சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
டிசம்பர் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 180 (62)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். இந்த வாரத்தில் முக்கியமாய் எடுத்துக் காண்பிக்க பத்திரிகைகளிலிருந்து திட்டவட்டமான கட்டுரைகளை சிறப்பித்துக் காட்டுங்கள். கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் புரோஷுரை அடுத்த வாரம் ஊழியக் கூட்டத்திற்கு எடுத்துவரும்படி சகோதரர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்.
20 நிமி: “கடவுளுடைய வார்த்தையை சிபாரிசு செய்தல்.” கேள்வி–பதில் சிந்திப்பு. பாராக்கள் 3 மற்றும் 4-ஐ கலந்தாலோசிக்கையில், புதிய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை தகுதி வாய்ந்த பிரஸ்தாபி நடித்துக்காட்டும்படிச் செய்யுங்கள்.
15 நிமி: புதிய உலக மொழிபெயர்ப்பு ஒத்துவாக்கிய பைபிளின் மதிப்பு. கலந்தாலோசிப்பு. இந்தப் பிரசுரத்தை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கும் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளோடு மூப்பர் ஒத்துவாக்கிய பைபிளின் மதிப்பை சிந்திக்கிறார். பக்கம் 5-ல் உள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் குழுவின் கூற்றை சிந்தியுங்கள். அடிக்குறிப்பு, மாற்றுக் குறிப்புகள், இரண்டு சொல் தொகுதி விளக்கப்பட்டியல்கள் மற்றும் பிற்சேர்க்கை ஆகியவற்றின் மதிப்பை சிறப்பித்துக் காட்டுங்கள். தனிப்பட்ட படிப்பிலும் மற்றும் சபை கூட்டங்களுக்கு தயார் செய்வதிலும் இந்தப் பிரசுரத்தை உபயோகிப்பதன் மதிப்பை அழுத்திக் காட்டுங்கள்.
பாட்டு 46 (20), முடிவு ஜெபம்.
டிசம்பர் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 6 (4)
8 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். சங்கத்தின் உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள் செலுத்தியிருப்பதை சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் கடிதங்களை வாசியுங்கள். உள்ளூர் சபையின் பொருளாதார ஆதரவிற்காகவும் போற்றுதல் தெரிவியுங்கள். டிசம்பர் 25-ம் தேதிக்கான விசேஷ ஊழிய ஏற்பாடுகளை விளக்குங்கள்.
17 நிமி: “பைபிள் மாணாக்கர்களை யெகோவாவின் அமைப்புக்கு வழிநடத்துதல்.” கேள்வி–பதில் சிந்திப்பு. பாரா 3-ஐ சிந்திக்கையில், கடவுளுடைய சித்தத்தைச் செய்தல் புரோஷுரிலிருந்து பக்கங்கள் 14 மற்றும் 15-ல் உள்ள திட்டவட்டமான தகவலை உபயோகித்து, மாணாக்கர் சபை கூட்டங்களுக்கு ஆஜராக எவ்வாறு உற்சாகப்படுத்தப்படலாம் என்பதை தகுதிவாய்ந்த பிரஸ்தாபி நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள்.
20 நிமி: “விசேஷ மாநாடுகள் யெகோவாவை கனப்படுத்துகின்றன.” கேள்வி–பதில் கலந்தாலோசிப்பு. விசேஷ மாநாடுகளுக்காக சங்கத்தின் ஏற்பாட்டோடு எல்லாரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழுத்திக் காட்டுங்கள்.
பாட்டு 36 (14), முடிவு ஜெபம்.
டிசம்பர் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101 (23)
5 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். வார இறுதி நாட்கள் வெளி ஊழியத்திற்கு ஆதரவு தருமாறு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “மற்றவர்கள் கடவுளுடைய வார்த்தையை உபயோகிப்பதில் திறம்பட்டவர்களாக ஆக உதவுங்கள்.” கேள்விகள் பதில்கள் மூலம் சிந்திப்பு. ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் திறம்பட்டவர்களாவதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்வதற்கான தேவையை சிறப்பித்துக் காட்டுங்கள். பிரஸ்தாபிகள் தகுதி வாய்ந்த பைபிள் மாணாக்கர்களுக்கு எவ்வாறு உதவிசெய்யலாம் அல்லது பெற்றோர் ஒருவர் எவ்வாறு தன் சிறு பிள்ளையை ஊழியத்திற்காக தயார் செய்கிறார் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “விசுவாசத்திற்கு சவாலாயிருக்கும் ஒரு மருத்துவ நிலையை எதிர்ப்பட நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?” தகுதிவாய்ந்த மூப்பரால் கேள்வி–பதில் சிந்திப்பு, சேர்க்கை கட்டுரை ஆரம்பத்திலிருந்து உபதலைப்பு “தேவையான நேரத்தில் மதிப்பு வாய்ந்த உதவி” வரையில் உள்ள பாராக்களை கலந்தாலோசியுங்கள். என்ன செய்யலாம் என்று யோசிக்க ஏதோவொன்று நிகழும் வரை காத்திருக்க வேண்டாம் என்பதை அழுத்திக் காட்டுங்கள். ஒரு குடும்பமாக இப்பொழுதே திட்டமிடுங்கள்—தயாராயிருங்கள்!
பாட்டு 183 (73), முடிவு ஜெபம்.
டிசம்பர் 31-ல் துவங்கும் வாரம்
பாட்டு 161 (70)
5 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரியில் இளைஞர் கேட்கின்றனர் என்ற புத்தகம் அளிக்கப்படும் என்று சபைக்கு ஞாபகப்படுத்துங்கள். இந்தப் பிரசுரத்தை விநியோகிப்பதில் எல்லாரும் முழுமையாகப் பங்குகொள்ள விரும்பவும் நன்கு தயாரிக்கவும் வேண்டும்.
10 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்–ஜெப சிந்தையுடன்.” அனலான, கவனத்தைக் கவரும் பேச்சு. நம் ஊழியத்தில் கடவுளுடைய வழிநடத்துதலும் ஆசீர்வாதமும் இருக்கும்படி ஜெபிப்பதற்கான தேவையை சிறப்பித்துக் காட்டுங்கள்.
18 நிமி: “விசுவாசத்திற்கு சவாலாயிருக்கும் ஒரு மருத்துவ நிலையை எதிர்ப்பட நீங்கள் தயாராயிருக்கிறீர்களா?” அனுபவமிக்க பேச்சாளர், “தேவையான நேரத்தில் மதிப்பு வாய்ந்த உதவி” என்ற உபதலைப்பிலிருந்து சேர்க்கை கட்டுரையின் முடிவு வரையாக உள்ள விஷயங்களின் பேரில் தெளிவான பேச்சு கொடுக்கிறார். ஒரு நெருக்கடியான மருத்துவ நிலையோடு போராடுகையில், மூப்பர்களோடு வேலை செய்வதன் நன்மையை அழுத்திக் காண்பியுங்கள்.
12 நிமி: இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை ஜனவரி மாதத்தில் அளியுங்கள். புத்தகத்தை சபையாரோடு மூப்பர் கலந்தாலோசிக்கிறார். புத்தகத்தின் பத்து பகுதிகளை சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுங்கள். தேர்ந்தெடுத்த அதிகாரங்களைச் சிந்தியுங்கள். பக்கம் 27-ல் உள்ளதைப் போன்ற திறன்வாய்ந்தப் படங்களை கவனியுங்கள். புத்தகத்திலுள்ள காலத்திற்கேற்ற ஆலோசனையை இளைஞர்கள், பெற்றோர்கள், இன்னும் மற்றவர்கள் சிந்திக்குமாறு உற்சாகப்படுத்துங்கள். புத்தகத்தை வெளி ஊழியத்தில் உபயோகிப்பதற்கு எல்லாரும் தயார் செய்ய வேண்டும். அதை குடும்ப கலந்தாலோசிப்பில் உபயோகிப்பதற்கான வழிகளைக் குறிப்பிடுங்கள்.
பாட்டு 188 (70), முடிவு ஜெபம்.