தேவராஜ்ய செய்திகள்
◆டென்மார்க்கில் ஏப்ரல் மாதத்தின்போது 16,147 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை எட்டப்பட்டது. துணைப்பயனியர் சேவையில் 3,414 பேர் பங்குகொண்டனர்.
◆குவாட்டமாலா ஏப்ரல் மாதத்தில் 11,031 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்கையில் 11,000 குறியைத் தாண்டிவிட்டது. இது கடந்த ஆண்டு சராசரியைக் காட்டிலும் 10-சதவிகித அதிகரிப்பு.
◆போர்டோ ரீக்கோ ஏப்ரல் மாதத்தில் 23,632 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. அவர்களுடைய வட்டார மாநாடுகளுக்கு 38,504 பேர் வருகை தந்தார்கள்.
◆தாய்லாந்து ஏப்ரல் மாதத்தில் 1,057 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை எட்டியது. சமீபத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான வட்டார மாநாடுகளுக்கு 1,500 பேர் வருகை தந்தார்கள். 25 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.