்களுடைய முயற்சிகள் எவ்வாறு மிகைப்பட்ட ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்திருக்கின்றனவெனவும் விளக்கிக் கூறும்படி செய்யுங்கள்.

20 நிமி:நம்முடைய பிரசங்கங்களின் பலன்தரத்தக்கத் தன்மையை முன்னேற்றுவித்தல். குடும்ப தொகுதி பள்ளி துணைநூல் (School Guidebook), பக்கம் 99, பாரா 9-ல் உள்ள ஆலோசனைகளின்பேரில் ஆதாரம் கொண்ட பயிற்சி நேரத்தை வைத்துள்ளது. குடும்ப உறுப்பினர் ஒருவர் பிரசங்கத்தை நடித்துக் காட்டுகிறார், மற்றவர்கள் போற்றுதலையும் முன்னேற்றம் செய்வதற்கான ஆலோசனைகளையும் கொடுக்கின்றனர். உங்கள் பிராந்தியத்தில் எதிர்ப்படும் பொதுவான எதிர்ப்பு ஒன்றையும் சேர்த்துக்கொண்டு, அதை எவ்வாறு மேற்கொள்வதென்பதைக் கலந்தாலோசியுங்கள்.

பாட்டு 187 (93), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்