நெருக்கமான குடும்ப உறவுகளை கட்டுதல்
1 தங்களுடைய நேரத்தில் அநேக தேவைகள் இருப்பதனால், உண்மை வணக்கத்தில் நிலையான குடும்பத்தைக் கட்டுவதில் ஒரு சவாலை பெற்றோர்கள் எதிர்ப்படுகின்றனர். கிறிஸ்தவ குடும்பங்களுக்கு தற்போதைய கடினமான காலங்களில் ஆதரவளிக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு தேவைப்படுகிறது. (பிர. 4:9–12; 2 தீமோ. 3:15) ஆவிக்குரியத்தன்மை வளருகையில் குடும்பம் அதிக ஐக்கியமாகிறது, மேலும் சாத்தானும் அவனுடைய ஒழுங்கும் கொடுக்கும் கடுந்தாக்குதல்களைத் தாங்க பலப்படுத்தப்படுகிறது.
ஆவிக்குரிய குணாதிசயங்களைக் கட்டுதல்
2 குடும்பத்தின் வாராந்தர அட்டவணையில் சபை கூட்டங்களும், குடும்ப பைபிள் படிப்பும் இன்றியமையாதது. (உபா. 6:6, 7; எபி.10:23–25; w86 11/1 பக். 23–5) இருந்தபோதிலும், அதிகம் தேவைப்படுகிறது. பிள்ளைகளுக்கு கிடைக்கும் எல்லா ஆவிக்குரிய பயிற்சியும் இது மட்டுமே என்றால் இன்னும் ஒரு வெறுமை இருக்கிறது.
3 பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனில் பெற்றோர்கள் உண்மையான அக்கறையை எடுக்கும்போது நற்பயன் விளைவிக்கிற ஒரு குடும்ப உறவு வளருகிறது. இஸ்ரவேலில் பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக்கும் பயிற்சிக்கும் உத்தரவாதமுள்ளவர்களாயிருந்தனர், வார்த்தையின் மூலமும் முன்மாதிரியின் மூலமும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். இஸ்ரவேலின் கல்வித் திட்டம் வயது வந்தவர்களின் வாழ்க்கைக்கான நடைமுறையான பயிற்சி, வாசிக்கும் மற்றும் எழுதும் அடிப்படை திறமைகளைக் கற்பித்தல், ஆவிக்குரிய குணாதிசயங்களை வளர்ப்பதற்கு போதனைகள் இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியது. பிள்ளைகளுக்குக் கல்வி அளிப்பதில் யெகோவாவுக்குப் பயம், நியாயப்பிரமாணம், பெற்றோர்களுக்கும் வயதானவர்களுக்கும் மரியாதை, கீழ்ப்படிதலின் முக்கியத்துவம் ஆகியவற்றின் பேரில் அழுத்தம் வைக்கப்பட்டது.
4 ஒவ்வொரு நாளும் உங்கள் குடும்பத்தோடு நல்ல தரமான நேரத்தைச் செலவிட முயலுங்கள். உணவு வேளைகள் போன்ற முறைப்படியல்லாத சூழமைவில் ஆவிக்குரிய விஷயங்கள் கலந்தாலோசிக்கப்படலாம். பெற்றோர் ஒருவர் ஞானமாக குறிப்பிட்டார்: “ஆவிக்குரிய குணாதிசயங்களை வளர்ப்பதிலோ அல்லது ஒரு பிரச்னையை அடுத்து மற்றொரு பிரச்னையிலிருந்து வெளியேற அவர்களுக்கு உதவி செய்வதிலோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவார்கள்.” உலகத்தின் இடறுகுழிகளை அவர்கள் தவிர்ப்பதற்கு பிள்ளைகளில் தேவையான ஆவிக்குரிய குணாதிசயங்களைக் கட்டுவது எவ்வளவு மேலானது!—1 கொரி. 3:10–15.
வெளி ஊழிய வேலையை அனுபவிப்பது
5 மகிழ்ச்சி என்பது நல்லதைப் பெற்றுக்கொண்டதால் அல்லது எதிர்ப்பார்ப்பதால் எழுப்பப்பட்ட ஓர் உணர்ச்சியாகும். வெளி ஊழியத்திற்காக ஒரு நபர் தயாரித்திருக்கும்போது அவர் சரியாகவே நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். ஆக, மகிழ்ச்சியான வெளி ஊழியத்திற்கு தயாரிப்பு திறவுகோலாக இருக்கிறது. வெளி ஊழியத்திற்குச் செல்வதற்கு முன்பு என்ன சொல்வது என்பதை ஒரு குடும்பமாக ஒழுங்காக பயிற்சி செய்வது நம்பிக்கையை வளர்க்கிறது. (தீத்து 3:1பி ஒப்பிடுங்கள்.) ஒவ்வொருவரும் ஓர் இலக்கை மனதில் வைக்கலாம். இளம் பிள்ளைகளோடு அல்லது வெளி ஊழியத்திற்கு இப்பொழுதுதான் வர ஆரம்பித்தவர்களோடு ஓர் எளிய அளிப்பு ஒத்திகை செய்யப்படலாம்.
6 தங்கள் பிள்ளைகளோடு கிறிஸ்தவ ஊழியத்தில் வேலைசெய்வதன் மூலம் யெகோவாவும் இயேசுவும் ஆட்களில் காட்டும் தனிப்பட்ட அக்கறையை வளர்க்க பெற்றோர்கள் அவர்களுக்கு உதவலாம். யெகோவாவுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளவும் ஊழியம் நமக்கு உதவும். (w81 11/1 பக். 14–20) சில குடும்பங்கள் முழு நாட்களுக்கு ஒன்றாக அட்டவணை போடுகின்றனர், வெளி ஊழியத்தைத் தொடர்ந்து பொழுதுபோக்கை திட்டமிடுகின்றனர். இது ஓய்வான சூழ்நிலையில் சம்பாஷிப்பதற்காக நேரத்தை அனுமதிக்கிறது, மேலும் பெற்றோர்களையும் பிள்ளைகளையும் ஒன்றாக இணைக்கிறது.
7 உங்கள் பிள்ளைகளோடு ஒரு நெருங்கிய உறவை வைப்பதற்கு தேவையான பேச்சுத் தொடர்பு திறமைகளை வளர்த்துக்கொள்ள தீர்மானமாயிருங்கள். உங்கள் குடும்பத்தை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்த தேவையான நேரத்தை எடுப்பதற்கு எந்தக் காரியமும் தடைசெய்ய அனுமதியாதீர்கள். உங்கள் கட்டும் முயற்சிகளை வெற்றியோடு யெகோவா முடிசூட்டுவார் என்ற அறிவோடு பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகளுடனும் ஜெபியுங்கள்.—சங். 127:1; நீதி. 24:3.