சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
குறிப்பு: மாநாட்டு காலப் பகுதியில் ஒவ்வொரு வாரத்தின் போதும் நம் ராஜ்ய ஊழியம் ஓர் ஊழியக் கூட்டத்தை திட்டமிடும். மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராவதற்காகவும் அதைத் தொடர்ந்து வரும் வாரத்தின் ஊழியக்கூட்டத்தில் அந்த நிகழ்ச்சிநிரலை 30-நிமிடங்களுக்கு விமர்சனம் செய்வதற்காகவும் இடமளிப்பதற்காக சபைகள் தகுந்த சரிமாற்றங்களை செய்துகொள்ளலாம். அந்தந்த நாளிற்குரிய விமர்சனத்தைச் செய்யும்படி முன்கூட்டியே இரண்டு அல்லது மூன்று தகுதிவாய்ந்த சகோதரர்கள் நியமிக்கப்படலாம். அவர்கள் முக்கியமான குறிப்புகளின்பேரில் கவனத்தை ஈர்க்கலாம். இந்த நான்கு தயார்செய்யப்பட்ட விமர்சனம் சகோதரர்கள் தனிப்பட்ட விதத்தில் பொருத்துவதற்கும் வெளி ஊழியத்தில் பயன்படுத்துவதற்கும், முக்கிய குறிப்புகளை நினைவுகூருவதற்கு உதவி செய்யும். பயன்படுத்தப்படும் அனுபவங்களும் சபையாரிடமிருந்து வரும் குறிப்புகளும் சுருக்கமாகவும் திட்டவட்டமானதாகவும் இருக்க வேண்டும்.
ஜூலை 9—ல் துவங்கும் வாரம்
பாட்டு எண் 151(25)
7 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். வார கடைசி நாளுக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
15 நிமி: “உங்களுடைய ஊழியத்தில் திறம்பட்டவர்களாகுங்கள்.” கட்டுரையில் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு, பாராக்கள் 5, 6-ஐ சிந்திக்கும்போது ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுரம் பிரதியிலும் நியாயங்கள் புத்தகத்திலும் காணப்படும் ஆலோசனைகளைப் பயன்படுத்தி நடித்துக்காட்டுங்கள். யெகோவாவின் அமைப்பினிடமிருந்து வரும் ஆலோசனைகளைப் பொருத்துவதன் மூலம் உள்ளூர் சபை பிராந்தியத்தில் அடைந்த நல்ல பயன்களை பிரஸ்தாபிகள் எடுத்துரைக்கலாம்.
23 நிமி: “1990 ‘சுத்தமான பாஷை’ மாவட்ட மாநாட்டுக்கு வருகைத்தாருங்கள்”—பகுதி ஒன்று. சபையாருடன் கலந்தாலோசிப்பு, பாராக்கள் 1-15 மற்றும் மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள் பகுதியின் சுருக்கமான விமர்சனம்.
பாட்டு 43(103)
5 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும் சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் சபையின் நன்கொடைகளைப் பற்றி அறிவிப்பு செய்யவும்.
10 நிமி: கேள்விப் பெட்டி மூப்பரின் பேச்சு.
15 நிமி: “சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஆவலுடன் பற்றிக்கொள்ளுங்கள்,” கட்டுரையின் கேள்வி-பதில் ஆய்வு.
15 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது எப்படி வேதப்படிப்புகளை ஆரம்பிப்பதில் வெற்றிகரமாக இருந்த இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளை பேட்டி காணலாம். அவர்கள் எதை பயனுள்ளதாகக் கண்டிருக்கிறார்கள்? ஆரம்பத்திலுள்ள ஆர்வத்தை எப்படி அவர்கள் தணியாமல் தொடர்ந்து காத்துக்கொள்கின்றனர்? முதல் சந்திப்பிலே அல்லது மறுசந்திப்பிலே பைபிள் படிப்பை துவக்குவது எப்படி என்பதன் பேரில் சுருக்கமான நடிப்பை அளியுங்கள்.
பாட்டு 143 (76), முடிவு ஜெபம்.
ஜூலை 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 91(61)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவ ராஜ்ய செய்திகளும். வாரத்தின் மீதி நாட்களுக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நேரம் அனுமதிக்குமானால் இந்த மாத பத்திரிகைகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளை எடுத்து செல்லுங்கள். நேரம் அனுமதிக்குமானால் இந்த மாத பத்திரிகைகளிலிருந்து பேச்சு குறிப்புகளை எடுத்து சொல்லுங்கள்.
18 நிமி: “உங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுதல்” கட்டுரையின் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு, ஒரு குடும்பத் தலைவனையும் ஒரு தனிப்பட்ட பிரஸ்தாபியையும் அழைத்து தங்களுடைய ஆவிக்குரிய தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு நேரத்தைக் கண்டடையும் சவாலை எவ்வாறு எதிர்படுகின்றனர் என்பதைப் பெட்டிக் காணுங்கள். தங்களுடைய சொந்த ஏற்பாடுகளைப் பரிசீலனைச் செய்து பார்க்கும்படியும் தேவைப்படும் முன்னேற்றங்களைச் செய்வதற்கு ஊக்கமாக உழைக்கும்படியும் சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
17 நிமி: “ஏற்ற சமயத்தில் சகாயம்” ஊழியக் கண்காணி சபையாருடன் இந்தத் தகவலை கலந்துரையாடுகிறார். சபை புத்தகப் படிப்பு தொகுதிகளை ஊழியக் கண்காணி சந்திப்பதற்குரிய ஏற்பாடுகளின் நன்மைகளை உயர்த்திக் காட்டுங்கள். ஊழியக் கண்காணியின் சந்திப்பின்போது வாரம் முழுவதிலுமான நடவடிக்கைகளில் பங்குகொள்ள விசேஷமாக முயற்சி செய்யும்படியாக அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 177(52), முடிவு ஜெபம்.
ஜூலை 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 213(85)
8 நிமி: அறிவிப்புகள், கடவுளுடைய வார்த்தை என்ற ஆங்கில புத்தகத்தைப் பயன்படுத்தின பிரஸ்தாபிகளுடைய ஒன்று அல்லது இரண்டு அனுபவங்களைச் சொல்லும்படி செய்யவும். ஆகஸ்ட் மாதத்தின் போது வெளிஊழியத்தில் பயன்படுத்துவதற்காக சபையின் கையிருப்பிலிருக்கும் புரோஷூர்களின் தலைப்புகளை அறிவிப்பு செய்யுங்கள். சபை பிராந்தியத்தில் ஒரு புரோஷரை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள். இந்த வார கடைசியில் வெளிஊழியத்தில் கலந்துகொள்ள பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—குடும்பமாக,” தகவலின் பேரில் கேள்வி-பதில் ஆய்வு ஒவ்வொரு பாராவிலும் ஒன்று அல்லது இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கவும். அப்பொழுது பாராக்களை வாசிக்கமுடியும்.
22 நிமி: “1990 ‘சுத்தமான பாஷை’ மாவட்ட மாநாட்டுக்கு வருகைத் தாருங்கள்.”—பகுதி இரண்டு. சேர்க்கையில் பாராக்கள் 16-34ஐ சபையாருடன் கலந்தாலோசியுங்கள். மாநாட்டில் நமது நடக்கையை நிர்வகிக்கக்கூடிய வேதப்பூர்வமான நியமங்களை வலியுறுத்துங்கள். இந்தச் சேர்க்கையிலுள்ள தகவலை பைபிள் மாணாக்கரிடம் விமர்சிக்கும்படியும் அதற்கு ஆஜராவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி உதவி செய்வதற்கு சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு எண் 214(23). முடிவு ஜெபம்.