ஏப்ரல் மாதத்தில் தப்பிப்பிழைத்த ல்புத்தகத்தை அளியுங்கள்
1 இன்று இலட்சக்கணக்கான ஆட்கள் நல்ல காரணத்துடனேயே தப்பிப்பிழைத்தலைக் குறித்து அக்கறையுள்ளவர்களாக இருக்கின்றனர். உணவு குறைபாடுகளும், தூய்மைக்கேடும், வன்முறைகளும் மற்றும் பல உயிரை அச்சுறுத்தும் சூழ்நிலைமைகள் எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து மக்கள் பயமடையும்படி செய்திருக்கிறது. என்றபோதிலும் தப்பிப்பிழைத்தலைக் குறித்து அக்கறை காண்பிக்கும் பெரும்பாலான மக்கள் அதைக் காட்டிலும் அதிகப்படியான அபாயத்தைக் குறித்து கொஞ்சமேனும் அல்லது ஒன்றுமே அறியாதவர்களாயிருக்கின்றனர். இயேசு அதை இந்த “உலகமுண்டானது முதல் இதுவரையிலும் சம்பவித்திராத மிகுந்த உபத்திரவம்” என்றழைத்தார். (மத். 24:21) தப்பிப்பிழைத்தல் என்ற இக்காரியத்தைக் காட்டிலும் மனிதவர்க்கம் எதிர்ப்படக்கூடிய மிக அவசரமான கேள்வி வேறு ஏதாகிலும் இருக்கக்கூடுமா?
2 ஒரு புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் என்ற நமது புத்தகத்தைக் காட்டிலும் வேறு எது அந்த மிக அவசரமான கேள்விக்குக் காலத்துக்கேற்ற விடையளிப்பதாக இருக்கக்கூடும்? “ராஜ்ய அதிகரிப்பு” மாவட்ட மாநாட்டிலே அது வெளியிடப்படுவதை அறிவித்த பிறகு பேச்சாளர் சொன்னதாவது: “தப்பிப்பிழைத்தல் என்பது நமது காலத்தில் அதிக அக்கறைக்குரிய ஒன்றாக ஆகிவிட்டது. ஆனால் மனிதவர்க்கத்தின் முன் நிற்பதோ ஓர் அணுசக்தி போரைக் காட்டிலும் மிக அதிக அச்சந்தரும் ஒன்றாகும். இது சிருஷ்டிகரோடே கணக்கு தீர்த்தலாக இருக்கிறது. வியப்பூட்டும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் அதில் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்று காட்டுகிறது. . . . அவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பதற்கு உதவிசெய்யவே இந்தப் புத்தகம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.”
மிக அவசர தேவையைப் பூர்த்திசெய்யும் உதவி
3 மக்களின் மிக அவசரமான தேவையைப் பூர்த்திசெய்வதற்கு தப்பிப்பிழைத்தலின் பேரில் ஒரு புத்தகத்தை பிரசுரிப்பதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. அவர்கள் அதைக் குறித்து கேள்விப்பட வேண்டும், அதை வாங்க வேண்டும், வாசித்து புரிந்துகொள்ளவேண்டும். அதில் அடங்கியிருக்கும் இன்றியமையாத காரியங்களின் பேரில் செயல்பட வேண்டும். இதை மனதில் கொண்டவராகவே அந்த மாவட்ட மாநாடு பேச்சாளர் பின்வருமாறு சொன்னார்: “இந்தச் சூழ்நிலைமை தப்பிப்பிழைக்க போகிற அனைவருடைய பங்கிலும் அவசரமான நடவடிக்கையைத் தேவைப்படுத்துகிறது. . . . இந்தப் பிரசுரம் நமது வெளி ஊழிய உபயோகத்திற்கும் அதோடுகூட நமது சொந்த படிப்பிற்காகவும் திட்டமிட்டமைக்கப்பட்டிருக்கிறது.” ஆம், சகோதரர்களே, ‘பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் அவர்கள் எப்படிக் கேள்விப்படுவார்கள்?’—ரோ. 10:14.
4 ஓர் உயிரைக் காப்பாற்றுவதைக் காட்டிலும் அதிக கிளர்ச்சியூட்டக்கூடிய அதிக திருப்தியளிக்கக்கூடிய வேறு ஏதாவதொரு காரியத்தை நீங்கள் யோசிக்கக்கூடுமா? ஆனால் மற்றவரின் உயிரைக் காப்பாற்றுகையில் உங்களுடைய சொந்த உயிரையும் நீங்கள் காப்பாற்றிக்கொள்ளக்கூடுமானால் அது எப்படி இருக்கும்? இது மிக அதிக பயன்மிகுந்த ஒன்றாக இருக்கும்.—1 தீமோ. 4:16.
5 இந்தப் புதிய புத்தகத்தின் உதவியோடு மக்கள் சத்தியத்தை கற்றுக்கொள்ளுவதன் விளைவாக எத்தனை உயிர்கள் பாதுகாக்கப்படும்? அதை விநியோகிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சி மற்றும் பிரசங்க வேலையில் நமது திறம்பட்ட தன்மை ஆகியவற்றின் பேரிலேயே இந்தக் கேள்விக்கான விடை பெருமளவுக்கு சார்ந்திருக்கிறது. இதை நாம் நமது பிரசுர அளிப்பாக ஏப்ரல் மாதத்தின்போது ரூ10-க்கு அளிப்போம். நம்முடைய அயலகத்தாரோடு, உறவினரோடு, உடன் வேலையாட்களோடு, பள்ளித் தோழரோடு அல்லது மற்றவர்களோடு இந்தப் புத்தகத்தை பகிர்ந்துகொள்வதற்கு எடுக்கப்படும் அந்த முயற்சி ஒருவேளை அநேக காரியங்களின் பேரில் சார்ந்திருக்கக்கூடும், அதாவது உடல்நலம், வயது, பலம் மற்றும் குடும்ப உத்தரவாதங்கள். ஆனால் பெருமளவு நாம் மற்றவர்பேரில் கொண்டுள்ள அன்பின் பேரிலும் அதோடு அவர்களுடைய தப்பிப்பிழைத்தலைக் குறித்து நாம் கொண்டுள்ள அவசர உணர்ச்சியின் பேரிலும் அது சார்ந்திருக்கும்.—2 தீமோ. 4:2a.
6 அளிக்கப்படும் புத்தகத்தை நாம் எவ்வாறு நன்றாக அறிந்திருக்கிறோமோ அதன் பேரிலேயே நம்முடைய ஊழியத்தின் திறம்பட்ட தன்மை சார்ந்திருக்கிறது. இதற்குள்ளாக நாம் அதை வாசிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கக்கூடும். எடுத்துப்பேசுவதற்கான குறிப்புகளுக்கு, மேற்கோள்களுக்கு, படச்சித்தரிப்புகளுக்கு நாம் கவனம் செலுத்தினோமா? பக்கம் 27-ல், 1914-ஐ ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டென காட்டும் பட்டியலும் அத்துடன் பக்கம் 29-ல் அந்த ஆண்டை சரித்திராசிரியர்கள் எவ்வாறு கருதுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் மேற்கோள்களும் தப்பிப்பிழைத்தலைக் குறித்து ஆர்வமுள்ள ஆட்களுக்கு மனதைக் கவரும் ஒன்றாக இருக்கக்கூடும். பக்கம் 95-ஐ கலந்தாராய்வதன் மூலம் தப்பிப்பிழைத்தலுக்குரிய அந்த அடையாளக்குறியை பெற்றுகொள்வதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதற்கான எதிர்பார்ப்பைத் தூண்டி எழுப்பலாம்.—எசேக்கியேல் 9:4, 6-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.
7 அதிகாரங்களின் தலைப்புகள் சிந்தனையுள்ள ஆட்களின் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பும். அதாவது, “இந்தக் கிரக பூமிக்கு என்ன ஏற்படும்?”, “இந்தத் தற்போதைய ஒழுங்குமுறை எவ்வளவு காலம் நீடிக்கும்?”, “பேரழிவை எதிர்நோக்கியவர்களாக ஞானமாய் செயல்படுங்கள்”, “சரிந்துவரும் கணிப்பு அதன் பூஜ்யத்தை எட்டிக்கொண்டிருக்கிறது!” இவைகளே அந்தப் புத்தகத்தில் கையாளப்படும் கருத்தைக் கவரும் பொருளடக்கங்களாகும். வீட்டுக்காரருடைய கைகளில் அதைக் கொடுக்க முயன்று எந்தத் தலைப்பு அவருக்கு அதிக ஆர்வமுள்ளதாக இருக்கிறதென்று கேளுங்கள். மற்ற பிரசுரங்களில் இந்த முறையைக் கையாண்டவர்கள் அடிக்கடி நல்ல பலன்களை அடைந்திருக்கின்றனர்.
தயங்க வேண்டாம்
8 மாநாட்டு பேச்சாளர் பின்வரும் இறுதி குறிப்பைச் சொன்னபோது நாம் அனைவரும் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தோம். அவர் சொன்னதாவது: “மகிழ்ச்சியுள்ள சாட்சிகளின் வளர்ந்துவரும் கூட்டத்தாரின் பாகமாக இன்னுமதிகமான ஆட்கள் ஆவதற்கு உதவிசெய்யும் வாய்ப்பை இன்னும் காலமிருக்கும்போதே நாம் அனைவரும் அனுகூலப்படுத்திக் கொள்வோமாக. . . . அவர் இந்தத் துன்மார்க்க உலகத்தை அழிக்கும்போது கடவுளுடைய தகுதியற்ற தயவினால் அவருடைய மகத்தான “புதிய பூமி”க்குள் உயிர்த்தப்பிப் பிழைக்கும் ஆட்கள் மத்தியில் நாமும் ஒருவராக இருப்போமாக!” ஏப்ரல் மாதத்தின்போது தப்பிப்பிழைத்தல் புத்தகத்தை விநியோகிப்பதில் முழு பங்கைக் கொண்டிருப்பதன் மூலம் இன்னும் அநேகருக்கு உதவிசெய்யும் இந்த வாய்ப்பை நாம் அனுகூலப்படுத்திக்கொள்வோமாக.