நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தோஷத்துடன்
1 இயேசு கிறிஸ்து தம் ஊழியத்தில் பெரும் சந்தோஷம் கண்டார். தம் தகப்பனுடைய சித்தத்தை செய்வது அவருக்கு உணவாயிருந்தது. (யோ. 4:34) அதுப்போன்றே பவுலும் ஊழியத்தில் தன் வேலையிலிருந்து பெரும் சந்தோஷம் பெற்றார். அநேக இன்னல்கள் மற்றும் துன்புறுத்துதல்களை தாங்கள் சகித்திருக்க வேண்டியதின் மத்தியிலும் ஊழியத்தில் அவர்கள் சந்தோஷமாய் இருந்ததன் இரகசியம் என்னவாய் இருந்தது? யெகோவாவுக்கு அவர்கள் செய்த சேவை முழு ஆத்துமாவோடிருந்தது. கடவுள் கொடுத்த நியமிப்புகளில் அவர்கள் கடினமாக வேலை செய்தனர். அவர்களுடைய உழைப்பின் விளைவு சந்தோஷமாய் இருந்தது. (யோ. 13:17; வெளி. 14:13) நீங்கள் யெகோவாவை சேவிக்கையில் எவ்வாறு ஊழியத்தில் உங்கள் சந்தோஷத்தை அதிகரிக்கலாம்?
ஜனங்களுக்கு உதவிசெய்யும் ரீதியில் சிந்தியுங்கள்
2 இயேசு கிறிஸ்துவும் பவுலும் மிகச் சிறந்த போதகர்களாயிருந்தனர். அவர்கள் செவிகொடுத்து கேட்டவர்களின் இருதயங்களை எட்டுவதை குறிகோளாக கொண்டனர். அநேகர் பிரதிபலிக்கவில்லை, ஆனால் அப்படி பிரதிபலித்தவர்கள் சந்தோஷத்திற்கு உண்மையான காரணமாயிருந்தனர். (பிலி. 4:1; லூக்கா 15:7-ஐ ஒப்பிடவும்.) ஆம், யெகோவாவைப் பற்றி கற்றறிய ஜனங்களுக்கு உதவுவதும், சத்தியத்துக்காக அவர்கள் ஒரு நிலைநிற்கையை எடுப்பதைக் காண்பதும் நம்மை சந்தோஷமாக்குகிறது. முதல் நூற்றாண்டில், “புறஜாதியார் மனந்திரும்பின செய்தி”, “சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குவதற்கு” ஒரு காரணமாயிருந்தது.—அப். 15:3.
3 நீங்கள் அறிந்திருப்பவற்றை மற்றவர்களோடு திறமையுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்களும் இந்தச் சந்தோஷத்தை அனுபவிக்கலாம். நாம் சத்தியத்தை மற்றவர்களுக்கு கற்பிக்கையில், யெகோவாவின் அமைப்பு நமக்கு உதவுவதற்கு மிகச் சிறந்த கருவிகளை ஏற்பாடு செய்திருக்கிறது. உதாரணமாக, நம் ராஜ்ய ஊழியம் பிரதியில் காணப்படும் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் நமக்கு இருக்கிறது. நியாயங்கள் புத்தகமும்கூட இருக்கிறது, ஜனங்கள் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு பதில்களும், அநேக கவர்ச்சியான முன்னுரைகளையும் அது கொண்டிருக்கிறது. ஊழியத்துக்காக நீங்கள் தயாரிக்கையில், நம் ராஜ்ய ஊழியம் மற்றும் நியாயங்கள் புத்தகத்திலிருந்து வரும் ஆலோசனைகளை உங்கள் பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு உதவி செய்ய எவ்வாறு நீங்கள் உபயோகிக்கலாம் என்பதன் அடிப்படையில் சிந்தியுங்கள். அவர்களோடு நல்ல சம்பாஷணைகளை ஆரம்பிப்பதற்கு நன்கு தயாரிப்பதன் மூலம் இரட்சிப்பின் பாதைக்குச் செல்ல ஜனங்களுக்கு உதவ கடினமாக வேலை செய்யுங்கள். அவைகள் பலனளிக்கும் பைபிள் படிப்புகளுக்கும், நம் சேவையில் கூடுதலான சந்தோஷத்துக்கும் வழிநடத்தும்.—யாக். 1:25.
ஓர் உடன்பாடான மனநிலை
4 நீங்கள் ஒரு பிரஸ்தாபியாகவோ அல்லது பயனியராகவோ சேவை செய்தாலும், ஊழியத்தின் நோக்கத்தை மனதில் வையுங்கள். (மத். 24:14; 28:19, 20) நற்செய்தியை ஒரு சாட்சியாகப் பிரசங்கிப்பது கடவுளிடமிருந்து வந்த ஒரு நியமிப்பாகும். அது ஒரு சிலாக்கியம், யெகோவா தம்முடைய ஊழியர்களிடமிருந்து என்ன கேட்கிறாரோ அது பாரமானது அல்ல என்பதை நாம் மதித்துணர வேண்டும். (1 யோ. 5:3) அவருடைய சேவையை அவருடைய ஜனங்கள் அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதன் விளைவாக, சிலர் பிரசங்க வேலைக்கு தகுந்த விதமாய் பிரதிபலிக்காவிட்டாலும், நீங்கள் ஊழியத்தில் அதிக சந்தோஷத்தை கொண்டிருக்கலாம். இது ஏன் அப்படி இருக்கிறது?
5 இயேசுவின் சீஷர்கள் தங்கள் ஊழியத்தில் பெரும் மகிழ்ச்சியைக் கண்டனர், சந்தோஷத்துக்கு முக்கிய காரணம் என்னவாயிருக்க வேண்டும் என்பதை அவர் அவர்களுக்கு விளக்கினார். (லூக். 10:17-20) பூமிக்குரிய நம்பிக்கைகளை உடைய “திரள் கூட்டத்”தாரும்கூட களிகூருவதற்கு எல்லாக் காரணமும் உண்டு. (வெளி. 7:9, 10) உங்கள் நம்பிக்கை பரலோகத்துக்குரியதாக இருந்தாலும் அல்லது பூமிக்குரியதாக இருந்தாலும், நீங்கள் கடவுளுடைய சித்தத்தை செய்கிறீர்கள் என்ற உண்மை உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கவேண்டும், ஏனென்றால் “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது.” (1 கொரி. 15:58) யெகோவா ‘தமது நாமத்திற்காக நீங்கள் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் அநீதியுள்ளவரல்லவே.’ (எபி. 6:10) யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவிப்பது, அவரில் அன்பு கூருகிறவர்களுக்கு சந்தோஷத்தின் ஓர் ஊற்றுமூலமாயிருக்கிறது.—சங். 40:8.
6 ஒரு கிறிஸ்தவன் கடவுளுக்கு தான் செய்யும் சேவையை அனுபவித்து மகிழ வேண்டும். மெய்யான பக்தியின் மிகச் சிறிய செயலையும் யெகோவா போற்றுகிறார் என்ற உறுதியுடன் ஊழியத்தில் தொடர்ந்து சந்தோஷத்தை காணுங்கள். (மாற்கு 12:41–44-ஐ ஒப்பிடுக.) நாம் அனைவரும் தொடர்ந்து ‘நம் ஊழியத்தை மேன்மைப்படுத்தி,’ அது கொண்டுவரும் சந்தோஷத்தை அனுபவிப்போமாக.—ரோ. 11:13.