மற்றவர்கள் கடவுளுடைய வார்த்தையை உபயோகிப்பதில் திறம்பட்டவர்களாக ஆக உதவுங்கள்
1 நம் தனிப்பட்ட ஊழியத்தை திறம்பட்ட விதத்தில் செய்வதற்கு நமக்குப் பயிற்சி கொடுக்க யெகோவா எண்ணிறந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். அவர் ஏற்பாடு செய்திருப்பவற்றை உபயோகிப்பதன் மூலம், ‘நம் நடைகள் தயாராக்கப்பட்டிருக்கின்றன.’ (சங். 37:23, NW) உதாரணமாக, ஏறக்குறைய 50 வருடங்களாக தேவராஜ்ய ஊழியப்பள்ளி, பேசும் மற்றும் கற்பிக்கும் கலைத்திறனில் படிப்படியாக பயிற்சி கொடுத்துக் கொண்டுவருகிறது. நடைமுறையான பேச்சுகள், நடிப்புகள் மேலும் கலந்தாலோசிப்பு பகுதிகள் கொண்ட வாராந்தர ஊழியக்கூட்டம் இத்துடன் இணைந்து நிறைவாக்குகிறது.
2 வட்டார கண்காணிகளின் ஒழுங்கான சந்திப்புகளிலிருந்து நாம் பயனடைகிறோம். ஊழிய கண்காணி ஒவ்வொரு புத்தகப் படிப்பு தொகுதியையும் சந்தித்து, வெளி ஊழியத்தில் நம் திறமைகளை முன்னேற்றுவிக்க உதவியாக அன்பான உற்சாகம் கொடுக்கிறார். இவை எல்லாவற்றோடும்கூட, ஒவ்வொரு முறையும் நாம் வெளி ஊழியத்திற்காக கூடிவரும்போது, பத்து நிமிட நடைமுறையான போதனை அந்நாளிற்கான உற்சாகத்தையும், உபயோகமான ஆலோசனைகளையும் கொடுக்கிறது. (எபி. 10:23–25) யெகோவா தம் அமைப்பின் மூலம் செய்யும் இப்பேர்ப்பட்ட ஏற்பாடுகள், நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி அவர் கட்டளையிடப்பட்டிருப்பவர்கள் பேரில் அவருடைய அன்பான அக்கறையை காண்பிக்கிறது.
இளைஞர்களுக்கும் பைபிள் மாணாக்கர்களுக்கும் உதவுங்கள்
3 இளைய பிரஸ்தாபிகளுக்கும் புதியவர்களுக்கும் வெளிஊழியத்தில் ஒழுங்கான, தனிப்பட்ட உதவி தேவைப்படுகிறது. நாம் அனைவருமே அவ்வப்போது உதவியளிக்க முடியும். என்றபோதிலும், முக்கிய உத்திரவாதம் பெற்றோர்கள் மீதும், அப்பேர்ப்பட்டவர்களோடு பைபிள் படிப்பு நடத்துபவர்கள் மீதும் விழுகிறது. (கலா. 6:6; எபே. 6:4) பைபிளை திறம்பட்ட விதத்தில் உபயோகிப்பது என்பது காலப்போக்கினாலும், ஓரளவு அனுபவத்தாலும் தானாகவே வந்துவிடுவதில்லை. மாறாக, ஒழுங்கான அன்பான தனிப்பட்ட உதவிக்கும் பயிற்சிக்குமான தேவை இருக்கிறது.
4 ஊழியத்தில் அந்த நபர் பங்குகொள்வதற்கு முன்பாகவே தனிப்பட்ட உதவி ஆரம்பிக்க வேண்டும். சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை விமர்சனம் செய்யுங்கள். ஊழியத்தில் பங்குகொள்ள தகுதியாயிருப்பவர்களுக்கு ஓர் எளிய பிரசங்கம் கொடுக்க உதவி செய்யுங்கள். அதிகமான அனுபவமும் நம்பிக்கையும் பெறும் வரை கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களில் ஒரு வசனம் மட்டும் அவர்கள் உபயோகிக்கலாம். ஊழியத்தில் ஒன்றாக வேலைசெய்கையில், வீடுகளுக்கு இடையில் பாராட்டுதல் தெரிவிக்கவும், எவ்வாறு முன்னேறுவது என்பதன் பேரில் தயவான ஆலோசனைகள் கொடுக்கவும் நேரமெடுத்துக் கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் ஜெபசிந்தையான மனநிலையை காத்துக்கொள்வதற்கான தேவையை அழுத்திக் காட்டுங்கள்.—எபே. 6:18, 19.
5 அநேக ஒழுங்கான பயனியர்களும் மற்ற அனுபவமிக்க பிரஸ்தாபிகளும் பிரதானமாக வார நாட்களில் ஊழியத்தில் பங்குகொள்கின்றனர் என்றாலும், இந்தத் திறம்பட்ட பிரஸ்தாபிகள் அவ்வப்போது வார இறுதிநாட்களில் வெளி ஊழியத்திற்கு ஆதரவு தரும் வகையில் தங்கள் அட்டவணைகளை மாற்றியமைத்தால் என்னே ஒரு சிறந்த காரியமாயிருக்கும். அவர்கள் பங்கில் இப்பேர்ப்பட்ட தனிப்பட்ட தியாகம் ஊழியத்தில் அவர்களோடு வேலை செய்வதன் மூலம் முன்னேற்றமடைய விரும்பும் மற்றவர்களால் அதிகமாகப் போற்றப்படும்.—பிர. 4:9, 10.
6 ஒரு சமயத்தில் நாம் அனைவருமே வெளி ஊழியத்தில் புதிதானவர்களாகவும், அனுபவமில்லாதவர்களாகவும் இருந்தோம். நம்மில் அநேகர் அதிக அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகள் அல்லது பயனியர்களிடமிருந்து உற்சாகமும் பயிற்சியும் பெற்றுக்கொண்டோம். ஊழியத்தில் நமது தற்போதைய திறமையும், அதிகரிக்கப்பட்ட சந்தோஷமும் அந்த உதவியின் நேரடியான விளைவாகும். (நீதி. 27:17; அப். 20:35) ஊழியத்தில் சுறுசுறுப்பான பயிற்சியின் மூலம் யெகோவா நமக்காக செய்திருப்பவற்றிற்கான போற்றுதல், யெகோவாவின் வார்த்தையை உபயோகிப்பதில் அதிக திறம்பட்டவர்களாக ஆக நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய நம்மை நாமே அளிக்கத் தூண்டுவதாக.