சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
மார்ச் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 72 (58)
7 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய சேவையிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளையும் சேர்த்துக்கொள்ளவும். வெளி ஊழியத்தில் பங்குகொள்ள யாவரையும் உற்சாகப்படுத்தவும்.
20 நிமி: “கடவுளுக்கும் அயலானுக்கும் செயல்மூலம் அன்பு காட்டுதல்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பழைய புத்தகங்களில் பொருத்தமான பொருள் ஒன்றை உபயோகித்து ஒரு சுருக்கமான நடிப்பைச் சேர்த்துக்கொள்ளவும். அல்லது ரூ.10-க்கு அளிக்கப்படும் 192-பக்க புத்தகங்களில் ஒன்றை எப்படி அளிப்பது என்று நடித்து காட்டவும்.
18 நிமி: “முன்னிருக்கும் கூடுதலான நடவடிக்கைக்காக இப்பொழுதே ஆயத்தம் செய்யுங்கள்.” சபையார் பங்கெடுத்தலோடு கட்டுரையின் கலந்தாலோசிப்பு. இலக்குகளை வைக்கவும், குடும்பங்கள் ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலான ஊழியத்தை அனுபவிக்க ஒன்றுசேர்ந்து உழைப்பதை உற்சாகப்படுத்தவும்.
பாட்டு 37 (18), முடிவு ஜெபம்
மார்ச் 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 49 (44)
10 நிமி: சபை அறிவிப்புகள். சனிக் கிழமை பத்திரிகை ஊழியத்தை ஆதரிக்கும்படி உற்சாகப்படுத்தவும். காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-விலுள்ள ஒரு கட்டுரையை உபயோகித்து பத்திரிகை அளிப்பை சுருக்கமாக நடித்து காட்டவும்.
20 நிமி: “நீங்கள் உங்கள் மறுசந்திப்புகளை செய்கிறீர்களா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 4-ஐ சிந்திக்கையில், என்றும் வாழலாம் புத்தகத்தை உபயோகித்து எப்படி படிப்பை துவங்கலாம் என்று காட்டும் ஒரு நடிப்பை சேர்த்துக்கொள்ளவும்.
15 நிமி: “அவைகளின் சத்தம் பூமியெங்கும் செல்லுகின்றன.” ஜனவரி 1, 1989 ஆங்கில காவற்கோபுர கட்டுரையின் பேரில் உற்சாகமூட்டும் பேச்சு. மற்ற இடங்களிலிருந்து கிடைக்கும் அறிக்கைகளிலிருந்து நாம் எப்படி நன்மையடகிறோம் என்று காட்டவும். (இந்திய மொழிகளில்: ஜனவரி 1988 காவற்கோபுரம், “மகிழ்ச்சியுள்ள ஜனம்—ஏன்?”)
பாட்டு 192 (103), முடிவு ஜெபம்.
மார்ச் 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 39 (16)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ஏப்ரலின் முதல் ஞாயிற்று கிழமை வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்படி யாவரையும் உற்சாகப்படுத்தவும்.
20 நிமி: தங்கள் விசுவாசத்திற்குக் காரணத்தைக் கொடுக்க இளைஞருக்கு உதவுங்கள். நியாயங்கள் புத்தகத்தின் நடைமுறையான பயனை எடுத்துக்காட்டும் இரண்டு நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்புகள். எதிர்ப்புகளைச் சந்திக்கவும் உண்மை மனதுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் ஆயத்தமாக இருப்பதன் அவசியத்தை சுருக்கமாக எடுத்துரைக்கவும். (1) ஆசிரியரிடம் பேசுகையில், நல்ல முன்மாதிரி வைக்கும் ஒர் இளைஞன், “வாலண்டீன் தினத்தின் ஆரம்பம் என்ன?” என்பதன் கீழுள்ள தகவலை உபயோகிப்பதை நடித்துக் காட்டவும். (பக். 181-2; ஆங்கில விழித்தெழு! 1/22 பக். 12) (2) “கொடிகள் மற்றும் தேசீய கீதம் ஆகியவற்றின் சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் குறித்ததில், மெய்க் கிறிஸ்தவர்களின் மனநிலையின்பேரில் எந்த வேதவசனங்கள் விளக்கம் கூறுகின்றன?” என்பதை ஒரு பெற்றோர் தன் பிள்ளையிடம் நியாயமான காரணங்களுடன் எடுத்துக்காட்டச் செய்யுங்கள். (பக். 274-5) வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவுக்கு பிரியமுள்ளவர்களாய் இருப்பதன் மற்றும் நல்மனச்சாட்சியைக் காத்துக்கொள்வதன் அவசியத்தை அழுத்திக் காட்டவும்.
15 நிமி: கேள்விப் பெட்டி. உள்ளூர் தேவைகளுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் விஷயங்களைப் பொருத்தவும்.
பாட்டு 44 (41), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 84 (30)
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரலின் இரண்டாவது சனிக்கிழமை அன்று யாவரும் பத்திரிகை ஊழியத்தில் பங்குகொள்ள உற்சாகப்படுத்தவும். சமீபத்தில் வந்த பத்திரிகைகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளை காட்டவும்.
23 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டு வேதப்படிப்புகள் மூலம் சீஷராக்குங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நேரம் அனுமதிக்குமானால் பாராக்களை வாசியுங்கள். பாராக்கள் 2, 3-ன் பேரில் முதல் சந்திப்பில் எப்படி படிப்பைத் துவங்கலாம் என்பதை நடித்து காட்டவும்.
12 நிமி: “உங்களுக்கு நினைவு இருக்கிறதா?” என்ற டிசம்பர் 15, 1988, ஆங்கில காவற்கோபுர கட்டுரையை சபையார் பங்கெடுத்தலுடன் சிந்திக்கவும். வெளி ஊழியத்துக்கு பிரயோஜமாக இருக்கும் கேள்விகளுக்கு முதல் இடம் கொடுங்கள். (இந்திய மொழிகளில்: பிப்ரவரி 1988, காவற்கோபுரம்: “அறிந்துகொள்ள ஆவலுள்ள ஒரு மனம் உங்களுக்கு இருக்கிறதா?”)
பாட்டு 6 (4), முடிவு ஜெபம்.