சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
டிசம்பர் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 23 (40)
8 நிமி: சபை அறிவிப்புகள் மற்றும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். இந்த மாத பிரசுர அளிப்பு போன்ற முதல் கவனத்தை தேவைப்படுத்தக்கூடிய அறிவிப்புகளை வலியுறுத்துங்கள்.
17 நிமி: “ராஜ்யத்தை நாடுவோருக்குப் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் உதவிசெய்கிறது.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நியாயங்கள் புத்தகத்திலும் உட்பார்வை புத்தகத்திலுமுள்ள உதவக்கூடிய குறிப்புகளுக்குக் கவனத்தைத் திருப்புங்கள். பாரா 5-ஐ கலந்தாலோசிக்கும்போது ஒரு சுருக்கமான நடிப்பின் மூலம் பைபிளை அளிக்கையில் நியாயங்கள் புத்தகத்திலுள்ள குறிப்புகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று காட்டவும். அதோடு சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள் எப்படி பயன்படுத்தப்படலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள். தயாரிப்புக்கான அவசியத்தைக் காட்டுங்கள்.
20 நிமி: வருங்கால சந்திப்புகளுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுங்கள். பேச்சும் நடிப்பும். நம்முடைய ஊழியத்தில் சாதுரியமும் தயவும் முக்கியமானது. (1 கொரி. 9:19-23) சாதகமான நல்லெண்ணத்தை வீட்டுக்காரரிடம் விட்டு வருவது, வெறொரு பிரஸ்தாபி அவரை சந்திக்க நேரிடுகையில் அதிக முழுமையான சாட்சிகொடுப்பதற்கான வாய்ப்பை அளிக்கிறது. நாம் வீட்டைவிட்டு வெளியேறும் முன்பு ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு வருவதன் மூலம் வீட்டுக்காரருடைய சிந்தனைகளை நாம் தூண்டிவிடக்கூடும். அப்பொழுது அவர் அடுத்த சந்திப்புக்காக எதிர்நோக்கியிருப்பார். அவருக்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு கேள்வியை நீங்கள் எழுப்பினால் அவர் தன்னுடைய உரையாடலை அப்பொழுதே தொடர விரும்பக்கூடும். நியாயங்கள் புத்தகத்திலுள்ள பேச்சுப் பொருட்களை உபயோகிப்பது நன்மையாக இருக்கும். அதாவது “மனிதன் சாவதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டானா?” (rs பக்.98) “அணுசக்தி யுத்தத்தால் இந்தக் கிரகமாகிய பூமி அழிக்கப்படுமா?” (rs பக்.112), “மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?” (rs பக்.243), “எந்த மதம் சரியானது என்பதை ஒருவர் எப்படி அறிந்துகொள்ளக்கூடும்?” (rs பக்.328), மேலும் “ஏன் இவ்வளவு துன்மார்க்கம்?” (rs பக்.427), அல்லது உங்களுடைய பிராந்தியத்துக்குப் பொருந்தக்கூடிய வேறு ஏதாவது கேள்விகளை நியாயங்கள் புத்தகத்திலிருந்து பயன்படுத்தலாம். அக்கறை காண்பிக்காத ஒரு சந்திப்பை முடிப்பதைப் போன்று நடித்துக் காட்டுங்கள். பிரஸ்தாபி புறப்படும் முன் சில கேள்விகளைக் கேட்கிறார். அடுத்தமுறை சந்திக்கும்போது இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுகிறேன் என்று சொல்லுகிறார். மேலும் வீட்டுக்காரர் சில பதில்களைக் கேட்கும்போது பதில் சொல்வதற்கு பிரஸ்தாபி எவ்வாறு நியாயங்கள் புத்தகத்தை பயன்படுத்தலாம் என்பதையும் நடித்துக்காட்டுங்கள். சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் மூலமாக ஆர்வத்தைத் தூண்டவேண்டிய அவசியத்தின் பேரில் குறிப்பு சொல்லி அக்கிராசினர் தன் பேச்சை முடிக்கிறார்.
பாட்டு 98 (91), முடிவு ஜெபம்.
டிசம்பர் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 204 (109)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடைகளைப் பற்றி அறிவிப்பு செய்யவும். இந்த மாத இதழ்களிலிருந்து பேச்சுக் குறிப்புகளை கலந்தாலோசிக்கவும் இந்த வாரம் வெளி ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய சுருக்கமான பத்திரிகை அளிப்பை நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: “இளைஞர் கேட்கின்றனர் . . . உரையாடல் நடத்துவதில் நான் எவ்வாறு முன்னேற்றம் செய்யலாம்?” இரண்டு அல்லது மூன்று முன்மாதிரியான இளைஞரோடு மே 22, 1989, விழித்தெழு! பக்கங்கள் 23-5-ன் பேரில் சார்ந்த கலந்தாலோசிப்பு. வயதான ஆட்களுடனும் வெளி ஊழியத்திலுள்ள ஆட்களுடனும் எப்படிச் சம்பாஷணையை ஆரம்பிக்கலாம் என்பதை அழுத்திக்காட்டவும். இந்த அம்சங்களின் பேரில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனை குறிப்புகளைச் சுருக்கமாக நடித்துக் காட்டலாம். (இந்திய மொழிகளில்: “உண்மையான நண்பர்களை நீங்கள் எவ்வாறு உண்டுபண்ணக்கூடும்” அக்டோபர் 1, 1988 காவற்கோபுரம்.)
15 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வேதப்படிப்புகள் ஆரம்பிப்பதற்கு ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஆரம்ப சந்திப்பிலேயே வேதப்படிப்பைக் குறித்து பேசும் இரண்டு நடிப்புகளின் மூலம் நியாயங்கள் புத்தகம், பக்கம் 12-ல் “வீட்டு வேதப்படிப்பு” என்ற தலைப்பின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களைப் பயன்படுத்தி நடித்துக்காட்டுங்கள்.
10 நிமி: “தேவனுடைய நியாயமான வழிகளுக்கு நீங்கள் பிரதிபலிக்கிறீர்களா?” மார்ச் 1, 1989 காவற்கோபுரம் பக்கங்கள் 27-9, பாராக்கள் 3-23-ன் பேரில் சார்ந்த பேச்சு. துன்மார்க்கமும் அநியாயமும் அதிகரித்தப் போதிலும் பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் முழு பங்கைக் கொண்டிருப்பதற்கு நம்பிக்கையான மற்றும் உறுதியான மனநிலை இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள். (இந்திய மொழிகளில்: “நம்முடைய தேவனாகிய யெகோவாவையே சேவிப்போம்,” ஜனவரி 1, 1987 காவற்கோபுரம்.)
பாட்டு 213 (85), முடிவு ஜெபம்.
டிசம்பர் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 144 (78)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். இந்த மாத பத்திரிகைகளின் பொருத்தமான அளிப்பை நடித்துக் காட்டுங்கள்.
15 நிமி: “முன்கூட்டியே திட்டமிடுதல்” என்ற தலைப்பில் தகுதிவாய்ந்த மூப்பரின் உற்சாகமான பேச்சு. இந்தப் பேச்சிற்கான ஆதாரம் அக்டோபர் 1, 1978 காவற்கோபுரம் பக்கம் 18, 19. “பக்கப் பாதையில் திரும்பிவிடாதீர்கள்!” என்ற உபதலைப்பின் கீழ் காணப்படுகிறது. “மாம்ச ஆசைகளுக்கான முன் திட்டமிடுவதற்கு பதிலாக” சரியான காரியங்களுக்காக திட்டமிடுவதை வலியுறுத்துங்கள்.—ரோமர் 13:14. (இந்திய மொழிகளில்: “கோபத்தைச் சமாளித்தல்—உங்களுடையதும் மற்றவர்களுடையதும்.” ஆகஸ்ட் 1, 1988 காவற்கோபுரம்.)
20 நிமி: “ஜனவரி மாதத்திற்காக முன்னரே திட்டமிடுதல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 5 சிந்திக்கையில் இந்தக் கட்டுரையில் காணப்பட்ட யோசனைகளை பொருத்திப் பிரயோகித்த ஓரிரண்டுபேரை பேட்டிக் காணுங்கள். ஜனவரி மாதத்தில் பயனியர் செய்வதற்காக தனிப்பட்ட அட்டவணைப் போடுவதற்கு ஒரு பயனியர் வைராக்கியமுள்ள பிரஸ்தாபி ஒருவருக்கு எப்படி உதவுகிறார் என்பதை நடித்துக் காட்டவும்.
பாட்டு 123 (63), முடிவு ஜெபம்.
ஜனவரி 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. இந்த வார கடைசியில் செய்யப்படும் வெளி ஊழியத்துக்கான ஏற்பாடுகளை அறிவித்து எல்லாரும் பங்குபெற உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைத்தல்” கேள்வி-பதில் மூலமாக தகுதிவாய்ந்த மூப்பர் கையாளுகிறார். நேரம் அனுமதிக்குமானால் பாராக்களை வாசியுங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது “நீங்கள் மலைகளை அசைக்கலாம்!” டிசம்பர் 15, 1988 காவற்கோபுரம் பக்கங்கள் 25-7-ன் பேரில் சார்ந்த பேச்சு. (இந்திய மொழிகளில்: “யெகோவாவின் நாமம் எவ்வளவு மேன்மையானது.” ஜனவரி 1, 1987 காவற்கோபுரம்.)
பாட்டு 129 (66), முடிவு ஜெபம்.