தேவராஜ்ய ஊழியப்பள்ளி விமரிசனம்
ஜூன் 26 துவங்கி அக்டோபர் 16, 1989 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமரிசனம். கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கு விடைகளை எழுத ஒரு தனித் தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: விமரிசனத்தின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக, கேள்விகளின் முடிவில் விடைகள் எந்தப் பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லாச் சமயங்களிலும் பக்கங்களும் பாராக்களும் கொடுக்கப்படுவதில்லை.]
பின்வரும் வாக்கியங்களைச் சரி அல்லது தவறு என்பதாக பதிலளிக்கவும்:
1. “திரளான ஜனங்கள்” மற்றும் “பலத்த ஜாதி” அரசியலாட்சிக்குட்பட்ட தேசங்களையும், அரசாங்கங்களையும் குறிக்கிறது. (மீகா 4:3) [1, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 89 4/1 பார்க்கவும்.]
2. ஆமோஸ் புத்தகமானது பைபிள் தொகுப்பின் ஒரு பாகம்தான் என்பதை அதிலுள்ள மூன்று வசனங்களை அப்போஸ்தலர் 7:42, 43-ல் ஸ்தேவான் பொழிப்புரை செய்திருப்பதிலிருந்தும் அப்போஸ்தலர் 15:15-18-ல் காணப்படும் யாக்கோபினுடைய மேற்கோள்களிலிருந்தும் உறுதிசெய்யலாம். [2, si பக். 149 பா. 6]
3. சகரியா 1:3-ல் யூதர்கள் பாபிலோனைவிட்டு எருசலேமிலுள்ள தங்கள் தாயகத்திற்கு திரும்பிப்போகும்படி உந்துவிக்கப்படுகிறார்கள். [7, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989, 6/1 பார்க்கவும்.]
4. நான்கு முத்திரைகளால் இழுக்கப்பட்ட இரதங்கள் பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்களைப் பாதுகாப்பதற்குக் கட்டளையிடப்பட்ட தேவதூத ஆவிசேனைகள். (சகரியா 6:1-3) [8, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 6/1 பார்க்கவும்.]
5. மீகா 7:4-ன் பிரகாரம் முரட்டாட்டமுள்ள இஸ்ரவேலர்கள் மத்தியில் மிகச்சிறந்த ஒருவனும்கூட அதிகமாக நெருங்கிச்செல்லக்கூடிய எவரையும் புண்படுத்தக்கூடிய முட்செடியாக அல்லது நெரிஞ்சிலாக இருந்தான். [9, si பக். 157 பா. 15; மேலும் தமிழ் காவற் 1989 4/1 பார்க்கவும்.]
6. இயேசு பொதுமக்கள் மத்தியில் செய்யப்படும் வெளியரங்கமான ஜெபங்களைக் கண்டனம் செய்யவில்லை. மாறாக கேட்பவர்களைக் கவர்ச்சித்து அவர்களுடைய போற்றுதலை பெறும் வகையில் செய்யப்படும் ஜெபங்களையே கண்டனம் செய்தார். (மத். 6:5, 6) [13, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 3/1 பக். 8 பார்க்கவும்.]
7. செப்பனியா முன்னறிவித்தபடியே மோவாப், அம்மோன், மற்றும் அசீரியா ஆகியவற்றின் அழிவை சரித்திரம் அறிக்கை செய்கிறது. [14 si பக். 164 பா. 5]
8. இயேசு யூதேயா மதத்தை ஓட்டுப்போட்டு சரிசெய்வதற்கோ அல்லது அதை அழியாமல் காத்து வைப்பதற்கோ வரவில்லை, மாறாக ஒரு புதிய வணக்கமுறையை ஆரம்பித்து வைக்கவே வந்தார் என்பதை மத்தேயு 9:16, 17-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. [14, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 9/1 பார்க்கவும்.]
9. மத்தேயு 10-ம் அதிகாரத்தில் காணப்படக்கூடிய இயேசுவின் பிரசங்க அறிவுரைகள் 12 அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே பொருந்தும். [15, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1987 8/1 பார்க்கவும்.]
10. உண்மை வணக்கத்தை புறக்கணித்த காரணத்தால் யூதர்கள் அசுத்தமானவர்களாக இருந்தனர். (ஆகாய் 2:10-14) [si பக். 167 பா 11]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்:
11. ஏதோமுக்கு எதிராக கண்டன அறிவிப்புகளைச் செய்வதற்கு எந்த வெறுக்கத்தக்க செயல் ஆதாரத்தை அளித்தது? (ஒபதியா 12-14) [5, si பக். 152 பா 8]
12. இரட்சிக்கப்படக்கூடிய “அபிஷேகம் பண்ணப்பட்டவன்” யார் (ஆபகூக் 3:13) [4, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 5/1 பார்க்கவும்.]
13. அந்தச் “சுத்தமான பாஷை” எது? (செப். 3:9) [5, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 6/1 பார்க்கவும்.]
14. யோனாவை விழுங்கிய என்ன வகையான சமுத்திர பிராணியாக இருந்திருக்கக்கூடும்? (யோனா 1:17) [6, si பக். 154, பா. 4, 5; தமிழ் காவற். 1989 4/1 பார்க்கவும்.]
15. அவர்கள் இருவரும் வெறுமென நிச்சயிக்கப்பட்ட நிலையில் மட்டுமே இருக்கையில் யோசேப்பு எப்படி மரியாளை இரகசியமாய் தள்ளிவிட யோசனையாக இருக்கக்கூடும்? (மத். 1:19) [1, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 9/1 பார்க்கவும்.]
16. ஆபகூக் புத்தகத்தில் சிறப்பித்துக் காட்டப்படும் கம்பீரமான சத்தியங்களில் ஒன்று என்ன? [16, si பக். 166. பா. 3]
17. யெகோவா ஏன் தீர்க்கதரிசியாகிய ஆகாயை எழும்பப்பண்ணினார். [16, si பக். 166. பா. 3]
18. இயேசுவின் சீஷர்கள் ‘உணவு சாப்பிடுவதற்கு முன்பு கை கழுவாமலிருந்ததற்கு’ ஏன் குற்றங் கண்டுபிடிக்கப்பட்டார்கள். (மத். 15:2) [17, வாராந்தர பைபிள் வாசிப்பு; ஆங்கில காவற் 11/1 பக். 8]
பின்வரும் கூற்றுகளைப் பூர்த்தியாக்கத் தேவையான சொல்லையோ சொற்றொடரையோ அளியுங்கள்:
19. ‘இதயங்களை கிழித்தல்’ என்பது யெகோவாவின் நாளின்போது இரட்சிக்கப்படுவதற்கு இருதயப்பூர்வமான ----------------- காட்டுவது அவசியம் என்பதைக் குறிக்கிறது. (யோவேல் 2:12, 13 [1, தமிழ் காவற் 1989 2/1 பக். 30]
20. --------------------- பட்டணத்திலிருந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகளில் குடியிருந்த சுகபோக பிரியர்களுக்கு எதிராக தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் தீர்க்கதரிசனமுறைத்தான். [3, si பக். 149 பா. 9]
21. ஒபதியா தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக-----------------------இல்லாமற்போயிற்று, அவளுடைய சந்ததியில் மீந்தவர்கள் இருக்கும் இடமும் இல்லாமற்போயிற்று. [4, si பக். 151 பா. 5]
22. தீர்க்கதரிசியாகிய------------------- மேசியாவின் பிறப்பிடத்தை முன்னறிவித்தான்[8, si பக். 156 பா. 6]
23. மத்தேயு 5:22-ல் சொல்லப்பட்டிருக்கும் “ஆலோசனை சங்கம்” எருசலேமின்---------------ஆகும். [12, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 9/1 பார்க்கவும்.]
24. யெகோவாவினுடைய கோபாக்கினை நாளில்---------------------பாதுகாப்பைக் கொடுக்காது. (செப். 1:18) [15, si பக். 164 பா. 7]
25. இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதானது-------------நோக்கத்தைச் சேவித்தது. (மத். 13:10-15) [16, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் ஆங்கில காவற். 1987 4/1 பக். 8]
பின்வரும் வாக்கியங்களில் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள்:
26. யெகோவா பொல்லாதவர்கள் மீது தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுகையில் யெகோவாவின் பெயரில் கூப்பிடுகிறவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்று தீர்க்கதரிசியாகிய (யோவேல்; ஆமோஸ்; ஒபதியா) முன்னறிவித்தான். [1, si பக். 147 பா. 9]
27. “இரத்தப்பழிகளின் நகரம்” (பாபிலோன்; நினிவே; எருசலேம்) ஆகும். (நாகூம் 3:1) [3, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 5/1 பார்க்கவும்.]
28. நினிவேக்குப் போவதற்கு பதிலாக, யோனா எதிர்திசையில், ஒருவேளை (போர்ச்சுகல்; ஸ்பேய்ன்; பிரான்ஸ்) என்ற இடத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தர்ஷீசுக்கு, சமுத்திரப் பயணம் செய்தான். [7 si பக். 154 பா. 6; வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை. it புத்தகம் 2, பக். 98]
29. “உடன்படிக்கையின் தூதன்” (யெகோவா; யோவான் ஸ்நானகன்; இயேசு கிறிஸ்து) [10, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1989 7/1 பார்க்கவும்.]
30. நாகூம் புத்தகம் சுமாராக நினிவேயின் அழிவுக்கு முன்னால் (பொ.ச.மு. 740; 632; 607)-ல் எழுதப்பட்டிருக்க வேண்டும். [si பக். 159 பா. 3; மேலும் வேதவசனங்களின் பேரில் உட்பார்வை, it புத்தகம் 2, பக். 505 பார்க்கவும்]
பின்வரும் வேதவாக்கியங்களை, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுகளோடு பொருத்துக:
மீகா 6:11; நாகூம் 1:2, 3; ஆபகூக் 3:16, 18; ஆகாய் 1:4-6; சகரியா 12:6.
31. ஒருபோதும் ஆவிக்குரிய கடமைகளுக்கு முன்பாக பொருளாதார அக்கறைகளை வைக்காதீர்கள். [6, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1989 6/1 பார்க்கவும்.]
32. கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் கண்காணிப்பு செய்யும் ஆட்கள் குறிப்பிடத்தக்க வைராக்கியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். [9, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற் 1989 6/1 பார்க்கவும்.]
33. சத்துருக்கள் மீது யெகோவா தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுகிறார். [si பக். 159 பா. 8]
34. இரட்சிப்புக்காக யெகோவா தேவன்பேரில் நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். [13, si பக். 162 பா.11]
35. நேர்மையற்ற வியாபார நடவடிக்கைளில் ஈடுபடும் ஓர் ஆள் யெகோவா தேவனை எந்த தகுந்த விதத்திலும் சேவிக்க முடியாது. [2, வாராந்தர பைபிள் வாசிப்பு; தமிழ் காவற். 1989 4/1 பார்க்கவும்.]