தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமர்சனம்
ஜூன் 21 துவங்கி அக்டோபர் 18, 1993 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமர்சனம், . கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனித் தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்து விமர்சனத்தின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக, கேள்விகளின் முடிவில் விடைகள் எந்தப் பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்படுகிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லாச் சமயங்களிலும் பக்கங்களும் பாராக்களும் கொடுக்கப்படுவதில்லை.]
பின்வரும் கூற்றுகளுக்கு சரி அல்லது தவறு என்ற விடை கொடுங்கள்:
1. பெத்தேலில் யெரொபெயாம் நிறுத்தின பலிபீடத்தை யோசியா தகர்த்துப்போடுவாரென்று 300-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால் கூறின இந்தத் தீர்க்கதரிசனம் கவனிக்கத்தக்க நிறைவேற்றமடைந்தது. [si பக். 68 பா. 25 (1983 பதிப்பு, பக். 68 பா. 25)]
2. இரண்டு இராஜாக்களில், பொ.ச.மு. 1037 ஆகிய சாலொமோனின் ஆட்சிகாலமுதல் பொ.ச.மு c. 580 வரையான காலப்பகுதியில் நடந்தவை அடங்கியுள்ளது. [si பக். 69 பா. 2 (பக். 69 பா. 2)]
3. வேதவசனம் ஒன்றை வாசித்தப்பின், அதன் பொருத்தத்தைக் காட்டுவதற்கு பொதுவாய் அந்த வசனத்தைப்பற்றிக் கலந்துபேசுவது மாத்திரமே போதுமானது. [sg பக். 129 பா. 20]
4. திரும்பத்திரும்பச் சொல்லுதல் இன்றியமையாத ஒரு கற்பிக்கும் கலையாக இருக்கையில், தேவையற்றுத் திரும்பத்திரும்பச் சொல்வது ஒரு பேச்சை மீறிய சொற்கள் நிறைந்ததாகவும் சுவையற்றதாகவும் செய்யலாம். [sg பக். 131 பா. 11]
5. குறிப்புத்தாளிலிருந்து பேசுவதில் நீங்கள் திறம்பட்டவர்களாகையில், பொதுபேச்சாளராவதை நோக்கி நீங்கள் பெரும் முன்னேற்றப்படி எடுத்திருப்பீர்கள். [sg பக். 140 பா. 10]
6. பாராக்களை வாய்விட்டு உரக்க வாசிப்பதை குறிப்புத்தாளில்லாமல் பேசும் பேச்சைப்போல் தொனிக்கச் செய்வது சாத்தியமில்லை. [sg பக். 146 பா. 21]
7. அழுத்தம் வைப்பது அந்த எண்ணத்தை உடையவையாயுள்ள சொற்களைத் தெரிந்துகொண்டு, பின்பு அவற்றைச் சுற்றியுள்ளச் சொற்கள் சம்பந்தமாக அவற்றை முனைப்பாகத் தோன்றிநிற்கச் செய்வதை உட்படுத்துகிறது. [sg பக். 159 பா. 3]
8. கண்ணுக்கு மை போன்றவற்றைப் போடுவது பைபிள் காலங்களில் அறியப்படாதவையாக இருந்தன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; g77 9/22 பக். 20-ஐப் பாருங்கள்.]
9. இஸ்ரவேலின் வட ராஜ்யத்தை அசீரியர் அழித்ததைப்பற்றிய, 2 இராஜாக்கள் 17:6-18-லுள்ள பைபிள் விவரத்தைப் புதைப்பொருள் ஆராய்ச்சியின் அத்தாட்சி உறுதியாய் ஆதரிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; gm பக். 47-8-ஐப் பாருங்கள்.]
10. படைப்பின் தொடக்கத்திலிருந்தே யெகோவாவின் அரசாட்சி இருந்துவருகிறபோதிலும், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அவர் ‘அரசராவதாகப்’ பேசப்படுவதை அனுமதிக்கும் அவருடைய அரசாட்சியின் தனிப்பட்ட வெளிப்படுத்துதல்களை அவர் சில சமயங்களில் செய்திருக்கிறார் என்று 1 நாளாகமம் 16:31-ல் உள்ள தாவீதின் வார்த்தைகள் சித்தரித்துக் காட்டுகின்றன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL 5/1 பக். 11 பாருங்கள்.]
பின்வரும் கேள்விகளுக்கு விடை கொடுங்கள்:
11. வீட்டுக்காரர் ஒரு வசனத்தை வாசிக்கையில், அதன் முக்கியக் குறிப்புகளை நீங்கள் எவ்வாறு அழுத்திக் கூறலாம்? [sg பக். 128 பா. 13]
12. சைகைகள் செய்வதில் செயற்கைப் பழக்கங்களால் பேச்சாளர் ஒருவருக்கும் பிரச்னை இருந்தால், அவர் என்ன செய்ய வேண்டும்? [sg பக். 133 பா. 20]
13. வாசிப்பில் தடுமாற்றத்தைத் திருத்துவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?. [sg பக். 143 பா. 7]
14. நாளாகமம் ஏன் எழுதப்பட்டது? [si பக். 75 பா. 2 (பக். 75 பா. 2)]
15. பகுத்தறிவுக்குப் பொருத்தமான விவாதத்தை, அல்லது சிந்திப்புத் தொடர்பைப் படிப்படியாகச் செய்வதற்கு அடிப்படையான வழி என்ன? [sg பக். 151 பா. 11]
16. இரண்டு இராஜாக்கள் 11:12-ல் உள்ள “காட்சியின் ஆகமம்” என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 2/1 பக். 31-ஐப் பாருங்கள்.]
17. இரண்டு இராஜாக்கள் 19:32, 33-க்குப் பொருத்தமாக, அசீரியாவின் அரசன் எருசலேமுக்குள் வராதபடி எவ்வாறு நிறுத்தப்பட்டான்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL89 8/1 பக். 30-ஐப் பாருங்கள்.]
18. ஒன்று நாளாகமம் 19:2-4-ல் உள்ள, ஆனூனுடன் தாவீதுக்குண்டான அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL74 பக். 82-ஐப் பாருங்கள்.]
19. முறைப்படி ஆசாரியர்கள் 24 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, வெளிப்படுத்துதல் 4:4-ல் குறிப்பிடப்பட்டுள்ள “மூப்பர்கள்” யாவரென்பதைப் புரிந்துகொள்ள நமக்கு எவ்வாறு உதவி செய்கிறது? (1 நா. 24:4) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL73 பக். 62-ஐப் பாருங்கள்.]
20. ஒன்று நாளாகமம் 29:5, இன்று யெகோவாவின் ஜனங்களுக்குள் எவ்வாறு பொருந்துவதாக நாம் விளங்கிக்கொள்கிறோம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL90 7/1 பக். 31-ஐப் பாருங்கள்.]
பின்வரும் கூற்றுகளைப் பூர்த்தியாக்கத் தேவையான சொல்லையோ சொற்றொடரையோ அளியுங்கள்:
21. ஒவ்வொரு பேச்சுக்கும் வழிநடத்துதலைக் கொடுப்பதற்கும் அதன் பாகங்களை உகந்த முறையில் ஒன்றாக இணைப்பதற்கும்---------தேவை. [sg பக். 133 பா. 1]
22. திறமைவாய்ந்த ஒரு பேச்சாளர் தன் குறிப்புத்தாள்களை நெடுநேரம் தவறான நேரத்தில் பார்த்துக்கொண்டிருப்பதன்மூலம் கேட்போர் கூட்டத்துடன்-------------இழப்பதில்லை. [sg பக். 138 பா. 1]
23. நியமிக்கப்பட்ட தம்முடைய ஊழியர்கள் அவமதிக்கப்படுவதைத் தாம் விட்டுக்கொடுப்பதில்லை என்பதைக் காட்டுவதற்கு, யெகோவா, தம்முடைய தீர்க்கதரிசியாகிய---------கேலிசெய்த போக்கிரிகளின்மீது விரைவான தண்டனையைக் கொண்டுவந்தார். [si பக். 74 பா. 34 (பக். 74 பா. 34)]
24. பேச்சாளராக,--------என்ற கேள்விக்குப் பதில் சொல்லக்கூடியவராயிருக்கும் கடமை உங்களுக்கு எப்போதும் உண்டு. [sg பக். 155 பா. 7]
25. இயேசு மேசியா என்பதைத் தெளிவாக நிலைநாட்டுவதில், மத்தேயுவும் லூக்காவும்-------வம்சாவழிபட்டியல்களைப் பயன்படுத்தினார்கள். [si பக். 78 பா. 23 (பக். 78 பா. 23)]
26. பெரும்பான்மையான பேச்சுகளில் ஒரு குறிப்பிலிருந்து மற்றொன்றுக்கு-------தேவைப்படுகிறது. [sg பக். 149 பா. 2]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் திருத்தமான விடையைத் தேர்ந்தெடுங்கள்:
27. உங்கள் பேச்சின் பொருளைத் தீர்மானித்தப்பின்பு, நீங்கள் பயன்படுத்தும்படி திட்டமிட்டுள்ள (வேதவசனங்களை; விளக்க உதாரணங்களை; முக்கியக் குறிப்புகளை) தேர்ந்தெடுப்பது அடுத்தப் படியாகும். [sg பக். 135 பா. 9]
28. ஒரு பேச்சில் பொதுநிலையைக் காத்துவருவதற்கு, நீங்கள் (வெகுத் தெளிவாகப் பேசவேண்டும்; கேட்போர் கூட்டத்தின் நோக்குநிலையை மனதில் வைக்க வேண்டும்; ஆர்வத்துடன் இருக்க வேண்டும். [sg பக். 156 பா. 17]
29. “யோதாமின் இருபதாம் வருடத்தில்” என்பது (அவருடைய வாழ்க்கையின்; அவருடைய மெய்யான ஆட்சியின்; அவர் அரசரானது முதற்கொண்டு கடந்திருந்த அந்தக் காலப்பகுதியின்) 20-வது ஆண்டைக் குறிக்கிறது. (2 இரா. 15:30) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w80 9/15 பக். 8-ஐப் பாருங்கள்.]
30. “தாவீதுக்கு உதவிசெய்யும்படி அவனிடத்தில் வந்து சேர்ந்த” மனிதர் (தன்னல நோக்கத்தால் தூண்டப்பட்டனர்; தாவீதின் அரசதிகாரத்தை ஆதரிக்க மனப்பூர்வமாய்த் தெரிந்துகொண்டனர்; உழைப்பற்ற வழியைத் தெரிந்துகொண்டனர்.) (1 நா. 12:22) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL84 11/1 பக். 25-ஐப் பாருங்கள்.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கொடுத்துள்ள கூற்றுகளோடு பொருந்த இணையுங்கள்:
1 இரா. 22:19-22; 2 இரா. 1:2, 7, 8; 5:1-5; 25:27-30; 1 நா. 9:26, 27
31. நாம் உடுத்தும் முறை நம்மை ஒரு குறிப்பிட்ட தொகுதி அல்லது வகுப்பாருடன் இணைக்கலாம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w72 பக். 666-ஐப் பாருங்கள்.]
32. லேவிய வாசல்காப்பாளர்கள் தனிப்பட்ட நம்பிக்கைக்குரிய பொறுப்பேற்பை உடையோராக இருந்தனர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 12/1 பக். 21-ஐப் பாருங்கள்.]
33. சூழிநிலைமைகளைக் கையாளுவது எவ்வாறெனத் தங்களுக்குத் தெரியுமென்று மூப்பர்கள் உணர்ந்தாலும், யெகோவாவின் முன்மாதிரியிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் மேலும் மற்றவர்கள் சொல்வதற்கும் அவர்கள் செவிகொடுத்துக் கேட்டு அதை இருதயத்தில் ஏற்க வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w74 பக். 436-ஐப் பாருங்கள்.]
34. பாபிலோனில் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஒரு யூதேயா அரசன் முடிவில் சிறைச்சாலையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டு உணவு உதவித்தொகை அளிக்கப்பட்டானென்ற உண்மையைப் புதைப்பொருள் ஆராய்ச்சி அதிகரிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; gm பக். 46-ஐப் பாருங்கள்.]
35. பிள்ளைகள் பெரியவர்களைச் செயல்படும்படித் தூண்டுவிக்க முடியும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w74 பக். 402-ஐப் பாருங்கள்.]