சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
ஆகஸ்ட் 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 43 (103)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். செப்டம்பரில் ஒழுங்கான பயனியர் சேவை செய்ய சிந்தித்திருப்பவர்கள் விண்ணப்ப நமூனாவை பூர்த்தி செய்து, கூடுமானால் 30 நாட்களுக்கு முன்பே மூப்பர்களிடம் சமர்ப்பிக்கும்படி உற்சாகப்படுத்தவும். புதிய பத்திரிகைகளை உபயோகித்து அளிப்பை சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். இரண்டாவது சனிக்கிழமையன்று பத்திரிகை ஊழியத்தில் பங்குபெற எல்லாரையும் உற்சாகப்படுத்தவும்.
20 நிமி: “முழு இருதயத்தோடு சேவை செய்தல்.” பேச்சும், கட்டுரையை கேள்விகளோடு கலந்துரையாடலும். பாரா 4-ஐ சிந்திக்கையில், ஆகஸ்ட் மாத புரோஷூர் அளிப்பின் பேரில் ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: “உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்ற ஏப்ரல் 15, 1989 ஆங்கில காவற்கோபுர கட்டுரையிலுள்ள கேள்விகளை பயன்படுத்தி சபையாருடன் கலந்தாலோசிப்பு. (இந்திய மொழிகளில்: “ஆவியுலக தொடர்பின் நுகத்தை உதறித்தள்ளுதல்,” செப்டம்பர் 1, 1988 காவற்கோபுரம்.)
பாட்டு 128 (10), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 151 (25)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் நன்கொடையைப்பற்றி அறிவிக்கவும்.
20 நிமி: “சாட்சிக்கொடுப்பதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் ஆவலுடன் பற்றிக்கொள்ளுங்கள்—பகுதி II” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐ சிந்திக்கும்போது சந்தர்ப்ப சாட்சியம் பற்றிய உள்ளூர் அனுபவங்களையும் சுருக்கமான நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: நியாயங்கள் புத்தகம் பக்கங்கள் 187-91-ல் உள்ள “சுதந்தரம்” என்ற தலைப்பின் அடிப்படையில் பேச்சு. யெகோவாவைச் சார்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் சுதந்தரமாய் செயல்படுவதனால் வரும் நாசகரமான விளைவுகளையும் உயர்த்திக் காட்டுங்கள். சபையின் தேவைக்கேற்றபடி அமைத்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 63 (32), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 21-ல் துவங்கும் வாரம்
பாட்டு 183 (73)
10 நிமி: சபை அறிவிப்புகள், தேவராஜ்ய செய்திகள். ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையை விமர்சிக்கவும். வெளி ஊழியத்தில் உங்கள் சபையின் சாதனைகளைப் பாராட்டுங்கள். நான்காவது சனிக்கிழமையன்று எல்லாரும் பத்திரிகை ஊழியத்தில் பங்குபெற உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “கூட்டங்கள் நமது பிள்ளைகளுக்குப் பயனளிக்கின்றன.” கட்டுரையின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. கட்டுரையில் சிபாரிசு செய்யப்பட்ட ஆலோசனைகளைப் பொருத்தியிருக்கும் முன்மாதிரியுள்ள பெற்றோரையும் பிள்ளைகளையும் பேட்டிக் காண்பதற்கு ஒரு சில நிமிடங்களைப் பயன்படுத்தவும். கூட்டங்களுக்காக தயார் செய்ய பிள்ளைகளுக்கு உதவுவதற்கு தாங்கள் ஆரம்பித்தில் என்ன செய்தார்கள், உதவிசெய்ய தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள், இதன் விளைவாக அவர்களுக்குக் கிடைத்திருக்கும் தனிப்பட்ட பயன்கள் என்ன என்பவற்றை பெற்றோரிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
15 நிமி: சபையின் தேவைகள், அல்லது “நமது சகோதரர்களுக்கான மதித்துணர்வு.” அக்டோபர் 1, 1988 ஆங்கில காவற்கோபுரத்தின் பேரில் பேச்சு. (இந்திய மொழிகளில்: “உண்மையான நண்பர்களை அடைய முயற்சி,” அக்டோபர் 1, 1988 காவற்கோபுரம்.)
பாட்டு 65 (36), முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 130 (58)
5 நிமி: சபை அறிவிப்புகள். முதல் ஞாயிற்றுக் கிழமைக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
10 நிமி: ஊழியக் கண்காணி வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் பகுதியைக் கலந்தாலோசிக்கிறார். இந்தக் கூட்டங்கள் சுருக்கமானதாக இருக்கவேண்டும். தொகுதியை ஒழுங்கமைப்புச் செய்வதே அதன் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். என்ன தயாரிப்பு அவசியம்? கூட்டங்கள் பலனுள்ளதாக இருப்பதற்கு உதவிசெய்ய பிரஸ்தாபிகள் என்ன செய்யலாம்? மார்ச் 1989 நம் ராஜ்ய ஊழியம் “கேள்விப் பெட்டி”-யும், அத்துடன் “ஊழியத்திற்கான அதிக அர்த்தமுள்ள கூட்டங்கள்” என்ற நம் ராஜ்ய ஊழியம் பிப்ரவரி 1979-ல் வெளிவந்த கட்டுரையையும் சுருக்கமாக விமர்சிக்கவும்.
10 நிமி: “உங்களுடைய தயாள குணத்திற்கு நன்றி.” பேச்சு. பயனியர் ஊழியப் பள்ளிகளை ஆதரிக்க நாம் என்ன செய்யக்கூடும்? கொடுக்கப்படும் இந்த உதவி ஏன் போற்றத்தக்கதாய் இருக்கிறது?
20 நிமி: கிறிஸ்தவ பெண்கள்—மரியாதையைப் பெற்ற மற்றும் மரியாதைக்குரிய சபை அங்கத்தினர். நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 431-5 பேரில் மூப்பரின் பேச்சு. பைபிளில் அவர்களுக்கென்று குறிக்கப்பட்டிருக்கும் பாகத்திற்கு இசைய வாழ்வதற்காக சகோதரிகளை பாராட்டவும்.
பாட்டு 82 (90), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 192 (76)
8 நிமி: சபை அறிவிப்புகள் சமீப இதழ்களிலிருந்து பேச்சுக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். வாரக் கடைசியில் நடைபெறும் ஊழிய ஏற்பாடுகளுக்கு ஆதரவு தரும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைப் பயன்படுத்தி.” கேள்வி-பதில். நேரமிருந்தால் பாராக்களை வாசிக்கலாம். வீட்டில் இல்லாதவர்கள் மற்றும் மறுசந்திப்பு செய்யப்பட வேண்டியவர்கள் ஆகிய இரு சாராருக்காகவும் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டைப் பயன்படுத்துவதற்கான முறையை பட்டியலிட்டு காட்டவும். பதிவேடுகளில் பதிவுசெய்து வைக்கப்பட வேண்டிய தகவல்களைப் பற்றி சபையாருடன் விமர்சனம் செய்யுங்கள். மேலும் ஏன் என்று விளக்கவும். அபூர்வமாக வேலை செய்யப்படும் பிராந்தியங்களிலும்கூட வீட்டில் இல்லாதவர்களின் பெயர்களை பதிவுசெய்து வைக்கும்படி வலியுறுத்துங்கள். வெளி ஊழியம் செய்யும்போது எல்லாரும் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டை வைத்திருக்கும்படி நினைப்பூட்டுங்கள்.
12 நிமி: புரோஷூர்களை உபயோகித்து பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். கலந்தாலோசிப்பு. புரோஷூர்களை விநியோகிப்பது மட்டும் போதாது. சீஷராக்குவதற்கான நமது குறிகோளை நிறைவேற்றுவதற்குப் பைபிள் படிப்புகள் நடத்தப்பட வேண்டும். புரோஷூர்களைப் பயன்படுத்தி பைபிள் படிப்புகள் எப்படி தொடங்கலாம் என்பதைச் சபையாருக்குக் காட்டுங்கள். (செப்டம்பர் 1986 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ஐ பார்க்கவும்.) புரோஷூரிலிருந்து பைபிள் படிப்பு ஆரம்பிப்பதை நடித்துக் காட்டுங்கள். புரோஷூரை உபயோகித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் வெற்றி கண்டிருக்கும் பிரஸ்தாபிகளை பேட்டி காணவும். அல்லது 1986 வருடாந்தர புத்தகம் பக்கங்கள் 11-13-ல் மற்றும் 1987 வருடாந்தர புத்தகம் பக்கம் 48-ல் காணப்படும் அனுபவங்களை எடுத்துச் சொல்லலாம். பிரஸ்தாபிகளுடைய நல்நோக்குடன்கூடிய அணுகுமுறைகளையும் அவர்கள் அடைந்திருக்கும் நல்ல பலன்களையும் வலியுறுத்திக் காட்டுங்கள்.
10 நிமி: தேவ ராஜ்ய காலண்டர்களின் படங்களிலிருந்து கற்றுகொள்ளுதல். பேச்சு. ஜூலை 1, 1989 ஆங்கில காவற்கோபுரத்தில் காணப்படும் “கோராசீனே, உனக்கு ஐயோ!—ஏன்?” என்ற கட்டுரையை 1989 காலண்டருடன் சேர்த்துப் பயன்படுத்துங்கள். கட்டுரையை வாசிக்கையில் அதற்கு ஒத்துள்ள காலண்டர் படத்தைப் பயன்படுத்துவதன் பயனை உயர்த்திக் காட்டுங்கள். ஜனவரி 1 (தமிழில் ஜூன் 1, 1989) மார்ச் 1, மற்றும் மே 1, 1989 ஆங்கில காவற்கோபுர இதழ்களில் காணப்படும் ஒத்திசைவான கட்டுரைகளை சகோதரர்களுக்கு நினைப்பூட்டுங்கள். 1990-ம் ஆண்டிற்குரிய காலண்டர்களுக்கான ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன. இவற்றில் பைபிள் தேசங்களிலிருந்து கூடுதலான கல்வி புகட்டும் படங்கள் இருக்கும். (இந்திய மொழிகளில்: “உட்பார்வை” புத்தகத்திலிருந்து அல்லது “ஏய்ட்” புத்தகத்திலிருந்து பொருத்தமான தகவலை பயன்படுத்துங்கள்.)
பாட்டு 32 (10), முடிவு ஜெபம்.