உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/93 பக். 2
  • ஜூலை ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • துணை தலைப்புகள்
  • ஜூலை 5-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 12-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 19-ல் துவங்கும் வாரம்
  • ஜூலை 26-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 7/93 பக். 2

ஜூலை ஊழியக் கூட்டங்கள்

ஜூலை 5-ல் துவங்கும் வாரம்

பாட்டு 133 (68)

10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகள் பழைய பத்திரிகைகளின் இதழ்களை எவ்வாறு நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதன்பேரில் குறிப்புச் சொல்லும்படித் தயாராகக் கொண்டிருங்கள்.

15 நிமி:“அக்கறையுள்ளவர்களைக் கண்டுபிடிக்கச் சிற்றேடுகளை முக்கியப்படுத்திக்காட்டுதல்.” கேள்வி-பதில் சிந்திப்பு. பத்தி 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள சிற்றேடுகள்: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? மற்றும் பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். கிடைக்கக்கூடிய சிற்றேடுகளின் கையிருப்பிலுள்ளதைப்பற்றி சபைக்குத் தெரிவியுங்கள், மேலும் நம்முடைய பிரச்னைகள் சிற்றேட்டைத் தவிர வேறு எந்தச் சிற்றேடுகள் உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமானதாய் இருக்கக்கூடும் என்பதன்பேரில் குறிப்புகளைக் கேளுங்கள். ஜூலையில் சிற்றேடுகளை அளிப்பதில் முழுப் பங்கைக் கொண்டிருப்பதற்கு சகோதரர்களை ஆர்வத்தோடு உற்சாகப்படுத்துங்கள். மேலும், அநேக சமயங்களில் ஒரு சிற்றேட்டை ஏற்றுக்கொள்கிற மக்கள் பத்திரிகைகளையும் கொண்டிருக்க விரும்புவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுங்கள்.

20 நிமி:“ஜூலையில் பலன்தரத்தக்கவிதமாகச் சிற்றேடுகளைப் பயன்படுத்துதல்.” குறிப்புகளை சபையோடு கலந்துபேசி, பத்திகள் 3, 5, மற்றும் 7-லுள்ள பிரசங்கங்களை நடித்துக்காட்டுங்கள். நல்ல தயாரிப்பை உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 30 (33), முடிவு ஜெபம்.

ஜூலை 12-ல் துவங்கும் வாரம்

பாட்டு 25 (28)

10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடை ஒப்புகைகள் ஏதாவது இருந்தால் வாசியுங்கள். வெளி ஊழிய ஏற்பாடுகளைப்பற்றி சபைக்கு நினைப்பூட்டுங்கள், மேலும் பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமான பேச்சுக் குறிப்புகளைக் கலந்துபேசுங்கள்.

20 நிமி:“பைபிளில் அக்கறையைத் தூண்ட திரும்பிச்செல்லுதல்.” சுருக்கமான அறிமுகத்திற்குப் பிறகு, அக்கறை காட்டிய ஆனால் பிரசுரத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவரை மறுசந்திப்புச் செய்வதாக நடித்துக்காட்டுங்கள். மேலும், பேசுவதற்கு அதிக வேலையாயிருந்த ஆனால் நிஜமாகவே உலகத்தை ஆளுவது யார்? என்ற துண்டுப்பிரதியை ஏற்றுக்கொண்ட ஆளை எவ்வாறு மீண்டும் சந்திப்பது என்பதை நடித்துக்காட்டுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும், பிரஸ்தாபி எவ்வாறு சம்பாஷணையை ஆரம்பித்து அக்கறையைத் தூண்டுகிறார் என்பதைக் காட்டுங்கள்.

15 நிமி:சபைத் தேவைகள், அல்லது இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகள் சத்தியத்தை எவ்வாறு கற்றுக்கொண்டனர் என்பதன்பேரில் பேட்டி காணுங்கள். இப்படிப்பட்ட அனுபவங்கள் முன்கூட்டியே தெரிவுசெய்யப்படவேண்டும், மற்றும் ஊழியத்தின் பலன்தரத்தக்கத்தன்மையைக் காட்டவேண்டும்.

பாட்டு 191 (98), முடிவு ஜெபம்.

ஜூலை 19-ல் துவங்கும் வாரம்

பாட்டு 136 (65)

10 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள்.

15 நிமி:“நீங்கள் அதைச் செய்யமுடியுமா?” சபையாரோடு கலந்துபேசுங்கள். ஓரிரண்டு ஒழுங்கான பயனியர்களை அல்லது அவ்வப்பொழுது துணைப் பயனியர்களாகச் சேவிக்கிற ஓரிரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அதிகத்தைச் செய்வதற்கு அவர்கள் எவ்வாறு தீர்மானம் செய்தார்கள் என்பதையும் எவ்வாறு தங்களுடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறார்கள் என்பதையும் விவரிக்கச்செய்யுங்கள்.

20 நிமி:தனிப்பட்ட சுத்தத்தின்பேரில் மூப்பரின் பேச்சு, ஆங்கில காவற்கோபுரம் ஜூன் 1, 1989, பக்கங்கள் 15-20-ல் காணப்படுகிற “மனதிலும் உடலிலும் சுத்தமாயிருங்கள்” என்ற படிப்புக் கட்டுரையின் அடிப்படையிலானது. இந்திய மொழிகளில் அதே கட்டுரை ஏப்ரல் 1, 1991 காவற்கோபுர இதழில் காணப்படுகிறது. பேச்சு அன்பான முறையிலும் நல்ல நிதானிப்போடும் அளிக்கப்படவேண்டும்.

பாட்டு 165 (81), முடிவு ஜெபம்.

ஜூலை 26-ல் துவங்கும் வாரம்

பாட்டு 170 (95)

10 நிமி:சபை அறிவிப்புகள். சபையின் ஜூன் வெளி ஊழிய அறிக்கையை மூப்பர் சிந்தித்து, போற்றுதலையும் உற்சாகத்தையும் அளிக்கிறார். மேலும், இந்த வார இறுதி வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்காகப் பத்திரிகைகளிலிருந்து இரண்டு அல்லது மூன்று பொருத்தமான பேச்சுக் குறிப்புகளைக் கலந்துபேசுகிறார்.

15 நிமி:“சிலுவை,” நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 89-93. “இதோ!” சிற்றேட்டை ஏற்றுக்கொண்ட வீட்டுக்காரரை மறு சந்திப்புச் செய்வதாகக் கையாளப்படவேண்டும். வீட்டுக்காரர் சிற்றேட்டிலுள்ள பக்கம் 17-ஐ சுட்டிக்காட்டி சிலுவைக்குப் பதிலாக இயேசு கழுமரத்தில் இருப்பதுபோல் ஏன் அது வரையப்பட்டிருக்கிறது என்று கேட்கிறார். வீட்டுக்காரர் பைபிளின் நோக்குநிலையைப் பெறும்படி உதவிசெய்ய சகோதரர் நியாயங்கள் புத்தகத்தை பயன்படுத்துகிறார்.

20 நிமி:“காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வை நன்றாய் பயன்படுத்துதல்.” கேள்வி-பதில் சிந்திப்பு. அனுதினமும் பத்திரிகைகள், சமீப இதழ்கள், பழைய இதழ்கள் ஆகியவற்றை அளிப்பதற்கு நாம் கொண்டிருக்கக்கூடிய அநேக வாய்ப்புகளை அனைவரும் மதித்துணருவதற்கு உதவிசெய்யுங்கள்.

பாட்டு 192 (32), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்