மக்கள் எவ்வாறு என்றும் வாழலாம் என்பதைக் கற்றுக்கொள்ள உதவிசெய்யத் திரும்பிச்செல்லுங்கள்
1 என்றும் வாழலாம் புத்தகத்தை வெளியிட்டது முதற்கொண்டு, 115 மொழிகளில் 6 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது யெகோவாவின் ஊழியர்களாக இருக்கும் அநேகர், பைபிளின் அடிப்படை சத்தியங்களை இந்தச் சிறந்த கருவியின்மூலமாகக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாதமும் அடுத்த மாதமும், இந்தப் பைபிள் படிப்புத் துணைவனை மக்களுக்கு நாம் அளித்துக்கொண்டிருப்போம், அல்லது அதை ஏற்கெனவே வைத்திருக்கிற நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களை நாம் சந்திக்கலாம்.
2 இந்தப் புத்தகத்தை வைத்திருப்போரைத் திரும்பச் சந்தித்தல்: சில பிரஸ்தாபிகள் இதன் பொருளடக்கத்திற்குக் கவனத்தைத் திருப்பி, அக்கறையுள்ள நபர் எந்தப் பொருளை அதிக அக்கறைக்குரியதாகக் காண்கிறார் என்பதைக் கேட்பதிலிருந்து நல்ல பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். வீட்டுக்காரர் ஒரு பொருளைத் தெரிவுசெய்திருக்கையில், புத்தகத்திலுள்ள அந்த அதிகாரத்தை அடுத்தச் சந்திப்பிற்கு முன்பாக அவர் வாசித்திருக்கும்படிச் சொல்லுங்கள்.
3 எல்லாம் சாத்தியமாய் இருக்கும்போது, நாம் மீண்டும் சந்திப்பதற்கு ஒரு திட்டவட்டமான சந்திப்புத் திட்டத்தை ஏற்பாடு செய்யவேண்டும். திரும்பிச்செல்வதற்கு முன்பாக, வீட்டுக்காரர் தெரிவுசெய்த அதிகாரத்திலுள்ள சில பத்திகளைக் கலந்தாலோசிப்பதற்கு ஆயத்தஞ்செய்ய விரும்புவோம். அவர் தெரிவுசெய்யவில்லையென்றால், நாம் அதிகாரம் 1-ஐ கலந்தாலோசித்துத் தொடங்கலாம். பத்திகள் சிலவற்றைச் சிந்தித்தப் பிறகு, அடுத்த சில பத்திகளை உள்ளடக்கும் ஒரு கேள்வியை நாம் எழுப்பவேண்டும். அது மற்றொரு மறு சந்திப்பிற்கு ஒரு படிக்கல்லாகச் சேவிக்கும், அப்பொழுது நாம் என்றும் வாழலாம் புத்தகத்தின் படிப்பைத் தொடரலாம்.
4 வீட்டுக்காரர் கேள்விகளை உடையவராக இருப்பாராகில், நிச்சயமாகவே, அவற்றை முதலாவது நம்முடைய கவனத்தில் எடுத்துக்கொள்வது மிக நல்லது. அவருடைய கேள்விகள் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தில் பதிலளிக்கப்பட்டிருக்கின்றன. நாம் அந்தப் புத்தகத்தின் பொருளடக்கத்தை நன்கு அறிந்திருப்பதன் மூலம், பொருத்தமான பத்திகளுக்குத் திருப்பி, எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க அந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்.
5 துண்டுப்பிரதியை நாம் யாரிடம் விட்டுவந்தோமோ அவர்களைத் திரும்பச் சந்தித்தல்: நாம் சந்தித்த முதல் சமயத்தில் வீட்டுக்காரர் ஒருவேளை வேலையாக இருந்திருக்கலாம், ஆகவே நாம் அவரிடம் சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற பிரதியை விட்டுவந்திருக்கலாம். மீண்டும் சந்திக்கையில், நாம் அந்தத் துண்டுப்பிரதியிலுள்ள ஆரம்பப் பத்திகளைக் கலந்தாலோசிக்கலாம்.
பக்கம் 3-ல் சங்கீதம் 37:29 மேற்கோளிடப்பட்டுள்ள முதல் பத்தியின் கடைசிக்கு நாம் வரும்போது, நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “அந்த வார்த்தைகள், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற இந்தப் பிரசுரத்தில் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது. இங்கு அதிகாரம் 1, பத்தி 3-ல் ‘நாம் ஏன் நம்பலாம்’ என்ற தலைப்பின்கீழுள்ள கருத்தைக் கவனியுங்கள்.” பிறகு நாம் பத்தி 3-ஐ வாசித்து, அதில் அச்சடிக்கப்பட்டுள்ள கேள்வியைக் கேட்கலாம்; மேலும் அதே முறையிலேயே பத்திகள் 4-ஐயும் 5-ஐயும் தொடரலாம். பிறகு நாம் இவ்வாறு சொல்லலாம்: “ஏன் இப்பொழுது நிலைமைகள் அவ்விதமாக கடவுளுடைய நோக்கங்களுக்கு இசைவில்லாமல் இருக்கின்றன? அடுத்த சில பத்திகள் அதை விளக்குகின்றன, நான் அடுத்த வாரத்தில் இதே சமயத்தில் திரும்பவந்து உங்களுக்கு அந்தக் கேள்விக்குப் பதிலைச்சொல்ல விரும்புகிறேன்.” பிறகு நாம் இந்தச் சமயத்தில் அவர்களுக்கு அந்தப் புத்தகத்தை அளிக்கலாம்.
6 “என்றும் வாழலாம்” புத்தகத்தை அளிக்க, நாம் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நீங்கள் இந்தப் பிரசுரத்தை உங்களுடைய சொந்தப் பிரதியாக வைத்துக்கொள்வதை மகிழ்ந்து அனுபவிப்பீர்கள் என்பதைக்குறித்து நான் நிச்சயமாயிருக்கிறேன். நம்முடைய அடுத்தபடியான கலந்தாலோசிப்பிற்கு முன்பாக நீங்கள் இதை வாசியுங்கள், அப்பொழுது அடுத்துவருகிற நம்முடைய கலந்தாலோசிப்பிலிருந்து அதிகத்தைப் புரிந்துகொள்ளலாம். நாங்கள் இதை ஆட்களிடம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு விட்டுச்செல்கிறோம்.” (பெரிய அளவு புத்தகம் 40.00 ரூபாய்.)
7 மக்கள் எவ்வாறு என்றும் வாழலாம் என்பதைக் கற்றுக்கொள்ள உதவிசெய்ய திரும்பிச்செல்வது மிக முக்கியமான வேலையாய் இருக்கிறது. இயேசு, தம்மைப் பின்பற்றியவர்கள் என்ன கற்பிக்கப்பட்டிருந்தனரோ அதை மற்றவர்களுக்குப் போதிக்கும்படி அறிவுறுத்தினார். அதிகமான வேலையாட்களை அனுப்பும்படி நாம் யெகோவாவிடம் ஜெபிக்கிறோம். ஆகவே, அக்கறையுள்ளவர்களைக் கண்டுபிடித்து, அறுவடையில் உடன் வேலையாட்களாக இருக்கும்படிக்கு அவர்களுக்குக் கற்பிப்பதற்கு நம்முடைய பங்கைச் செய்வோமாக.—மத். 9:37; 28:19, 20.