பொருளடக்கம்
ஜனவரி 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania. எல்லா உரிமையும் பிரசுரிப்போருக்கே உரியது.
படிப்பு இதழ்
பிப்ரவரி 25, 2013–மார்ச் 3, 2013
தைரியமாயிருங்கள், யெகோவா உங்களோடு இருக்கிறார்!
மார்ச் 4-10, 2013
யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
மார்ச் 11-17, 2013
யெகோவாவிடம் நெருங்கிக்கொண்டே இருங்கள்
மார்ச் 18-24, 2013
கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாமல் சேவை செய்யுங்கள்
மார்ச் 25-31, 2013
படிப்புக் கட்டுரைகள்
▪ தைரியமாயிருங்கள், யெகோவா உங்களோடு இருக்கிறார்!
அநேக பைபிள் கதாபாத்திரங்கள் விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் முன்மாதிரிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலருடைய அனுபவங்களைச் சிந்தித்துப் பார்க்கும்போது, விசுவாசத்தில் நாம் பலப்படுவோம், யெகோவாவைத் தைரியமாகச் சேவிக்கத் தூண்டப்படுவோம். 2013-க்கான வருடாந்தர வசனத்தை இந்தக் கட்டுரை சிறப்பித்துக் காட்டுகிறது.
▪ யெகோவாவிடமிருந்து உங்களைத் தூர விலக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
▪ யெகோவாவிடம் நெருங்கிக்கொண்டே இருங்கள்
வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை, உதாரணத்திற்கு நம் பெற்றோரை, கூடப்பிறந்தவர்களை, பிறந்த ஊரை, நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால், யெகோவாவோடு நெருங்கியிருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். யெகோவாவிடமிருந்து நம்மைத் தூரமாக விலக்கிவிட எந்த ஏழு அம்சங்களை நாம் அனுமதிக்கக் கூடாது என்பதை இந்தக் கட்டுரைகள் சிந்திக்கின்றன.
▪ கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாமல் சேவை செய்யுங்கள்
நாம் எல்லோருமே ஏதோவொரு சமயத்தில், “ஐயோ! அப்படிச் செய்வதற்குப் பதிலாக, இப்படிச் செய்திருக்கலாமே” என்று யோசித்திருப்போம். ஆனால், சதா அவ்வாறு வருத்தப்படுவது கடவுளுடைய சேவையை நாம் முழுமையாய்ச் செய்யாதபடி நம்மை முடக்கிப்போட்டுவிடும். எனவே, இந்தக் கட்டுரையில், கடந்த கால தவறுகளை நினைத்து வருத்தப்படாமல் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வது எப்படியென்று அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்வோம்.
▪ கிறிஸ்தவ மூப்பர்கள்—‘நம் சந்தோஷத்திற்குச் சக வேலையாட்கள்’
கொரிந்தியருக்கு பவுல் எழுதிய இரண்டாம் கடிதத்தில், தானும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களும் கொரிந்தியரின் ‘சந்தோஷத்திற்காக அவர்களுடைய சக வேலையாட்களாய் இருப்பதாக’ விளக்கினார். (2 கொ. 1:24) பவுலின் இந்த வார்த்தைகளிலிருந்து இன்று மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? சபையின் சந்தோஷத்தை அதிகரிக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இதர கட்டுரைகள்
3 மனமுவந்த சேவை மகிழ்ச்சி தரும் வேலை—நார்வேயில்
அட்டை: வேலையிலிருந்து ஓய்வுபெற்ற ஒரு தம்பதி, கேம்ப் பெரின் என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டின் வராண்டாவில் பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். இந்தத் தம்பதியைப் போல் வேறு நாடுகளில் வசித்துவந்த ஹெய்டியரில் சிலர், தேவை அதிகமுள்ள ஹெய்டிக்கே திரும்பிவந்து சேவை செய்கிறார்கள்
ஹெய்டி
பிரஸ்தாபி—மக்கள்தொகை விகிதம்
1:557
பிரஸ்தாபிகள்
17,954
பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள்
35,735