எழுத்து விமரிசனத்துக்காக ஆயத்தம் செய்யுங்கள்
1. ஜனவரி 1989 நம் ராஜ்ய ஊழியம், தேவராஜ்ய ஊழியப் பள்ளி எழுத்து விமரிசனத்துக்கு புதிய ஏற்பாடு ஒன்று இருப்பதைப் பற்றி எடுத்துரைத்தது, எழுத்து விமரிசனங்களுக்கு விடைகளை எழுத இடமளிக்கும் அச்சடிக்கப்பட்ட விமரிசன நாள் இனிமேல் கொடுக்கப்படாது. ஆகிலும், ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் நம் ராஜ்ய ஊழியம் பிரதிகளுடன் அச்சடிக்கப்பட்ட கேள்வி தாள்கள் சேர்க்கப்படும். இந்தத் தாள்களை நீங்கள் முன்கூட்டியே பெறுவதனால், ஒவ்வொருவரும் குறிப்பிடப்பட்ட விஷயங்களின் பேரில் ஆராய்ச்சி செய்து முற்றிலும் ஆயத்தமாக இருக்க இது வாய்ப்பளிக்கும்.
2. அச்சடிக்கப்பட்ட கேள்விகள் எந்த பிரசுரங்களின் பேரி சார்ந்திருக்கின்றனவென்று காட்டும் மேற்கோள் குறிப்புகளை உபயோகித்து அந்த விஷயங்களை நீங்கள் எடுத்து பார்க்கையில், கேள்வித் தாள்களின் மேல் எந்த குறிப்பும், நீங்கள் எழுதக்கூடாது, ஏனெனில் இந்தக் கேள்வித் தாளை நீங்கள் எழுத்து விமரிசனத்தின்போது பயன்படுத்துவீர்கள்.
3. எழுத்து விமர்சனத்துக்காக அனுமதிக்கப்பட்ட நேரத்தின் போது, உங்களுடைய சொந்த வார்த்தைகளில் கொடுக்கப்படவேண்டிய விடைகளை எழுதுவதற்காக உங்களுக்கு ஒரு நாள் தேவையாக இருக்கும் கேள்விகளுக்குக் குறிப்பான பதில்களைக் கொடுக்க பிரயாசப்படுங்கள், சுருக்கமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முன்கூட்டியே ஆயத்தம் செய்திருப்பதால், இது அவ்வளவு கடினமாக இருக்காது.
4. ஒவ்வொரு வாரமும் தேவ ராஜ்ய பள்ளிக்காக ஒவ்வொருவரும் நன்றாக தயாரிக்க வேண்டும். அடுத்து வரும் எழுத்து விமரிசனத்தில் சிந்திக்கப்படும் எல்லாக் குறிப்புகளும் தெளிவாக எடுத்துரைக்கும்படி பள்ளிக் கண்காணி கவனித்துக் கொள்வார்.
5. இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம், தேவராஜ்ய பள்ளியின் முக்கிய குறிக்கோள் மேலும் முழுமையாக நிறைவேற்றப்படும். இது நம் நாம் ஊழியத்துக்காக மேலும் சிறந்த விதத்தில் ஆயத்தமாக இருப்பதில் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமரிசனம்
பிப்ரவரி 27 துவங்கி ஜூன் 12, 1989 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமரிசனம். கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடி அத்தனை கேள்விகளுக்கு விடைகளை எழுத ஒரு தனித் தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: விமரிசனத்தின்போது எந்தக் கேள்விகளுக்கு விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக, கேள்விகளின் முடிவில் விடைகள் எந்த பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்படுகிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லா சமயங்களிலும் பக்கங்களும் பாராக்களும் கொடுக்கப்படுவதில்லை]
பின்வரும் வாக்கியங்களைச் சரி அல்லது தவறு என்பதாக பதிலளிக்கவும்:
1. புலம்பலின் மூன்றாவது செய்யுள், கடவுளின் இரக்கத்தின் பேரிலுள்ள சீயோனின் நம்பிக்கையையும், யெகோவாவிடமிருந்து வரும் இரட்சிப்பிற்காகக் காத்திருக்கும் தகுதியுடைமையும் ஆகும். [si பக். 131 பாரா 10]
2. எசேக்கியேல் அவனது தீர்க்கதரிசன செய்தியைக் கேட்பவர்கள் அதன்படி நடந்தாலும், நடவாவிட்டாலும் ஒரு தீர்க்கதரிசியாக ஊழியம் செய்யும்படி யெகோவா கட்டளையிட்டார். [si பக். 134 பாரா 9]
3. நெற்றியின் மீதுள்ள அடையாளம் என்பது புத்திநுட்பத்துடன் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுதலைக் குறிக்கிறது. (எசேக். 9:4) [நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 14 பாரா18]
4. எசேக்கியேல் தனது மனைவியின் மரணத்தைக் குறித்த தனது வருத்தத்தை வெளிகாட்டாதிருக்கும்படி கட்டளையிடப்பட்டது, ஏனெனில், எருசலேமின் அழிவைக் குறித்து யூதர்கள் ஸ்தம்பித்துப் போகும் அந்த நிலையில் அவர்கள் தெரியப்படுத்தாதிருப்பார்கள். [நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 21 பாரா 24]
5. ஆவிக்குரிய பரதீஸில் இருப்பது நம் சொந்த நடக்கையைச் சார்ந்ததாயில்லை. [நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 24, பாராக்கள் 10, 11]
6. பைபிளில் நுட்பப்பிழை காண்போர் தானியேல் புத்தகத்தின் சரித்திரப்பூர்வத்தைக் கேள்விக்குள்ளாக்கியபோதிலும், வேதாகமத்தின் மற்ற சான்றுகள் அவர்களது கூற்றை முறியடிக்கின்றன. [பிப்ரவரி 1989 காவற்கோபுரம், பக். 16 பாரா 5]
7. எசேக்கியேலின் ஆலயத்தைப் பற்றிய தரிசனம், கோகுவின் தாக்குதலின்போது தூய வணக்கம் தப்பிப்பிழைக்கும் என்பதை நிரூபிக்கிறது. (எசேக். 40-44) [வாராந்தர பைபிள் வாசிப்பு; நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 26 பாரா 17-ஐப் பாருங்கள்.]
8. (“தீங்கிழைக்கும் வீடு” என்று பொருள்படும்) “பெத்தோவேன்,” “தேவனுடைய வீடு” என்று பொருள்படும் பெத்தேல் என்ற சொல்லை சிறுமைப்படுத்தும் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது. (ஓசியா 10:5) [வாராந்தர பைபிள் வாசிப்பு; ஜனவரி 1989 காவற்கோபுரத்தைப் பாருங்கள்.]
9. பாசாசின் மாடுகள்,” சமாரியாவின் குடிகளுடைய நன்கு போஷிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய நிலையைக் குறிப்பிட்டது. (ஆமோஸ் 4:1) [வாராந்தர பைபிள் வாசிப்பு; பிப்ரவரி 1989 காவற்கோபுரத்தைப் பாருங்கள்]
10. “பற்களுக்கு ஓய்வு” என்ற கூற்று, பஞ்சத்தின்போது, உண்பதற்கு எதுவும் இல்லாமையால் பற்கள் ஓய்வெடுப்பதைக் குறிக்கிறது. (ஆமோஸ் 4:6) [பிப்ரவரி 1989 காவற்கோபுரத்தைப் பார்க்கவும்.]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்:
11. கோகாகிய மாகோகு என்பது யார்? (எசேக். 38:2) [வாராந்தர பைபிள் வாசிப்பு; நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 25 பாரா 14-ஐப் பாருங்கள்]
12. பொ.ச.மு. 617-லிருந்து 607 வரையிலான கடினமான வருடங்களின்போது, எருசலேமின் அழிவின் உச்சக்கட்டத்தின்போது முன்னிலையில் நின்ற மூன்று தீர்க்கதரிசிகள் யாவர்? [si. பக். 133 பாரா 2]
13. கற்பனையான ஆலயத்திலிருந்து பாய்ந்து வந்த தண்ணீரால் எது அடையாளப்படுத்திக் காட்டப்படுகிறது? (எசேக். 47:1-11) [வாராந்தர பைபிள் வாசிப்பு; நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 27 பாரா 20-ஐப் பாருங்கள்.]
14. எசேக்கியேல் 47:12 புதிய உலகில் கீழ்படிதலுள்ள மனிதவர்க்கம் எதை அனுபவிப்பதாகக் குறிக்கிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 27 பாரா 21-ஐப் பாருங்கள்.]
15. நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு தானியேல் அர்த்தங்கூறியபோது, ராஜா என்ன முடிவிற்கு வந்தான்? (தானி. 2:26, 28, 47) [வாராந்தர பைபிள் வாசிப்பு: பிப்ரவரி 1989 காவற்கோபுரம், பக். 17 பாரா 9-ஐப் பாருங்கள்]
16. ஏற்கெனவே “நின்று கொண்டிருந்த” போதிலும், எந்த வகையில் இயேசு “எழும்பு”கிறார்? (தானி 12:1) [வாராந்தர பைபிள் வாசிப்பு; ஆங்கில காவற்கோபுரம் 1987, ஜூலை 1, பக்.19 பாரா 15-ஐப் பாருங்கள்.]
17. கோமேரின் பிள்ளைகளின் பெயர்கள் யெகோவா இஸ்ரவேலரோடு எவ்விதம் காரியங்களைக் கையாளுவார் என்பதை எவ்விதம் குறிப்பிடுகின்றன? (ஓசியா 1:6,9) [si பக். 144 பாரா 9]
பின்வரும் கூற்றுகளைப் பூர்த்தியாக்கத் தேவையான சொல்லையோ சொற்றொடரையோ அளியுங்கள்:
18. தீர்க்கதரிசிகளான ஏசாயாவையும் மீகாவையும் முந்திய தீர்க்கதரிசி...........................................என்பதாகத் தெரிகிறது. [si பக். 146 பாரா 3]
19. பைபிள் புத்தகமாகிய....................................எருசலேம் நேபுகாத்நேச்சாரால் முற்றுகையிடப்பட்டு, சிறைக் கைதிகளாக்கப்பட்டு, மற்றும் அழிக்கப்பட்ட சமயத்தில் ஒருவரை மேற்கொண்ட, சமாளிக்க முடியாத வருத்தத்தை வெளிக்காட்டுகிறது. [si பக். 131 பாரா 7]
20. எசேக்கியேல் 17-ல் எருசலேம்.......................................தேசத்திடம் உதவிக்குத் திரும்பினதன் பலனற்ற தன்மையை யெகோவா புதிர்களைக் கொண்டு விளக்கிக் காட்டினார். [si பக். 135 பாரா 17]
21. சுவற்றில் காணப்பட்ட கையெழுத்திற்கு அர்த்தங் கொடுக்கையில், தானியேல்.................க்கு விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியை வகித்தான். [வாராந்தர பைபிள் வாசிப்பு; பிப்ரவரி 1989 காவற்கோபுரம், பக். 25 பாரா 19-ஐப் பாருங்கள்]
22. எசேக்கியேலின் கடைசி தரிசனத்தில், 12 வாசல்களைக் கொண்ட பரிசுத்த நகரத்தை அவன் விளக்கினான், அந்த நகரத்தின் மகிமை பொருந்திய பெயர் யாதெனில்........................ [நவம்பர் 1988 காவற்கோபுரம், பக். 27 பாரா 23]
23. “யோசபாத்தின் பள்ளத்தாக்கு” என்ற சொல், “யெகோவாவின் நாளில்”....................................அடையாளப்படுத்துகிறது. (யோவேல் 3:2, 14) [வாராந்தர பைபிள் வாசிப்பு; பிப்ரவரி 1989 காவற்கோபுரத்தைப் பாருங்கள்.]
24.........................ஆண்டில் யூதர்கள் சிறைக் கைதிகளாகக் கொண்டு போகப்படுகையில் தானியேலும் சிறைக் கைதிகளாகக் சென்றான். [si பக். 139, பாரா 8]
25. ஒரு தூதன், தானியேலிடம் தான் வருவதை ‘பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி’ எதிர்த்தான் என்றும் ஆனாலும்.................................தனக்கு உதவினார் என்பதையும் விளக்கினார். (தானி. 10:13) [si பக். 141 பாரா 17]
பின்வரும் வாக்கியங்களில் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தேர்ந்தெடுங்கள்:
26. ஓசியாவின் புத்தகத்தில், “இஸ்ரவேல்” என்ற பெயருக்கு மாற்றுப் பெயராக பயன்படுத்தப்பட்டுள்ள பெயர் (எப்பிராயீம்; யூதா; யாக்கோபு.) [si பக். 144 பாரா 8]
27. “உடன்படிக்கை” (நியாயப்பிரமாண உடன்படிக்கை; புதிய உடன்படிக்கை; ஆபிரகாமிய உடன்படிக்கை)-யைக் குறிக்கிறது. (தானி 9:27) [வாராந்தர பைபிள் வாசிப்பு; kc புத்தகம் பக். 73 பாரா 23-ஐப் பாருங்கள்]
28. யெகோவாவின் நாமத்தைத் தொழுகிற எவனும் “இரட்சிக்கப்படுவான்.” (அவர்கள் முழுக்காட்டப்படுகையில்; அவர்கள் யெகோவாவின் நாமத்தை ஒழுங்காகப் பிரஸ்தாபப்படுத்துபவர்களாகையில், கடவுள் புறஜாதிகளின் மீது தன் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகையில்) (யோவேல் 2:32) [வாராந்தர பைபிள் வாசிப்பு; பிப்ரவரி 1989 காவற்கோபுரத்தைப் பாருங்கள்.]
29. யெகோவா “மனஸ்தாபப்பட்டது” எப்படியெனில் , (அவர் மனந்திரும்பிய அசீரியர்களைத் தண்டிப்பதைக் குறித்த தன் மனதை மாற்றினார்; அவர்கள் ஒரு வினைமையான நியாயத்தீர்ப்புச் செய்தியைக் கேள்விப்பட வேண்டியதைப் பற்றி வருத்தப்பட்டார்; அவர் சிருஷ்டித்தவர்கள் அவ்வளவு துன்மார்க்கராக மாறியதால் புலம்பினார்.) (யோனா 3:10) [வாராந்தர பைபிள் வாசிப்பு; ஏப்ரல் 1989 காவற்கோபுரத்தைப் பாருங்கள்.]
30. பைபிள் பெல்ஷாத்சாரை பாபிலோனின் கடைசி அரசனாகக் குறிப்பிட்டபோதிலும், அவன் உண்மையில் [நேபுகாத் நேச்சார், தீய-மெரோதாக், நபோனிடஸ்) அரசனோடுகூட ஆட்சி செய்தவனாக இருந்தான். [si பக். 140 பாரா 12]
பின்வரும் வேதவாக்கியங்களை, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கூற்றுகளோடு பொருத்துக:
எசேக். 47:13-48:34; தானி. 3:16-18; தானி. 7:13, 14; ஓசியா 5:1; ஓசியா 13:14.
31. மெய்மதத்திலிருந்து வழிவிலகிச் சென்ற ஆசாரியர்களும் இஸ்ரவேல் அரசர்களும், ஜனங்களைப் பொய் மதத்தில் ஈடுபடும்படி சிக்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு ஒரு கண்ணியாகவும், ஒரு வலையாகவும் இருந்தனர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; காவற்கோபுரம் 1989 காவற்கோபுரத்தைப் பாருங்கள்.]
32. இந்த வேதப்பூர்வ முன்னோடிக்கு இசைவாக யெகோவாவின் சாட்சிகள் இன்று தேசீய சின்னங்களுக்கு முன் பணிகிறதில்லை. [வாராந்தர பைபிள் வாசிப்பு; பிப்ரவரி 1989 காவற்கோபுரம், பக். 24 பாரா 17-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.]
33. கீழ்ப்படியாத இஸ்ரவேலரை அப்போது ஷியோலின் வல்லமையிலிருந்து யெகோவா விடுவிக்க மாட்டார், ஏனெனில் அவர்கள் இரக்கத்தைப் பெறுவதற்குத் தகுதியாயில்லை. [வாராந்தர பைபிள் வாசிப்பு; ஜனவரி 1989 காவற்கோபுரத்தைப் பாருங்கள்.]
34. பரதீஸில், தான் விரும்பிய இடத்தில் கடவுள் ஜனங்களை வைப்பார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; நவம்பர் 1988 காவற்கோபுரம். பக். 27 பாரா 22-ஐப் பாருங்கள்.]
35. இத்தீர்க்கதரிசனம் யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு: kc பக். 160, பாராக்கள் 4, 5-ஐப் பாருங்கள்.]